(Reading time: 4 - 7 minutes)

                  வீட்டின் எதிரே உள்ள ஒற்றைத் தென்னை மரத்தை,உழைப்பாளி பறவையான காகம் வட்டமிட்டுக் கொண்டிருந்ததை பார்த்தவுடன், அதனை கவனிக்க ஆரம்பித்தேன். 

        பல இடங்களில் இருந்து குச்சிகளையும்,முட்களையும் சேகரித்துக் கொண்டுவந்து தென்னை மரத்தில் மும்முரமாக கூட்டைக் கட்டிக் கொண்டிருந்தது. 

  ஆனால்,மரத்தில் கூட்டைக் கட்டுமளவுக்கு இடமில்லை என்ற உண்மை எனக்கு மட்டுமே தெரியும். இருந்தும், அதன் ஊசி போன்ற மூக்கை வைத்து தென்னங்கீற்று இடுக்குகளுக்குள் முட்களைத் தினித்தது.

      பல மணிநேரம் கட்டிய கூடு,ஒரு குச்சியை வைத்ததும் தென்னம்பாளை பூக்களுடன் சேர்ந்து, அக்கூடும் உதிரிப்பூக்களாக கீழே விழுந்தது நொருங்கியது. 

 பல நாட்களாக இந்நிகழ்ச்சி நடந்தேறியது. 

தினமும் காலையில் எழுந்ததும் கூடு கட்டிருக்குமா? என்ற ஆர்வத்துடனே பார்க்கச் செல்வேன். பார்க்கும் போதெல்லாம் முட்களையும்,சிறு சிறு கம்புகளையும்

 தென்னங்கீற்றுக்குள் நுழைத்துக் கொண்டே இருக்கும். 

அதுக்கு தூக்கம்தான் வருமோ வராதோ? 

முழூக்கூடும் முடிந்துவிட்டதென்று நானும்,காகமும் நினைக்கும் போதெல்லாம் குச்சிகள் உருவிக்கொண்டு அனைத்தும் கீழே விழுந்து சிதரும். 

காகத்தின் விடாமுயற்சியை நினைத்து பாராட்டுவதா? அல்ல ஊரில் பல மரங்கள் இருந்தும் இந்த மரத்திலே திரும்பத்திரும்ப கூட்டைக் கட்டுகிறதே,அது முட்டாளென்று நினைத்து பறிதாபபடுவதா?என்று தெரியவில்லை. 

ஒரு நாள் எப்போதும் பரபரப்பாக இருக்கும் தென்னை மெளனமாக மாறியது. அந்த கறுப்பு உழைப்பாளியை காணவில்லை. தினமும் பார்த்துக் கொண்டிருந்த கருப்பியைக் காணவில்லை என்பதை மனம் ஏற்கவில்லை.

 காகத்தை காணவில்லையென்றால் வேறு மரத்திற்குச் சென்றிருக்க வேண்டும்

அல்லது யாரேனும் அதை வேட்டையாடிருக்க வேண்டுமென்று எனக்குள் பல கேள்விகளும்,குழப்பங்களும் எழுந்தன. 

இதற்கு விடை கிடைக்காமல் தென்னை மரத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வீட்டிற்குள் இருந்து மெல்லிய குரலில் கூப்பிட்டாள் பாட்டி. 

       இன்னைக்கி,வெள்ளிக்கிழமை மரத்தில் பாளை விட்டு 1-மண்டலத்துக்கு மேலாகிடுச்சு.இளநீர் காய்த்திருக்கும் போய் பறித்து வா என்றவுடன், அருவாளை எடுத்துக் கொண்டு மனநெருக்கத்துடன் மெதுவாக மரத்தில் ஏறினேன்.

காய்ந்த மட்டையை வெட்டி மேலே ஏறிப் பார்த்த போது பாளை-சிறு சிறு இளநீர்களாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்து 10-க்கும் மேற்ப்பட்டது தொங்கிக் கொண்டிருந்தது. 

அதன் இடுக்குகளுக்குளிருந்து வரும் கூச்சல் சத்தங்கள் என்னவென்று தெரியாமல் இளநீர் களை விளக்கிக் பார்த்த போது.

முன்பு குச்சிகளை கீழே தள்ளி விட்ட அதே பாளைகள் தற்போது இளநீர்களாக வளர்ந்து கூட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்ததை கண்டவுடன் காகத்தின் உழைப்பு புல்லரிக்கவைத்தது.

 

அதன் கூட்டிற்குள் திருடனைப் போல எட்டிப் பார்த்தேன்.   

அங்கு 4-காகக் குஞ்சுகள் என்னைத் தாயென்ற நினைத்து கூச்சலிட்டும் சிவந்த வாயை திறந்தும் திறந்தும் மூடியது.     

இதனைப் பார்த்தவுடன் அசையாத குரங்குச் சிலை போல் மரத்திலே உட்கார்ந்திருந்தேன். 

என்னதான் காக்கைக் கூடு முட்களாள் நிறைந்திருந்தாலும் அது குஞ்சுகளை குத்துவதில்லை.

 

சிறிது நேரம் கழித்து இனம்புரியாத மகிழ்ச்சியில் மரத்திலிருந்து வேகமாக இறங்கும்போது மரத்தின் சிலாம்பு கையில் பாய்ந்ததில் ரத்தம் ஒழுகியது.

 

உடனே பாட்டியிடம் வீட்டிற்குள் சென்று கூறினேன். ரத்தக் காயத்தைப் பார்த்துவிட்டு இப்போது இளநீர்களை பறிக்க வேண்டாமென்று முகம்சுளித்த படியே கூறினாள். 

 

        பின் முன் வாசலில் உள்ள தண்ணீர் தொட்டியில் கையிலிருந்து வடியும் ரத்தத்தை பாட்டி கழுவியபோது கீழிருந்து அங்கு தொங்கும் இளநீர் இடுக்குகளுக்குள் பார்த்த போது, கூச்சங்கள் குறைந்து காகக் குஞ்சுகள் பசியாறிக் கொண்டிருந்தன. 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.