(Reading time: 4 - 7 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 63 - என் ஆசைக்கள்வனே….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

அட கள்வா…

அடப்பாவி என்று சொல்லக்கூட மனம் வரவில்லையேடா…

கள்வனே…

என்ன வேலை எல்லாம் செய்திருக்கிறாய் நீ

எனக்குத் தெரியாமல்…

சேட்டை எத்தனை செய்திருக்கிறாய் என்று

இன்று தானே தெரிகிறது எனக்கும்…

நான் காணும் பொழுதெல்லாம்

காணாதவாறு சென்றதென்ன?...

இன்று அதற்கான காரணம் நான்

உணருகையில் உள்ளம் உவகை கொள்கிறதடா…

அது கொண்ட அவ்வுவகையினை

விவரித்திட எனக்கு வார்த்தைகள் கிட்டவில்லையடா…

சரியான கள்வன் தான் நீ…

நீ பார்ப்பதை நான் கண்டுகொள்ள

நீயோ அப்படி ஓர் சம்பவமே நடவாதது போல்

உன் நடிப்புத் திறமையினை வெளிப்படுத்திட

ஹ்ம்ம்… பரவாயில்லையே… சாருக்கு இதெல்லாம் கூட தெரியுதே…

எண்ணங்கள் புருவத்தை உயர்த்த வைத்திட,

நீ நான் பார்க்கிறேனா என்று பார்த்துவிட்டு மீண்டும்

கைபேசியில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தாய்…

அட லூசுப்பையா…

ஹ்ம்ம்… பாருடா… நீ தானா இது?... ஹ்ம்ம்…

நீ ஆடிடும் கண்ணாமூச்சியினை ரசித்துக்கொண்டிருந்தேன்

உள்ளுக்குள்ளேயே நான்…

நான் உன்னையே கவனிப்பதை உணர்ந்து

அங்கிருந்து மெல்ல நழுவிச் சென்றாய் நீ

நான் பார்த்திடா வண்ணம்…

மனதினுள் ரசித்தவள் நிமிர்ந்து பார்த்திடுகையில்

உன்னைக் காணவில்லை…

மனமானது பதைபதைக்க, எங்கே சென்றிருக்கக்கூடும்?...

எண்ணங்களின் மத்தியில் உழன்றவளாய் நானிருக்கையில்

என் கைப்பேசி சிணுங்கியது…

“ஆ…. சொல்லுங்க அப்பா…” கைபேசியினை

காதினில் வைத்தவாறு நான் பேசிட,

“பாட்டு சத்தம் கேட்குது… வெளிய போய் பேசிட்டு வா…”

அம்மாவும் கூறிட, சரி என்றபடியே வெளியே சென்று

பேசிவிட்டு திரும்பி கோவிலுக்குள் நுழைகையில்

ஓர் முணுமுணுப்பு எட்டியது என் செவியினை…

“யாரது?...” மனதினுள் எழுந்திட்ட கேள்வியுடன்

நான் ஓரடி கோவிலுக்குள் எடுத்து வைக்க முயலுகையில்,

“நான் பார்த்ததை பார்த்துட்டாடா மாப்பிள்ளை…”

எங்கேயோ கேட்ட குரலாய் இருக்கிறதே

என்ற சிந்தனை முடிந்திடக்கூட இல்லை…

காதில் விழுந்த வார்த்தைகளில்

அது நீதான் என்று அறிந்து கொண்டேன் நான்…

“அப்புறம் என்ன ஆச்சா?... நீ ஏன் கேட்கமாட்ட?...

ஒருவழியா உங்கிட்ட பேசுற மாதிரி சமாளிச்சு

வெளியே வந்துட்டேன்…”

தெளிவாக நீ உரைத்திட,

என் இதழ் மட்டுமல்ல, அகமும் மலர்ந்து

விகசித்து போனதடா அன்பே…

நான் தேடிய தேடல்களுக்கெல்லாம் விடையாய்

இன்று உன் வார்த்தைகள் இருந்திட

நிறைவுடன் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்திட்டேன் நான்…

பேசி முடித்து எதுவுமே தெரியாத குழந்தை போல்

நீயும் வந்து அமர்ந்திட, பூத்திட்ட புன்னகையினை மறைத்தேன் நான்…

என்னைப் பார்க்க மாட்டாராம்…

எங்கேயோ பார்ப்பது போல் பாசாங்கு வேறு இதில்…

அடேயப்பா…

என்ன ஒரு நாடகம்?...

இருக்கட்டும்….

உன்னைத் தேடி அலைகிற விழிகள்

உன்னோடு சங்கமிக்க நினைக்கும் இமைகளை

நீ கண்டுகொள்ளாது இருந்திட்ட மாயம் என்ன?..

அதன் பின் அதனை யாருக்கும் தெரியாமல்

நின்று பார்ப்பதும் தான் என்ன?...

இன்றல்லவா தெரிகிறது…

உன் ஒட்டு மொத்தப்பார்வையும்

என் மீது நான் காணாத வேளை தனில்

இருந்திருக்கிறது என்று…

என்ன ஒரு குறும்புத்தனம்?... உனக்கு…

இப்படி எல்லாம் கூட நீ இருந்திடுவாயா?...

யோசனைங்களுக்கு அப்பாற்பட்டவனாய்

உன் குழந்தைத்தனமான செய்கைகள் இருந்திட

என்னையும் மீறி உதடுகள் உரைத்தது

“என் ஆசைக்கள்வனே !!!…” என்று…

 

ஹாய் ப்ரெண்ட்ஸ்…

நிகழ்வுகள் பிடித்திருந்ததா?..

அடுத்து என்ன நடந்திருக்கும்?... யூகித்துக்கொண்டிருங்கள்…

மீண்டும் அடுத்தவாரக் கவிதையில் சந்திக்கலாம்… நன்றி…

 

பூ மலரும்

Ilam poovai nenjil 62

Ilam poovai nenjil 64

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.