வேண்டும் வேண்டும்
எத்தனையோ வேண்டும்
அத்துணையும் குறையாமல்
நிறைந்து இனிக்க வேண்டும்
தெளிந்த நீல வானத்தில்
என் கண்மை கொண்டு
கவிதை ஒன்று எழுத வேண்டும்
காதுமடல் கற்றை முடி அசைத்து
சிலிர்க்க வைக்கும் காற்றை
கை அணைப்பில் முடிந்துவைகக் வேண்டும்
அந்திமாலை அழுகு வண்ணம் தன்னில்
என் தூரிகை துடைத்து
ஓவியம் வரைய வேண்டும்
மழை பிழியும் கார்முகிலை
கட்டி இழுத்து
இதழ் பதித்து பருக வேண்டும்
வெண்ணிலவில் நூல் தொடுத்து
விண்மீண் சில கோர்த்து
பட்டமாக்கி பாரெல்லாம் பறக்க வேண்டும்
அடர்ந்த காட்டில் நுழைந்து தொலைந்து
அலரியோனுடன் கண்ணாம்பூச்சி
விளையாட வேண்டும்
மரத்தடியில் வாசம் செய்து
அதன் வேர்வழி பேசிக்கொள்ளும்
சேதி என்ன கேட்க வேண்டும்
எறும்புடன் ஊரிச்சென்று
அவை குடும்பம் சேர்ந்து
பல இரகசியங்கள் அறிய வேண்டும்
எத்தனையோ வேண்டும் இன்னம்
எவ்வளவோ வேண்டும்
வேண்டும் யாவும் மகிழ்ந்திருக்க
மனதோடு உரையாடும் தனிமை வேண்டும்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
எனக்கு நின் கவிதைகளை படித்து ரசித்துக் கொண்டே இருக்கவேண்டும்! நின் மனம் செல்கிற கற்பனைப் பாதையில்
நானும் தொடரவேண்டும்! நின் ரசனைகள் அத்தனையும் நானும் ரசிக்கவேண்டும்! நின் வாழ்வு மிகச் சிறப்பாக அமையவேண்டும்!