(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 29 - என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது???... - மீரா ராம்

Ilam poovai nenjil

ஓராயிரம் தடவை ஒத்திகை பார்த்து

வார்த்தைகளை தயங்கி தயங்கி கோர்த்து

உன்னிடம் தெரிவிக்க எண்ணியிருந்தும்

ஏனோ என்னால் அது முடியாமல் போயிற்று…

எதிர்பாராத ஒருநாள் மாலை வேளை,

ஒத்திகை எல்லாம் காணாமல் போய்

நிதர்சனமே வென்றது சட்டென சிந்திய தூரல் போல….

ஆம்… என் காதலை உன்னிடத்தில் கூறினேன் நானும் மெல்ல…

காதல் சொன்ன நொடி சிறகடித்து தான் பறந்தேன் வானில்…

காதலிக்கின்ற நொடியும் இறக்கை விரித்து உலவுகிறேன் வானில்…

எனினும் உன்னுடன் பேசாத தருவாயில் சிறகொடிந்த பறவையாகிறேன் நானும்…

வலியும் வேதனையும் ஒருங்கே சேர்ந்த போதும்

அத்தனையையும் போக்கிடுவதற்கு உன் குரல் ஒன்று போதும்

என்று தெரிந்தும் ஏனடா மௌனம் சாதிக்கிறாய்?...

இமைக் கதவுகளைத் தாண்டி கன்னத்தில் வந்து சேர்கிறது என் கண்ணீர்…

இரவுப் பொழுதில் யாருக்கும் தெரியாமல் நான் கொள்ளும் அழுகை…

நான் அரற்றும் உன் பெயர்… உன் மீதான காதல்….

என் தலையணைக்கு அன்றி வேறு ஒருவருக்கும்

தெரிந்ததில்லை இந்த நொடி வரை…

கற்சிலையும் ஈரம் கொள்ளுமாம் காதல் வந்துவிட்டால்…

எனில் இந்த சாதாரண பெண்ணின் நெஞ்சில் குருதியும்,

விழிகளில் கண்ணீரும் வழிந்தோடுவதில்

என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது???... என் ராஜா!!!...

பூ மலரும்……….

Ilam poovai nenjil 28

Ilam poovai nenjil 30

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.