(Reading time: 3 - 5 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 26 - பித்தாகி மையல் கொள்கிறேனோ???….!!!… - மீரா ராம்

Ilam poovai nenjil

சொல்ல முடியாத வார்த்தைகளிலும்

உடைக்க முடியாத மௌங்களிலும்

என் விழியின் ஓரம் ஒதுங்கும் ஒரு துளி நீர் போதும்

உன் மீதான என் காதலை உன்னிடத்தில் சொல்லிட…

துக்கத்திலும், துயரத்திலும் தான் அழுகை வருமா?...

கண்ணீர் அணை கண்களை கடக்குமா?...

நீ தந்த அன்பினாலும் என் கண்ணீர் வெள்ளம்

தனது கரையைக்கடந்து உடைந்தும் போனது…

ஆயிரம் வலிகள் நெஞ்சோடு இருப்பினும்

உன் குரல் ஒன்று போதும் அதனை அடியோடு அகற்றிட…

மாயமாய் இருக்கிறதடா…

என்னுள் புகுந்து எத்தகைய மாற்றமெல்லாம் கொடுத்திட்டாய் நீ….

நினைக்கவும் வியப்பாய் இருக்கிறதடா எனக்கு…

அணுதினமும் உன்னில் கரைந்து கொள்ள விழைகிறேன்… - ஆம்

காலம் முழுக்க உன் கைக்சிறையில் வாழ எண்ணுகிறேன்…

உன்னுடனே என் இறுதி சுவாசம் வரையிலும் நான் இருக்க நினைக்கிறேன்….

என் கூந்தலில் நான் சூடிக்கொண்ட பூவிற்கு வாசம் உண்டா?... அறியேன்… - ஆனால்

என் மனக்கூந்தலில் நீ சூடிவிட்ட காதல்பூ நித்தம் வாசம் பரப்பி

என்னை அடியோடு கொல்லுகிறதடா கண்ணா....

ஏதோ ஒரு நேரத்தில் நான் முகம் தூக்கி வைத்துக்கொண்டாலும்

“சும்மா கிண்டல் தான் பண்ணினேன்… அதுக்கு கோபமா?...

அப்படியென்றாலும் நீ தானே பேசாமல் போனது… நானா போனேன்?...

எப்பவும் இப்படித்தான் செய்கிறாய்…” என செல்லக்கோபமோ,

சிறு ஊடலோ நீ கொள்ளும்போது என் முகச்சுருக்கம் மறைந்து போய்

என் இதழில் புன்னகை குடிகொள்ளும்…

கூடவே உன்னை அப்படியே வாரி அணைத்து

கொஞ்சிடவும் தோன்றும் மனதை கட்டுப்படுத்திட

நான் படும் பாடு இருக்கே…. சொல்லி மாளாது…

இருந்தாலும் என் தவிப்பை ரசிப்பாய்….

என்னை கெஞ்ச விட்டு வேடிக்கைப் பார்ப்பாய்…

கேட்டால் உன்னை யார் கொஞ்ச சொன்னது என எகிறுவது போல் நடிப்பாய்…

நீ இருக்கிறாயே…. என்று திட்ட வரும் மனது கூட

உன் முகத்தினைப் பார்த்துவிட்டு அனைத்தையும் மறந்துவிடும்…

என்ன?... என ஒரு புருவம் உயர்த்தி நீ கேட்கையில்

அவ்வளவுதான்… நான் மொத்தமாக தொலைந்தே போய்விடுவேன்…

“ஹேய்… லூசு?... என்னடி ஆச்சு?....” என என் சித்தம் கலைத்து

நீயும் கேட்டிடுகையில், “ஹ்ம்ம்ம்… எல்லாமே உன்னாலே ஆச்சு…..”

என நாணத்துடன் சொல்லத்தோன்றிடுமே என் உள்ளத்திற்கும்….

இருந்தும் அதை மறைத்து நான் சிரித்திட,

கள்ளன் நீயும் கண்டுகொள்வாய் அதனை…

ரகசியம் தெரிந்துவிட்ட நெகிழ்வில் நீ மந்தகாசமாய் புன்னகைக்க,

அதை மெய்மறந்து நானும் ரசித்திடுவேனடா என் அழகு செல்லக்கண்ணா…

“நான் லூசா?...” பொய்க்கோபத்துடன் நான் கேட்டிட்டால் போதும்

“ஆமா நீதான் லூசு….” என கொஞ்சும் குரலில், அழகாய் நீயும் சொல்லிடுகையில்

உன்னில் நானும் பித்தாகி, மையல் கொள்கிறேனோ???.... என் ராஜா!!!.....

 

பூ மலரும்……….

Ilam poovai nenjil 25

Ilam poovai nenjil 27

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.