(Reading time: 1 - 2 minutes)

கவிதை - எவருக்குஎவரோ உறவு - ரம்யா

எவருக்கு எவரோ உறவு

ஊன் கொடுத்தவள் அன்னையாம்

உயிரின் பாகம் கொடுத்தவன் அப்பனாம்

கருவறை பங்கிட்டவன் சகோதரனாம்

களவியில் கலந்துவிட்டவன் கணவனாம்

 

ஆறடி உயரம் தான் கொண்டது அதில்

ஆயிரமாயிரம் உறவுகள் கண்டது

குறுதி மஜ்ஜை எலும்பு நரம்பு

கொழுப்பு சதை தோல் ரோமம் என

கலவை சேர்த்த பிண்டம் அது

காலன் அழைப்பிற்கே இங்கே  வேகமாக வளருது

 

 

உடல்கூறு தான் சொந்தமெனில்

பிரிவுகளில் வருத்தம் ஏன்?

ஊடல் கூடல் ஆசை போதை

எண்ணிலடங்கா ஆட்டங்கள் ஏன்?

சிந்தனைகள் பலவும் சிதறிவிழ

ஆக்கம் அழித்தல் பரிமானங்கள் ஏன்?

 

சேர்த்துவைத்த அனுபவங்களின்

உணர்ச்சி குவியல் தான் மனமாம்

எண்ணக்குவியல் புத்தியாம்

இரண்டுமே இல்லை சொந்தமாம்

 

மனம் தான் இயங்கு சக்தி இங்கு அதன்

தாண்டவம்  இல்லாத இடம் தான் எங்கு

புத்தி என்பதோ இருமுனை கத்தி

சுற்றித்திரிந்தாலும் விளங்காத ஒரு உக்தி

 

மனமும் புத்தியும் உடலும் உறவும்

உடமைகள் அன்றி உண்மைகள் இல்லை

இது புரிந்தும் இது அறிந்தும்

தெளிவுகள் தான் என்றும் பிறப்பதுவுமில்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.