(Reading time: 3 - 6 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 46 - எப்படா என்னை பார்ப்ப….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

விழிகள் நேரே மேலே கோபுரத்தை தரிசிக்க

மனமோ பரிதவித்துக்கொண்டிருந்தது எனக்குள்…

கால்கள் தானாக நடைபோட, இறைவனின் சந்நிதியில்

உள்ளத்தை ஒருமுகப்படுத்தி இருகரம் சேர்த்து விழி மூடி

வேண்டிமுடித்துவிட்டு பிரகாரத்தை சுற்றி வலம் வந்து அமர்கையில்

ஏனோ மனம் ஒருநிலையில் இருந்திடாது அலைபாய்ந்தது…

இந்நேரம் வேலை முடிந்து வீடு திரும்பியிருக்கக்கூடும்….

ஹ்ம்ம்… பெருமூச்சொன்றை காற்றில் கலக்கவிட்டுவிட்டு

தலைகவிழ்ந்து அமர்ந்தவள் கையில் கிடைத்த சிறு குச்சியினால்

மண்ணில் கிறுக்கலை உண்டாக்கி உண்டாக்கி அழிக்க

மனமோ கூப்பாடு போட்டது

“ஏண்டா இன்னைக்கு வரலை…..” என…

கேள்வி அலைகள் நெஞ்சில் எழுந்த உடனேயே

உன் பெயரும் அதில் துள்ளி குதித்து கரையைக் கடக்க முயல

சிந்தனையோ, லாவகமாய் கடல் முத்தென அதனை சேகரித்து

கரத்தினில் ஒப்படைக்க, விரல்கள் சற்றும் தாமதிக்காமல்

உன் பெயரை மண்ணில் வரைந்து முடித்த வேளை,

அதனருகில் பாதம் ஒன்று பதிந்து சென்றிட,

சட்டென மூண்ட கோபத்துடன் நிமிர, அங்கே யாரும் இல்லை…

மறுபடியும் நான் மணலில் விழிகளைப் பதித்திட

மீண்டும் பாதம் ஒன்று அருகில் பதிந்து செல்ல,

இம்முறை பட்டென உயர்ந்திட்ட என் விழிகள்

எரிமலை உமிழுமென பார்த்திட்டால்

அதுவோ பனிமழை பொழுந்திட்டது

நானே எதிர்பாராத விதமாய்…

என் கோபக்கனல் என்னவனை அங்கே பார்த்திட்ட

சில நொடிகளில் பனியாய் உருகி போயிற்று சலனமே இல்லாது…

என் அத்தையின் சகிதம் நீயும் அங்கே வந்திருக்க,

அவர்களின் பொருட்டு என் விழிகளை உன்னிடமிருந்து

பிரித்து எடுத்து மீண்டும் நான் மணலில் வைத்திட

“நேருக்கு நேரா பார்க்க தான் முடியலைன்னு நினைச்சா

இப்போ பத்தடி தள்ளி நின்ன போதும் பார்க்க முடியலையே….”

மனதினுள் நான் வெம்பி கசிந்திட,

என் புலம்பல் உன் செவிகளை எட்டியதா?...

என்னைத் தாண்டி தாண்டி சென்றாய் நீ அடிக்கடி…

அதை எடுக்கிறேன் இதை எடுக்கிறேன் என…

நீ தானா இப்படி செய்வது என நம்பமுடியாது நான் திகைத்திருக்கையில்

“தம்பி அதையும் எடுத்துவாப்பா….” உனக்கு யாரோ உத்தரவிட

நீயும் சாவி கொடுத்த பொம்மை போல்

வேலை செய்வது புரிந்துகொண்டு ஊமையானேன் நான்….

“அதான பார்த்தேன்… நீயாவது என் பக்கம் திரும்புகிறதாவது…”

ஹ்ம்ம்… மனமெங்கும் ஒரு ஏக்கம் உதித்து

உடலின் ஒவ்வொரு அணுவிலும் அது பிரதிபலிக்க

மெல்ல எழுந்து கிளம்பி வாசல் வரை சென்றவளுக்கு

எதையோ விட்டு செல்வது போல் இருக்க

ஏதோ ஓர் உந்துதலில் உன்னை நான் பார்த்திட

அடி மனதினிலிருந்து ஓர் உற்சாகம் பீறிட்டு வழிந்தது எனக்குள்…

அடுத்த நொடியே அது கானல் நீராய் காணாமல் போக

இருதயம் துடித்திடும் ஓசை கேட்டிட,

இறுக மூடிய விழிகளுக்குள் நானும் போராடிட

மனமோ வினா எழுப்பியது

“எப்படா என்னை பார்ப்ப?....” என…. 

 

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

எப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…

பூ மலரும்

Ilam poovai nenjil 45

Ilam poovai nenjil 47

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.