இரவு முடிந்திட்ட பொழுதிலும்
என் கனவுகள் முடிந்திடவில்லை…
பகல் தொடங்கிவிட்டபொழுதிலும்
என் இமைகள் உன்னை விலக்கவில்லை…
நிதர்சனமும், நிகழ்காலமும்
சுட்டெரிக்கும் வெயிலாய்
உணர்த்தினாலும் மனம் மட்டும்
ஏனோ இன்னும் பிடிவாதமாய்
உன்னிடமே உன்னைச் சுற்றியே
தவழ்ந்து விளையாடுகிறது பொம்மையாய்…
எத்தனையோ பொழுதுகள் என்னைக் கடந்து
சென்றிருக்கிறாய் நீ…
அத்தனை நொடியிலும் நீ என்னைக் காணவில்லையே
என்ற ஆதங்கம் தான் எழுந்திடும் என்னுள்…
ஆனால் நின்று நிதானமாக யோசித்தபொழுது தான்
கிட்டியது எனக்கும் ஓர் விடை…
என்னைப் பார்க்கக்கூடாதென்று நினைப்பவன்,
ஏன் நான் இருக்கும் இடமே வரவேண்டும்??…
ஏன் என் கண்பார்வை படும் இடத்திலேயே
உலாவும் வர வேண்டும்???…
பேசாமல் நீ மௌனம் கொண்டிருக்கலாம்…
ஏன் நானும் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன்..
அதற்காக நீ என் மனதில் இல்லை என்றாகிடுமா?...
ஆகாதல்லவா?...
எனில், உன் மனதிலும் நான் இருப்பதற்கான
ஓர் வழியும் தென்படுகிறதல்லவா?...
ஆம்…
நெடுநாள் எனக்கு உறுத்தலாக இருந்த
உன் பாராமுகமும் ஓர் விடைதான் என
நான் அறிந்துகொண்டேனடா கண்ணா இன்று…
ஹ்ம்ம்…
இருந்தும் அதனை உறுதி செய்ய மனமானது விழைகிறதேடா…
எப்பொழுது கிட்டிடும் அவ்வாய்ப்பு என நானும்
காத்திருக்கையில் என் கைசேர்ந்திட்டதோ அந்நாளும்???!!!!!
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
அந்த நாள் எந்த நாளென்று அடுத்தவாரக் கவிதையில் சொல்கிறேன்…
மீண்டும் அடுத்தவாரக் கவிதைத் தொடரில் சந்திக்கலாம்… நன்றி…
பூ மலரும்…
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
You can also check the stories by genre here.
Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here
M | Tu | W | Th | F | Sa | Su | |
---|---|---|---|---|---|---|---|
Mor AN Eve |
11 EVUT PVOVN NiNi |
12 MINN ILU MAMN |
13 VD EMPM KIEN |
14 VMKK KK KaKa |
15 Sush UVME Enn |
16 Siva NKU Tha |
17 KI VTKS EK |
Mor AN Eve |
18 EVUT - NiNi |
19 MMSV ILU MAMN |
20 GM EMPM KIEN |
21 ISAK KK KaKa |
22 EU UMIN EYPI |
23 Siva NKU Tha |
24 KI VTKS EK |
* Change in schedule / New series
* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in