(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 44 - பார்த்திட தான் மாட்டாயா...!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

கரும்பலகையில் பதிந்திருந்தது வெள்ளை நிற எழுத்துக்கள்…

கண்கள் அதனை பார்த்திட, கைகள் அதனை எழுதிற்று பிழையில்லாது…

மகாபாரதம்… அதில் பாஞ்சாலிக்கு உற்ற நண்பன் கிருஷ்ணன்…

பேராசிரியர் பாடத்தை சிரத்தையுடன் நடத்திக்கொண்டிருக்க

செவியில் விழுந்த பெயரில் கைகள் தானாக அசைவற்று நிற்க,

இதழில் உதயமானது நொடிப்பொழுதில் புன்னகை…ச்

விழியில் உன் முகம் வந்து போக

மனதிலோ உனக்கான தேடல் எழுந்தது வேகமாய்…

போச்சு….. உதடுகள் தானாக முணுமுணுக்க

தலையில் செல்லமாக அடித்துக்கொண்டேன் நான்….

இனி பாட்த்தை கவனித்த மாதிரி தான்…

உள்ளமும் தெளிவாய் உரைத்திட,

உன் பெயரை எழுத ஆரம்பித்தது விரல்கள் மெல்ல…

அதன் பக்கத்தில் எனது பெயரையும் சேர்த்து எழுதிப்

பார்க்கையில் ஏனோ உன்னருகில் நான் இருப்பது போல் உணர்வு

என் நாடி நரம்பெங்கும் ஓடி சிலிர்த்திட்டதை என்னவென்று சொல்வேனடா?...

அந்த மாயக் கண்ணனின் லீலைகள் கொஞ்சம் இல்லையென

பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு…

ஹ்ம்ம்… ஆனால் என் மனதின் செல்லக் கண்ணனான

உன் மாய வேலைகள் நான் மட்டுமே அறிந்திடும் பரம ரகசியம்

என்று கூறினால் இல்லையென மறுத்திடுவாயா கண்ணா நீ?...

மாட்டாய் தானே…

பின் எதற்கடா இன்னை இப்படி உன் நினைவில் மூழ்கச் செய்து

இம்சித்து வஞ்சித்து சோதிக்கிறாய்…

பாவமும் இப்பாவைக்கு நீ பார்த்திடமாட்டாயாடா?...

நெஞ்சத்தில் ஊஞ்சலாடும் உன் நினைவுகள்…

உள்ளத்தில் நிரம்பி தழும்பிடும் உன் பூமுகம்….

எதுவும் நொடிப்பொழுது கூட என்னை விட்டு

அகன்றிடாத விந்தை தான் என்னடா கண்ணா?...

இப்படியே சென்றால் என் கதி தான் என்ன?..

இப்பாவைக்கும், பாவம் கொஞ்சம்

நீ பார்த்திடவும் மாட்டாயா... என் ராஜா....

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

எப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…

பூ மலரும்

Ilam poovai nenjil 43

Ilam poovai nenjil 45

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.