(Reading time: 2 - 4 minutes)

கவிதை - விஞ்ஞானம் பேசுவோம் - RMS

இயற்கை
ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும்
என்பது பொய்;
இயற்கை ஆக்க மட்டுமே செய்யும்
அது அதுவாக இருக்கும் வரையில்;

இயற்கை பூமியில்
அறிவியல் வளர்ச்சியென்று
செயற்கையை நுழைத்தான் மனிதன்
அன்று முதல்
சீற்றத்தை கற்று கொண்டாள்
இயற்கை அண்ணை;

அரிசியை பளபளபாக்கி
பையில் கட்டி விற்க ஆரம்பித்தான்
இல்லாத ஒரு வியாதியை இவனே உருவாக்கி
அதற்கு சர்க்கரை என பெயரிட்டான்;

மும்மாரி பெய்த மழையை
நீரோட்டமிகுந்த
விவசாய நிலப்பரப்புகளை அழித்து
நாற்று நட வேண்டிய மண்ணில்
கட்டிடங்களை நட்டான்;

காடுகளையும் கம்மாக்களையும் அழித்து
பறவை கூட்டங்களையே ஒழித்தான்;

மைனாக்களும் சிட்டுக்குருவிகளும்
மரம்கொத்தி பறவைகளும் தட்டான்பூச்சிகளும்
மகரந்த சேர்க்கை மூலம் விதைகளை
பரப்பி செழிக்க செய்த இயற்கைக்கு
மாற்று செய்ய எதை படைப்பாய்..?

நூலாடைகளும் நூலால் நூற்ற பைகளும்
வியாபாரத்திற்கு பயன்படுத்தியதை ஒழித்து
விஞ்ஞான முறை வளர்ச்சியென
நெகிழி பைகளை உருவாக்கி
அதை அழிக்க வழி தெரியாமல்
மண்ணை மலடாக்கினான்;

பின்பு நெகிழியை அழிக்கிறேனென்று
காகித குப்பைகளை போல்
நெகிழிகளை கொளுத்தி
ஓசோன் படலத்திலே
ஓட்டை விழச் செய்தான்;

காசு கடன் கேட்பது போல நீரை
கன்னடரிடம் கடன் கேட்டே
கால் நூற்றாண்டு கடந்த தமிழன்
பல ஏரிக்களையும் கம்மாக்களையும்
சிற்றோடைகளையும் வாய்க்கால்களையும்
அழிந்துவிடாமல் அகலபடுத்தியோ தூர்வாரியோ
தக்கவைத்திருந்தால்
தண்ணீருக்கு நாம் கையேந்தும் நிலை.ஏது?

இயற்கையை மாற்ற மனிதன் என்று
விஞ்ஞானத்தை புகுத்தினானோ
அன்றே பருவநிலை மாற்றத்தில்
கோளாறுகள் தொடங்கிவிட்டது...!

முக்காலமும்
தப்பாய் போனது...!

நாளை மழையா ?குளிரா? வெயிலா?
என வான் நிலை தெரியாத மனிதன்
வானிலை அறிக்கையை தேடுகிறான்
தொலைக்காட்சியில்!

கடிகாரமில்லாமலே கதிரவனை பார்த்து
கால நேரத்தை குறித்தவன்
இன்று கைக்கடிகாரத்தில்
நொடிமுள் வரை தேடுகின்றான்...

இப்படி மாறிவிட்டதை கூறலாம்
நிறைய நிறைய என்னை போன்றவர்கள்
எழுத்து வரிகளில் மட்டும்;
நாங்கள் நாளை வேறு சிந்தனைக்கு
வேறு வரிகளை தூவலாம்
ஆனால் நிஜ மாற்றம் முன்னேற்றம் எங்கே?
அது இன்றைய மாணவன் கையில்!
காரணம் அவனே நாளைய முதல்வன்...!

இனி புல்லிங்கோ என்ற ட்ரெண்டை ஒழித்து
எல்லோரும் கை கோர்க்கலாம்
பூமியை புதுப்பிக்க திட்டத்தை வகுக்கலாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.