(Reading time: 2 - 4 minutes)

07. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

காத்திருப்பேனோடா?...!!!…

Ilam poovai nenjil

நெஞ்சில் உன்னை படரவிட்டு

கன்னத்தில் கைவைத்து நானிருக்கையில்

என் காதல் கொடிக்கு தண்ணீர் ஊற்ற

பால் நிலாவும் பொழிய துவங்கிற்று

அந்த மந்தகாச இரவில்….

சந்திர ராஜனில் மனதை செலுத்த ஆரம்பித்தவளின் மீது

குளிர்தென்றலும் உன் ஸ்பரிசமாய் என் மேல் மோத

ஹ்ம்ம்ம் என்ற முணகலுடன் வெட்கம் சூழ

இரு கைகொண்டு நானே என்னை அணைக்கையில்,,

முழுமதியில் உன் மதியை நீ இழப்பாயா

அதுவும் நானிருக்கும்போதே… என கோபம் கொண்டு

சில்லென்ற பனிக்காற்றாய் மீண்டும் எனைத்தீண்டிச் சென்றாயோ,

இப்பூவையின் மதி பறித்து விளையாடும் என் செல்ல ராஜா…

கோபம் மட்டும் வருகிறதா உனக்கு?...

எனில் இத்தனை நேரம் என்னை எண்ணிப்பார்க்கவில்லை தானே….

பேசவேண்டாம்… எனைத் தொட்டு மதிமயக்கவும் வேண்டாம்…

என நான் முகம் சுருக்கிக்கொள்ள, அப்படியே போர்வையாய் மாறி

எனை சுற்றி வளைத்துக்கொண்டது உன் பூங்காற்று தழுவல்…

அதில் சிறிதும் மிச்சம் இல்லாமல் நான் தொலைந்தே போக

மீள வழியில்லாது உன் அணைப்புக்கு கட்டுண்டு நான் நிற்க

நட்சத்திரங்களும் எட்டி எட்டி பார்த்து,

ஓளிபொருந்திய கண்ணை மூடி மூடி திறந்தது வானில்…

அந்த நேரம் சரியாக, பட்டென்று நானும் கண்களைத் திறக்க

கை தானாக மேசையின் மீதிருந்த செல்போனை எடுத்தது…

விரல்கள் தானாய் அதில் வலம்வர ஆரம்பிக்க,

பச் என்ற சத்தத்துடன் என் உதடுகள் ஒட்டி சுருங்கிக்கொண்டது…

பின் ஜன்னல் கம்பிகளில் முகத்தினை புதைத்து இமை மூடி நானிருக்க,

திரைச்சீலையாய் மாறி என் கண்களை வருடிக்கொடுத்தாய் நீ…

இதற்கெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை… என்ற கடுப்புடன்

முறைக்க நினைத்தவள் சிரிக்கத்தான் செய்தேன் என்னையும் மறந்து…

பின்னே என்ன செய்வது?...

அனைத்துமே நீயாக நினைத்து உருகி கரைந்து போகிறேனே…

வேண்டாமடா என் கண்ணா…

என்னை தவிக்க வைத்து பார்ப்பதில் என்ன சுகமடா கண்டுகொண்டாய்?…

காக்க வைத்து நான் தவித்திருப்பதை ரசித்துவிட்டு

காற்றுக்கும் இடைவெளி கொடுக்காது,

எனை அள்ளிக்கொள்ளும் எண்ணமா?...

ஹ்ம்ம்… ஹூம்… நான் தாங்கமாடேனடா. என்ற

சிணுங்கலும் என்னை மீறி வர,

தொய்ந்து தான் போனேன் நான்…

சரி இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருக்கலாம் என நினைத்து

மனதை தேற்றிக்கொண்டாலும்,

மீண்டும் என் இதயத்தில்

நீங்காத ரீங்கார கூச்சல் சத்தமாய் ஒலிக்கிறது…

காத்திருப்பேனோடா!!!… என் ராஜா….!!! என….

பூ மலரும்……….

Ilam poovai nenjil 06

Ilam poovai nenjil 08

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.