Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 64 - ஆசை ஆசையாய்….!!!! - மீரா ராம் - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 64 - ஆசை ஆசையாய்….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

ஆசை…

உன்னைப் பார்த்த நாள் முதலே…

எனக்குள் விழுந்தது முதல் ஆசை விதை…

அது வளர்ந்து தளிர்விட்டு படர்கையில்

எனக்குள் எழுந்தது இன்பமெனும் ஆசை செடி…

பின் உயரம் கொண்டு வான்நோக்கி செல்ல

என்னுள் நீண்டது எண்ணமெனும் ஆசை வேர்…

நீரினை உறிஞ்சி உயிர் வாழ

என்னுள் உலவியது மூச்செனும் ஆசை சுவாசம்…

பறவைகள் கூக்குரல் கேட்டு சிலிர்த்திட

என்னுள் ஒலித்தது குரலாய் ஆசை ரீங்காரம்…

தென்றல் காற்றில் தலையசைத்திட

என்னுள் தொலைந்தது மாயமாய் ஆசை மனம்…

பருவம் வந்து மொட்டு உண்டாக

என்னுள் உதித்தது காதலாய் ஆசை நாணம்…

மொட்டவிழ்ந்து வாசம் பரப்பும் மலராகிட

என்னுள் பரவியது கிறக்கமாய் ஆசை மணம்…

தேன் ஊறும் பூவாய், வண்டும் மொய்த்திட

என்னுள் வந்தது பெண்ணாய் ஆசை காதல்…

பெரிய நிழல் தந்து மனங்குளிர

என்னுள் படர்ந்தது கிளையாய் ஆசை விருட்சம்…

விதையாய் விழுந்து

தளிராய் துளிர்விட்டு

இலையாய் பிறந்து

செடியாய் எழுந்து

முகையாய் அவிழ்ந்து

மலராய் மலர்ந்து

மணமாய் மணந்து

நிழலாய் தொடர்ந்து

விருட்சமானாள் பூமிதனில் தன் வேரை படரவிட்டு

மரமங்கை…

அதுபோலே தன்னவன் மேல் காதல் கொண்டு

விதை போல் விழுந்த பார்வை விதையினை

உயிர் கொண்ட விருட்சமாக்கினாள் இம்மங்கையும்…

ஆசைக்கு ஏது அணை…

நீ என் மேல் காதல் கொண்டிருக்கிறாயா

என அறியாத போதே உன் மேல் உள்ள பற்று குறைந்திடவில்லை எனக்கு…

இன்று உன் மனதில் நானும்,

உன் பார்வை வட்டத்தில் இவளும்

இருப்பதை அறிந்த பின்னரும் எப்படியடா சும்மா இருப்பேன்?...

மனமானது குதிக்கிறது…

உள்ளமானது ஊஞ்சலாடுகிறது…

எண்ணமானது விண்ணைத் தாண்டுகிறது…

ஆம்…

இருக்கிறதடா இன்னும் எத்தனையோ என்னோடு…

உன்னிடம் தெரிவிக்கப்போகும் நாளுக்காய் காத்திருக்கிறது…

ஆசை ஆசையாய்… 

பூ மலரும்

Ilam poovai nenjil 63

Ilam poovai nenjil 65

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Meera

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
  • -NA-
Add comment

Comments  
# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 64 - ஆசை ஆசையாய்….!!!! - மீரா ராம்madhumathi9 2018-03-13 05:32
:clap: Super lines (y) :GL:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Nanthini's Avatar
Nanthini replied the topic: #1 19 Jun 2018 07:24
இருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை

சந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…

ஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்

மனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…

**********************************************************

கவிதையை படிக்கத் தவறாதீர்கள்.

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-74
Nanthini's Avatar
Nanthini replied the topic: #2 12 Jun 2018 13:12
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-73
Nanthini's Avatar
Nanthini replied the topic: #3 05 Jun 2018 07:12
உள்ளத்தில் காதல் வந்துவிட்டால்

விழிகளில் தூக்கம் ஏது?...

எங்கோ யாரோ சொல்லி நியாபகம்…

காற்றில் கலந்து வந்திட்டது போல்

செவியில் கேட்டது அந்த அசரீரி…

***************************************

கவிதையை படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-72
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 29 May 2018 04:15
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-71
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 01 May 2018 18:29
கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...!!!! - மீரா ராம்

@ www.chillzee.in/poems-link/190-meera-kav...ovai-nenjil-meera-70

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top