(Reading time: 1 - 2 minutes)

20. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

இருள் சூழ்ந்த கருங்காட்டில் வீசும் - மல்லிகை மணம்

புருவமென்னும் கருநிற தேய்பிறை நடுவின் - வட்ட பொட்டு

காவிய புலவர்களையும் ஊமையாக்கும் - கருங்குவளை கண்கள்

மோகத்தில் மூழ்கடிக்கும் மூக்கின்மேல் மின்னிய - வைர மூக்குத்தி

பொன்னிற தாமரை இதழாலான கன்னத்தில் - எட்டிப்பார்க்கும் பரு

இருவரி இலக்கணமாய் நின்றிருந்த உதட்டின் - சிகப்பு சாயம்

மிதந்திடாத மேகமாய் அசைந்திருந்த கழுத்தின் - ஒற்றை சரம்

நிலத்திலும், மலைமேடுகளிலும் தவழ்ந்தோடும் நதியானது - என் கற்பனை

செங்கரும்பாய் சிவந்திருந்த கைகளிலாடிய - வளையோசை

பருவமடைந்த மூங்கில்களாய் வளர்ந்திருந்த கால்களின் - கொலுசோசை

மண்ணில் சரிந்த மலர்கள் பதித்த சித்திரமாய் - உன் பாததடம்

 

என எல்லாம் என்னை மயக்க,

உன்னை எப்படி பிரிவேனடி பெண்ணே?

இக்காதல் என்னை வதைக்க…..

Poem # 19

Poem # 21

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.