(Reading time: 1 - 2 minutes)

கவிதை - போய்விடு நீ - இரா.இராம்கி

நுண்ணுயிரே நுண்ணுயிரே!

எங்கனம் பிறந்தாயோ?-

யாம் அறிந்திலோம்;

 

இன்னும் எத்தனை மனித உயிர்களை உட்கொள்வோயோ? 

யாம் அறிந்திலோம்;

 

ஆனால் யாமறிவோம்-

இனி நிச்சயம் தாங்காது இவ்வுலகம்;

 

தவிக்கிறது இங்கு பல நெஞ்சம்;

இரக்கம் காட்டு கொஞ்சம்;

 

தண்டனைகள் போதும்

தவறுகள் உணர்ந்தோம்;

இனி மனிதம் காப்போம்

 

யாவுயிரும் புவியில் ஆனந்தமாய் வாழ எங்கள் பேராசைப்பேயைப் பொசுக்குவோம்;

 

நுண்ணுயிரே நுண்ணுயிரே ,

போதும் மரணஓலங்கள்,

மண்டியிட்டுக் கேட்கிறோம்,போய் விடு;

மன்றாடிக் கேட்கிறோம்,போய் விடு;

 

போய்விடு,போய்விடு நீ உடனே போய்விடு;

போய்விடு,போய்விடு நீ 

உலகத்தை விட்டே போய்விடு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.