(Reading time: 10 - 19 minutes)

 

"டாக்டர் நந்தகோபாலன்....." என்று வீடே அதிரும்படியான குரலை கேட்டதும் ப்ரியாவை தவிர அனைவரும் ஹாலில் கூடிவிட்டனர். "என்ன கோபாலா என்னை மறந்துட்ட போல???" என்று கோபமாய் பேசினார் அந்த கணீர் குரலின் சொந்தக்காரர். நந்தகோபாலனோ சற்றும் அசராமல் "நீ என்ன வேணா பேசிட்டு இரு....." என்ற தோரணையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து படிக்காமல் விட்ட மீதமிருந்த செய்தியை வாசிக்க தொடங்கினார். 

 

அகல்யாவிடம் திரும்பி "என்ன அகல்யா.... பார்த்தா எல்லாம் உன்னோட வேலை மாதிரி தெரியுது அப்படி தான...!???" என்று கேட்க.... அகல்யா பதில் கூறும் முன் சக்திவேல் தாத்தாவிடம் "என்ன சக்தி வீட்டுக்கு பெரிய மனுஷன்னு நீ இங்க இருந்துட்டு என்ன பண்ற......??? ஒண்ணுக்கும் உபயோகம் இல்ல.....!!! என்று தன் போக்கில் பேச சத்திவேல் தாத்தாவோ "இந்த வீட்டுல என்ன யாரு மதிக்குறாங்க... மத்தவங்க சொல்றத தான் நான் கேட்க வேண்டியதா இருக்கு. ஒருத்தன் என்ன டா னா ஒரு பெரிய மனுஷன் கிட்ட கேட்க்காம லவ் பண்ற பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான்!!!! இன்னொருத்தங்க பூஜை பண்ணனும்னு கிளம்ப சொன்னாங்க.... என்ன பூஜைன்னு கேட்டா அவங்களும் மதிச்சு சொல்லல!!!!! இன்னொரு குட்டி சாத்தான் வந்து என் சாவித்திரி கூப்பிடறமாதிரி என்னை சக்தின்னு மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிடுது.... இதெல்லாம் நான் யார் கிட்ட போய் சொல்ல" என்று அவர் கவலை போல் பேசிக்கொண்டே போனார். 

 

இடையில் புகுந்து "என்னது நான் உனக்கு குட்டி சாத்தானா....?" என்று சண்டை கோழியாய் சிலுப்பிக்கொண்டு தன் தாத்தாவிடம் சண்டைக்கு போனாள் அந்த வீட்டின் கடைக்குட்டி யாழிசை. தான் வீட்டிற்கு வருவதை பற்றி தங்கள் வீட்டினர் யாவருக்கும் தெரியப்படுத்தாமல் இன்ப அதிர்ச்சி கொடுக்க, டெல்லியில் நள்ளிரவு கிளம்பி அந்த காலை வேளையிலே அவள் அங்கு வந்து சேர்ந்தால்..... அந்நேரத்தில் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் எவரையும் காணாமலே தன் குரலை உயர்த்தி தன் தந்தையை அழைத்திருந்தாள். 

 

அனைவரும் ஏதோ விசேஷத்திற்கு செல்வதை போல் உடுத்தியிருந்த ஆடை அவளை அப்படி கேள்வியும் கேட்க வைத்து விட்டது. "ஆமா டி.. நீ தான் குட்டி சாத்தான்... எங்க உயிரை வாங்க வந்திருக்க குட்டி சாத்தான்...." என்று அவள் அருகில் வந்து காதை திருகிய மீராநந்தனின் கையை பிடித்து நறுக்கென கடித்து வைத்தவள்.... "போடா மங்கூஸ் மண்டையா" என்று அவனிடமிருந்து வேகமாய் விலகி தன் தந்தையின் அருகே அமர்ந்துக்கொண்டாள். அவளை அடிக்க துரத்தியவன் தந்தையின் பார்வையை உணர்ந்து அமைதியானான். 

 

நந்தனோ "அப்பா கூட இருக்காருன்னு தைரியமா டி.... தனியா மாட்டுவல்ல அப்போ இருக்கு குட்டி சாத்தான் உனக்கு" என்று வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான். தந்தையின் முன் செல்ல சண்டைகளுக்கும் தடா தான். யாழ் அந்த வீட்டின் இளவரசி அல்லவா அவளிடம் அகல்யா மட்டுமே சிறுது கண்டிப்பை காட்டுவார். 'போய் குளிச்சு தயாராகி வா யாழ்.... வந்ததும் எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்க..... உன் ரூம்க்கு போ..." என்று விரட்டினார் அகல்யா. 

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.