(Reading time: 5 - 9 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 37 - மீரா ராம்

Ilam poovai nenjil

ஆயிரம் முறையேனும்

உன்னிடத்தில் என் காதலை தெரிவிக்க முயற்சித்திருப்பேன்…

ஏனோ அது முடியாமலே போனது….

சொல்ல வேண்டுமென்று அருகில் வருபவள்

பின் பேசாமலே சென்றும் விடுவேன்….

ஆம், அதை நினைத்து பார்க்கையில்,

இந்த நொடியும் என் மனதில்

பயமும், படபடப்பும், பதட்டமும்

கண் பார்க்க முடியா திணறலும்

வார்த்தை வராத மௌனங்களும்

ஏற்பட்டு என்னை படுத்தத்தான் செய்கின்றன….

மூச்சை அழுந்த விட்டுக்கொண்டு,

என்னை நானே சமாளித்துக்கொண்டு,

சொல்லிடு… சொல்லிடு…

என அடிமனதின் உந்துதல் என் உணர்வுகளை மேலே தள்ள

நானோ என் உணர்வுக்கும், என் தடுமாற்றத்துக்கும் இடையில்…

என்னடா இது சோதனை….

உயிரே நீயாகி நான் உன்னை காதலிக்க

ஏனோ அதை சொல்லிட முடிந்திடவில்லை என்னால்….

சொல்ல வேண்டுமென நினைத்து உன்னைப் பார்த்திடுகையில்

உன் பார்வையில் சிக்கி கொள்பவள் மீள்வதே இல்லையே…

பின் எங்கே நான் என் மனதினை உன்னிடம் வெளிப்படுத்த…

வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் நடுவே நான் போராடியே

இத்தனை நாட்களும் கடந்து விட்டது….

காதலை சொல்லிடவும் வழியில்லை…

என் போராட்டமும் ஓய்ந்திடவில்லை…

என்ன தான் செய்வதோ?...

புரியாத புதிராக இருந்த தருணத்தில் ஓர் நாள்….

நான் கொண்ட போராட்டம், என்னை வாட்டிய மௌனங்கள்

அனைத்திற்கும் விடுதலை அளித்தேன்….

ஆம்… உன்னிடத்தில் என் காதலை கூறினேன்….

கண்களில் ஒருபக்கம் நீர்… என் இதழிலோ இன்னமும் நடுக்கம்….

என் மனதிலோ நான் சொன்ன காதலே திரும்ப திரும்ப ஒலித்தன

“உ…ங்க……ளோ……….ட நா…………………….ன் வா………….ழணு…………….ம்னு ஆ……………சை………..யா இ………….ருக்கு…

எ…..ன்……………………………..னை…………………………. ஏத்…………..து….ப்…..பீங்களா…………………….” என…..

இதயத்துடிப்பின் ஓசை என் செவி வரை உணர,

உன் பதிலுக்காய் காத்திருந்தேன் நானும் தவிப்புடன்….

மறுத்திடுவாயா?... இல்லை விலக்கிடுவாயா?...

சரி என்பாயா?... என்ன சொல்வாயடா கண்ணா நீ?...

பெரும் அலைப்புறுதலுடன் நான் நிலம் பார்த்து நின்றிருக்க,

“சகி……..” என்ற உன் அழைப்பு என்னை எட்டியது…

என்ன சொல்லப் போகிறாயோ?...

அச்சம் என்னுள் முழுமையாய் பரவ,

கால்கள் தொய்வது போல் இருந்தது எனக்கு….

“சகி………..” இம்முறை சற்றே அழுத்தம் கூட,

குரலில் இருந்த விறைப்பை உணர்ந்தவள் நெஞ்சம்

மருண்டு தான் போனது அக்கணம்…

முடிந்தது… அனைத்தும் முடிந்தது…

சொல்லாமல் இருந்திருந்தால், ஒருதலைக் காதலுடன் என் காதல் வாழ்ந்திருக்கும்…

சொல்லி உயிர் கொடுக்கிறேன் என்ற பெயரில் என் காதலின் உயிரை எடுத்துவிட்டேனா?...

மனம் தறிகெட்டு அலைபாய,

“நான் கிளம்புறேன்….”

என்ற உன் வார்த்தையில் சட்டென நிமிர்ந்தேன்…

இமைக்குளம் எங்கும் என் விழி நீர் நிறைந்து தழும்ப,

கரையை உடைத்து அது வெளிவர முனைந்த நேரம்,

உன் முகம் கோபத்தில் சிவக்க….

எனக்கோ தொண்டை வறண்டு போனது…

“எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்… நீ அழக்கூடாதுன்னு…

நீ அழுதா நானும் அழுவேண்டி…”

நீ வேகமாக சொல்லி முடிக்க,

என்னுள்ளோ ஒருவித சுகமும்

கூடவே கவலையும் குடிகொண்டது…

இன்னும் நான் உனக்கு தோழிதானா?.. காதலி இல்லையா?...

காதலியாய் இருந்திருந்தால் தான் உன் காதலை சொல்லியிருப்பாயே…

மாறாக ஏன் தோழனாக நீ பேசப்போகிறாய்?...

உள்ளம் சில நொடிகளில் கணக்குப் போட, விரக்தி எட்டிப்பார்த்தது என்னுள்…

அது என் அடிமனதின் ஆசைகளை அப்படியே உள்ளிழுக்க,

கேவல் வெளிவரப் பார்த்தது என்னுள்ளிருந்து….

இதற்கு மேலும் இங்கே நின்றால் நான்

சுக்குநூறாய் உடைந்திடுவேன் என உள்ளம் கதற,

அப்படியே சட்டென நான் திரும்பி ஓர் எட்டு எடுத்து வைக்க,

என் கரம் பற்றினாய் நீ…

உன் கரத்திலிருந்து என் கரத்தை நான் விடுவிக்க முயல,

என் விரல் பிடித்து திருப்பினாய் நீ வேகமாய்…

பட்டென என் முகத்தினை கைகளில் ஏந்தி,

“வாழணும்னு சொல்லிட்டு எங்கடி போற?... என்னை விட்டு போயிடுவியாடி நீ?...

என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா அப்போ?.... எல்லாமே அவ்வளவுதானா?..

நான் உனக்கு தோழன் மட்டும் தானா?.. காதலன் இல்லையா?....” என நீ சொன்னதும்,

என் செவிகளில் விழுந்த வார்த்தைகள் அந்த நிமிடமே

என் உயிர் தொட்டு இதயம் நுழைய,

மகிழ்ச்சி வெள்ளம் என்னுள் கரைபுரண்டு ஓட,

நம்ப முடியா பிரமிப்பு என்னை ஆட்கொள்ள,

என் இமைக்குளத்தில் மொட்டாக இருந்த பூ சட்டென விரிந்தது…

ஆம்… எந்தன் கண்ணீர்ப்பூக்களின் நடுவே உன் பிம்பத்தை நான் காண,

என் இதழ்களிலோ உன் பெயரின் உதயம்…

“லூசு….” என செல்லமாக திட்டி என் நெற்றி மீது நீ முட்டிட…

மொட்டவிழ்ந்த என் கண்ணீர்ப்பூக்கள் உன் விரலினைத் தீண்ட,

புன்னகையுடன் தலை சரித்து என்னைப் பார்த்தாய் நீயும்….

“அழாதடி சகி…………”

உன் கொஞ்சல் கெஞ்சல் மொழிகள் என் அழுகையைக் கண்டு வெளிவர,

என் விழி மூடி அதனை உள்வாங்கினேன் நான்…

ஆம் அந்த நொடி இன்றளவும் என் நெஞ்சின் அச்சிட்டப் பக்கங்கள்…

மேலும் அவை, மாறாத சந்தோஷ தழும்புகள் தானோ…

என்றும்…… இந்த இளம்பூவை நெஞ்சில்???… என் ராஜா!!!!

ஹாய் மை டியர் ஃப்ரெண்ட்ஸ்…

இன்று சிறிய கவிதையாகத்தான் தர நினைத்தேன்… ஆனால் அது பெரிதாகிவிட்டது… அதற்கு மன்னித்துவிடுங்கள்…

ஹ்ம்ம்… இந்த கவிதைத் தொடரை இதுபோல் இன்னமும் தொடரவா?..

இல்லை இதோடு முடித்துவிட்டு அடுத்த தொடரை தொடரவா?...

நீங்கள் தான் கூற வேண்டும்…

எதுவாக இருந்தாலும் உங்கள் பதிலை கூறுங்கள்…

இந்த இளம்பூவையின் நெஞ்சம் அதற்காய் காத்திருக்கும்…

நன்றி….

பூ மலருமா?... / மலர்ந்ததா?...

Ilam poovai nenjil 36

Ilam poovai nenjil 38

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.