என் செல்ல கனவே ஓடி.வா
என் உயிரின்.துளியே ஓடி வா
வானம் கொட்டும் இடி முரசு செவி நிறைய கேட்க வா
அதன் பிள்ளைமேகம் சிந்தும் தூரல் கண் குளிர காண வா
மரமெல்லாம் ஆடும் களியை இப்போதே காண வா
அதன் உடல் நனைத்து மண் தவழும் மழையிசையை கேட்க வா
சிறு கை நீட்டி அந்த சாரல் மழையை மெதுவாக அளைய வா
உன் சின்ன மேனி தழுவும் மழலைமேக முத்தமதில் கரைய வா
தெருவோடு ஓடும் நதியில் காகித கப்பல் பல விடுவோம் வா
தள்ளாடி அது போகும் அழகு கண்டு சின்னவாயால் சிரிக்க வா
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.