(Reading time: 3 - 5 minutes)

அவளின் டைரியில் - மீரா ராம்

32. முடிந்ததா???

ஒரு தலைக்காதல் கை சேரவில்லை எனில்

வாழ்வே முடிந்ததா???

விரும்பிய ஒருவன் தன்னை புறக்கணித்ததால்

அவளின் சந்தோஷமும் முடிந்ததா???

அவனின் கணக்கிடமுடியா மௌனத்தால்

அவளின் இதயத்துடிப்பும் முடிந்ததா???

காற்றைப் போல வந்து மறைந்தவனால்

அவளது சுவாசமும் தான் முடிந்ததா???

கண்கள் பார்த்து காதலித்துப் பிரிந்தவனால்

அவள் கதையும் தான் முடிந்ததா???

முடியவில்லை என்று கடவுள் தீர்மானித்த பின்

சாதாரண மானுடப்பிறவி அவள் முடிவெடுக்க முடியுமா

எல்லாமே முடிந்ததென???...

ஆனால், அவள் முடிவும் எடுத்தாள்…

அவள் தேடி சென்ற வாழ்வு அவளுக்கு கிடைக்கவில்லையெனில்,

அவளைத் தேடி வாழ்வே வராதா?..

இல்லை வரதான் முடியாதா?...

நான் என்னை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் என

அந்த கண்ணனின் காலடியில் தஞ்சம் புகுந்தாள் அவள்…

நீ பார்த்து என் வாழ்க்கையினை தீர்மாணி… என

முழுமனதோடு அந்த கண்ணனிடத்தில் கூறினாள்…

திக்கற்றவருக்கு தெய்வம் தானே துணை…

இங்கே அவளுக்கும் அவளது கண்ணன்தான் துணை…

கண்ணன் கைவிட்டிடுவானா அவளை???... இல்லை…

அவளை ஏற்றுக்கொள்வான் நிறைவுடன்….

அவன், அவளின் வாழ்வில் ஒளி சேர்ப்பான் நிச்சயம்…

அப்படி எனில் அவளின் வாழ்வு முடியவில்லை தானே???

இல்லை முடிந்ததா???...

ஹாய் ப்ரெண்ட்ஸ்… இந்த கவிதை தொடர் இன்றோடு முடிவடைந்தது… மேலே சொன்னது போல் என் கற்பனையான அவளின் வாழ்வு முடிவடைந்ததா இல்லையா என நீங்கள் தான் கூற வேண்டும்…

இந்த தொடர் எழுத ஆரம்பித்த போது எனக்கு கிடைத்த வரவேற்பும், ஊக்கமும் தொடரின் இறுதி வரையில் எனக்கு கொடுத்த தோழிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்… இந்த தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த சில்சீக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்…

அவளின் சோகத்தினை தொடரின் இறுதியில் மாற்றவே தொடர் முழுவதும் அவளை கண்ணீருடன் இருக்க வைத்து விட்டேன்… அதற்கு எனது கோடான கோடி மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன் இங்கே…

இதுவரை வெளிவந்த எனது மற்ற கவிதைகளும் சரி, இந்த அவளின் டைரியில் தொடரில் சொன்ன வார்த்தைகளும் சரி…. அனைத்தும் இந்த அவளின் டைரியில் இருப்பவளுடன் சேர்ந்தது தான்…

சந்தோஷத்தையும், அவன் மீதான அவளின் காதலையும் இந்த தொடரில் எப்படி சொல்ல என்று தெரியாமல் தான், தனியாக அதை தந்தேன் மற்ற கவிதைகளின் பெயரில்…

இப்படியும் ஒரு பெண் இருந்தால், காதலித்தால், ஏங்கினால், துடித்தால், எப்படி இருக்கும் என்ற என் சின்ன யூகம் தான்…  இந்த அவளின் டைரியில் மற்றும் என் பிற கவிதைகள்…. ஹ்ம்ம்…

இது முழுக்க சோகமாக அமைந்துவிட்டதால், மீண்டும் ஒரு புதிய சந்தோஷமான கவிதைத்தொடரில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் விரைவில்…

நன்றி…

Avalin diary'l 31

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.