(Reading time: 3 - 5 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 47 - என்னை என்னடா செய்தாய்….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

புத்தகம் ஒருபுறம் கைபேசி மறுபுறம் என

மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருக்கையில்

அம்மா ஒரு பத்திரிக்கையைக் கொண்டு வந்து

என்னருகில் வைக்க, எனக்கோ அதனைப் பார்த்திடும்

எண்ணமே இல்லை துளியும்…

நேரம் செல்ல செல்ல, புத்தகமும் சலித்துவிட

மேஜையின் ஓரத்திற்கு அது செல்ல,

சட்டென பார்த்துவிட்ட அந்த பெயரில்

கைகள் பத்திரிக்கையில் பதிந்தது உடனேயே…

மணமகனின் இடத்தில் உன் செல்ல பெயர்.…

மணப்பெண்ணின் பெயரோ எங்கோ அறிமுகமானதாய்…

அம்மாவிடம் அதுபற்றி என்ன ஏது என்று

சுவாரசியமே இல்லாதது போல் வினவ

அவள் சொன்ன பதிலில் கண்கள் விரிய,

பத்திரிக்கையை யாரும் பார்த்திடா வண்ணம்

துப்பட்டாவினுள் மறைத்து எனதறைக்கு எடுத்துச் சென்றேன்…

சட்டென பின் பக்கம் திருப்பி உறவுமுறைகளின் பெயரினை ஆராய

விழிகள் விரிந்து இதழ்கள் மலர்ந்து போனது அக்கணமே…

கோடி கோடி ஆனந்தம் அந்நொடியில் எனக்குள்…

உன்னை எல்லோரும் அழைத்திடும் செல்லப்பெயர் மட்டுமே

நான் அறிந்திருந்த வேளையில் உன் முழுப்பெயரும் இன்று

என் பார்வை வட்டத்திற்குள்…

ஹை…. என மனம் ஆனந்தமாய் குதூகலித்திட

விரல்களோ உன் பெயரை வருடிப் பார்த்த நேரம்

இதயத்தில் ஓராயிரம் பூக்கள் பூத்து குலுங்கி

வாசம் பரப்பி என்னை கிறங்கடித்துக்கொன்றது அவ்வேளை…

உன் பெயர்… பெயருக்குப் பின்னால் நீ பெற்ற அங்கீகாரம்…

ஒருகணம் உள்ளம் பெருமைப் பட்டுக்கொண்டது

இல்லாத காலரை தூக்கிவிட்டவாறு…

உதடுகள் புன்சிரிப்பினை உதிர்த்திட்ட வேளை,

இமைகளில் உன் முகம் வந்து போக

“ஹையோ….” என்றபடி பத்திரிக்கைக்கொண்டு

முகம் மறைத்தேன் நான் நாணத்துடன்…

மூடிய விழிகளுக்குள் உன் திருமுகமே வந்து செல்ல

எகிறி குதிக்க முற்பட்ட இதயத்தை அடக்க வழி தெரியாது

நான் திணறி நிற்கையில் நீயும் சிரிக்கிறாய் எனக்குள்,

மார்பின் குறுக்கே கைகட்டியபடி தோரணையுடன்…

அந்நேரம் எங்கிருந்து தான் என்னுள் உதித்ததோ அவ்வார்த்தை…

“ஹையோ… போடா….”

உன் மீது நான் கொண்ட காதல்

வெட்கமும் சிணுங்கலுமாய் வெளிவந்திட

சுவாசிக்கக்கூட முடியவில்லையடா…

பாடாய் படுத்துகிறதடா இக்காதல்…

கண்கள் சொருகி கனவுலகில் நான் சஞ்சரித்திட

சிரமப்பட்டு எனக்குள் நான் மூச்சை இழுத்துக்கொள்ள

சுவாசக்காற்றும் இதயம் நுழைந்து

அவ்விடம் வசிக்கும் உன்னிடம் கேட்கிறது…

“என்னை என்னடா செய்தாய்???!!!.....….” என…

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

எப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…

பூ மலரும்

Ilam poovai nenjil 46

Next poem in this series will be published on 5th Sep. This series is updated weekly on Tuesdays

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.