(Reading time: 7 - 14 minutes)

கிறிஸ்டியிடம் சென்று பைல்களை வாங்கி அதே போல் செய்து சிறிது நேரம் கழித்து எடுத்து சென்றபோது அதில் ஆயிரம் குறைகளை சொல்லி அனுப்பினான்..

அடுத்த முறை சரி செய்து எடுத்துச் சென்றபோது அதிலும் புதிது புதிதாக ஏதாவது சொன்னான் முக்கியமாக இதை அனைத்தையும் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் செய்தான்..

அவன் ஏன் இவ்வாறு செய்கிறான் முகத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் நேற்று பார்த்தே கொன்றான் இன்றைக்கு பார்க்காமல் கொள்கிறான் என ஒரு முறை பெருமூச்சு விட்டு அவள் இடத்திற்குச் சென்றாள்..

அடுத்தடுத்த முறையும் ஏதாவது ஒரு குறை சொல்ல அவளுக்கு எரிச்சலாக வந்தது டேபிளின் மேல் முகத்தில் எரியாத குறையாக பைலை தூக்கி போட்டு வேலை கொடுக்கச் சொன்னால் மட்டும் போதாது அதை திறம்பட செய்யவும் தெரிய வேண்டும் எனக்கூற ஒரு துளி நீர் கண்களில் இருந்து வந்து விட்டது..

அவனறியாமல் துடைத்துக் கொண்டு பைலை எடுத்து அறைக்கு வந்தபோது
எல்லோரும் கிளம்பி விட்டார்கள்..

மிதுர்வனுக்கும் அவளை பார்த்தால் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது ஆனால் அவனோடு சுற்றினாய் அல்லவா அவளுக்கு இது தேவைதான் என மீண்டும் முருங்கை மரம் ஏறினான்..

சுந்தரி, "அக்கா நான் வேண்டுமானால் உன்னுடன் துணைக்கு இருக்கவா" என கேட்க,  இல்லை வேண்டாம் சுந்தரி நீ போ நான் முடிந்தவரை சீக்கிரமாக வேலையை முடித்து கிளம்பிவிடுவேன் இல்லை என்றால் நாளைக்கு செய்வதாக சொல்லி விடுகிறேன் எனவும் அவளும் தயக்கத்துடனே கிளம்பிவிட்டாள் பாவம் அவள் ரொம்ப தூரம் செல்ல வேண்டும்..

அவளுக்கு தைரியம் சொல்லி அனுப்பினாலும் ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் அன்றைய நினைவில் கலக்கத்துடனேயே வேலை செய்தாள்..

இம்முறை அவனிடம் காட்டும் போது சிறிது தயக்கத்துடன் சார் நேரம் ஆகிவிட்டது மீதி வேலையை நாளை வந்து பார்க்கவா என கேட்க கோபத்துடன் நிமிர்ந்து வேலை நேரத்தில் வெளியே சுற்ற தெரிகிறது வேலையை முடிக்க சொன்னால் ஏதாவது காரணம் சொல்கிறாயா என்றான்..

என்ன சார் சொல்கிறீர்கள் என புரியாமல் கேட்க..

ஆஹா என்னமாய் நடிக்கிறாய் ஆஸ்கரே கொடுக்கலாம் போ இன்று ஹோட்டலில் அவனோடு கூத்தடித்ததை நான் பார்க்கவில்லை எனில் நானும் கூட இதை உண்மை என நம்பியிருப்பேன் ஆனால் பொது இடமென்றும் பாராமல் இருவரும் கையை பிடித்துக் கொண்டல்லவா சுற்றினீர்கள்..

அதுமட்டுமா பெயரை சுருக்கி கொஞ்சி கொண்டு வேறு நின்றிருந்தீர்கள் என சொல்ல..

"போதும் நிறுத்துங்கள் இதை சொல்வது வேறொருவராக இருந்தால் இன்னேரம் அவர்கள் கன்னம் பழுத்திருக்கும்" என கோபமாய் கூற ஏன் உண்மையை சொன்னால் குத்துகிறதா..

என்ன உண்மை பொல்லாத உண்மை உங்கள் விழா தொடர்பான வேலைகளை கவனிக்க போகிறேன் என்று உங்கள் பிஏவிடம் சொல்லி விட்டுத் தான் சென்றேன்..

அதற்காகத்தான் ஹோட்டலை புக் செய்ய போயிருந்தேன்..

நானும் சந்துவும் சிறுவயது முதலே நண்பர்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் அவ்வாறுதான் பேசிக்கொள்வோம் இதுவரை யாரும் எங்களை தப்பா நினைத்ததில்லை இதுபோல் பேசியதும் இல்லை.. அப்படியே நினைத்தாலும் அவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை..

காமாலை கண்ணுக்கு காணுமிடமெல்லாம் மஞ்சள் என்பது போல் உங்கள் கண்ணில் குறையை வைத்துக் கொண்டு எங்களை குற்றம் சொல்லாதீர்கள்..

என்ன தைரியம் உங்களுக்கு கூத்தடிக்கிறேன் கொஞ்சி கொண்டிருக்கிறேன் என சொல்ல அப்படியே நான் செய்தாலும் என்னை கேட்க நீங்கள் யார் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என கோபமாக கேட்டாள்..

அதுவரையில் தன் பக்கம் தான் தவறு என பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த மிதுர்வன் அவளின் கடைசி வாக்கியத்தில் ரௌத்திரமானான்..

ஒரே எட்டில் எழுந்து வந்து அவள் கையை வேகமாக பிடித்து இழுத்து என்ன சொன்னாய் நான் யாரா எனக்கு என்ன உரிமை இருக்கிறதா ஒருவேளை உரிமை எடுத்துக் கொண்டால் தான் கேட்கலாம் என சொல்கிறாயோ நீயே ஆசைப்படும்போது விடலாமா என அவளை முரட்டுத்தனமாக இழுத்து அணைத்தான்..

அவள் சுதாரிக்கும் முன் முகத்தை பிடித்து நிமிர்த்தி முகமெல்லாம் முத்தமிட்டான்.. எவ்வளவோ போராடியும் அவளால் விடுபட முடியவில்லை அவன் பிடி உறுதியாக இருந்தது கடைசியில் அவளது உதடுகளை வன்மையாக கவ்விக்கொண்டான்..

வன்மையாக தான் ஆரம்பித்தான் ஆனால் அந்த முத்தத்தின் தித்திப்பில் மென்மையாக மாறியது..  எவ்வளவு நேரம் நின்றார்களோ மெல்ல மெல்ல அவன் அந்த முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தபோது அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீரில் அவன் சுயநினைவை அடைந்தான்..

அவளின் அழுகை அவனை மேலும் கோபமாக்கியது அவளை விடுவித்தவன் கண்களை ஒருமுறை மூடித் திறந்தான்..

போ இங்கிருந்து இனி இங்கே நின்றாயானால் என்ன செய்வேன் என எனக்கே தெரியாது போய்விடு என கர்ஜித்தான்..

கண்களில் திரண்ட நீரோடு அவளது அறைக்குச் சென்றாள்..  கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது..

ஒரே அயர்வாக இருந்தது அவளுக்கு.. எழுந்து வீட்டிற்குச் செல்ல முடியுமா என்னும் அளவிற்கு கால்கள் தொய்ந்திருந்தது..

டேபிளில் கையை வைத்து தலையை இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டிவிட்டு பிஏ வந்து சார் உங்களை கிளம்பச் சொல்கிறார் மேடம் என கூறவும் " ம் " என ஒற்றை சொல்லாய் அவரை அனுப்பினாள்..

நடக்க முடியாமல் மெதுவாக கீழே இறங்கி வந்தாள்..  வேலையை முடித்துக்கொண்டு அந்த நேரம் வெளியில் இருந்து பொட்டிக் வந்த சந்தோஷ் அவள் சோர்ந்து இறங்கி வருவதையும் அவள் முகத்தையும் பார்த்து அதிர்ந்து சைதன்யா என்ன இது என கேட்க அவ்வளவு நேரம் அடக்கி வைத்த அழுகை வெடித்து கிளம்பியது..

அவன் தோளில் சாய்ந்து அவள் அழுததை கண்டு யாரேனும் பார்த்தால் அவளை தவறாக எண்ணுவார்கள் என ஓரமாய் அழைத்துச் சென்றான்..

என்ன ஆயிற்று தனு என கேட்க அவள் ஒன்றும் சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள்..

சரி நீ எதுவும் சொல்ல வேண்டாம் ஆனால் இவ்வளவு நேரமா வேலை செய்தாய் இப்பொழுது இவ்வளவு நேரம் செய்யும் அளவுக்கு உனக்கு வேலையும் இல்லை அவசரமும் இல்லை பின்னே ஏன் என குழம்ப பிறகு ஒரு முடிவுடன் உனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் நீ இனி அங்கு செல்ல வேண்டாம் நான் அவர்களிடம் பேசிக் கொள்கிறேன் காண்ட்ராக்ட் தானே அவர்களிடம் அதைப்பற்றி என்னவென்று பேசுகிறேன் என ஆறுதலாக தலையை தடவிக்கொண்டே கூறினான்..

அதுவரையில் அழுது கொண்டிருந்தவள் அவன் வேலையை விட சொல்லவும் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

இரண்டு நாட்களில் அதைப்பற்றி சொல்வதாகக் கூறியவள் அதுவரை நீயே மேற்பார்வை பார்த்துக்கொள் சந்து என கூறினாள்.. அவளுக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது..

அவனும் சரி என ஒத்துகொண்டு ஸ்கூட்டி இங்கேயே இருக்கட்டும் செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு போகலாம் நானே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என அவளை பைக்கில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து போனான்..

மிகவும் சோர்வாக தெரிகிறாளே பத்திரமாக போகிறாளா என மேலிருந்து ஜன்னல் வழியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த மிதுர்வன் சந்து வந்ததையும் சைதன்யா அவன் தோள் சாய்ந்து அழுததையும் கடைசியில் அவன் பைக்கில் ஏறி சென்றதையும் பார்த்து எதுவும் செய்ய இயலாத ஆத்திரத்துடன் டேபிளில் ஓங்கி குத்தினான்..

கையின் வலியோடு மனதின் வலி அதிகமாக இருந்தது..

வீட்டிற்கு வந்த சைதன்யாவை பார்த்த அருணாவும் கதிரேசனும் என்ன என்னவென பதறிப் போனார்கள்..

காலையிலிருந்து வேலை செய்ததினால் சோர்வாக இருப்பதாக கூறி கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்றான் சந்தோஷ்..

உள்ளே வாப்பா சாப்பிட்டுவிட்டு போகலாம் என அருணா அழைக்க இல்லையம்மா நான் போய் கடை வேலைகளை முடித்து சரவணனை வேறு வீட்டிற்கு அனுப்பவேண்டும் வருகிறேன் எனக்கூறி சென்றுவிட்டான்..

சைதன்யா சாப்பாடு வேண்டாம் எனக்கூறி பால் மட்டும் குடித்து விட்டு படுக்கச் சென்றாள் சோர்வாக இருந்ததால் யாரும் அவளை வற்புறுத்தவில்லை..

படுக்கையில் படுத்து கண்களை மூடி உறங்க முயற்சித்தாள் நேற்று இந்நேரம் இருந்த நிலையென்ன இன்று இருக்கும் நிலையென்ன ஹூம் என பெருமூச்சோடு கண்களை மூடினாள்..

மிதுர்வனும் இங்கே அதே நிலையில்தான் இருந்தான் நேற்று அவளின் சிவந்த முகத்தை எண்ணி ரசனையோடு தூங்காமல் தவித்தவன் இன்று அவளின் அழுத முகத்தை எண்ணி கவலையோடு தூங்காமல் தவித்தான்..

மறுநாள் அவள் எப்போது வருவாள் என எதிர்பார்த்து காத்திருக்க அவளுடைய விடுப்பு செய்திதான் கிடைத்தது..

மேலும் என்னவென விசாரிக்க உடம்பு சரியில்லை என கத்தரித்தாற் போல சொல்லி அனுப்பினான் சந்தோஷ்..

ஆனால் மிதுர்வனுக்கு இருப்பு கொள்ளவில்லை தன்னால்தான் அவளுக்கு இந்த நிலைமை அவளுக்கு என்ன எப்படி இருக்கிறாள் எனத் தெரிந்தால் தேவலாம் போல தோன்றியது..

ரொம்பவும் அவளை காயப்படுத்தி விட்டேனோ அவளை இழந்து விடக்கூடாது என நினைத்து பேசி தன் பேச்சாலேயே அவளை இழந்து விடுவேனோ என அவனுக்கு கலக்கமாக இருந்தது..

இதற்கு மேல் சந்தோஷிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காது என்று தெரிந்த பிறகு கம்பெனியில் இருக்க பிடிக்காமல் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.