ஹைக்கூ தொடங்கி நாவல் வரை
எதில் உன்னை மறைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள் !
உன்னிடம் சொல்லாத ஆசைகளை
கண்ணியமாய் எடுத்துரைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள் !
உன் இல்லாமை தரும் ஏக்கத்தில்
கொஞ்சம் கலங்கி எழுதினாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள் !
என்னை கவனிக்காத கண்கள் கூட
என் காதலை கவனித்து விடுகின்றன!
நீயோ இன்னமும் என் கவிதையில்
எழுத்துப்பிழையையும் இலக்கணப்பிழையையும்
சுட்டிக்காட்டி கொண்டிருக்கிறாய் !
மீண்டும் எச்சரிக்கிறேன் ..,
குற்றம் பார்க்கின் முத்தம் இல்லை !
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
என்னை ஞாபகம் இருக்கா? எவ்வளவு நாளாச்சு எழுத்துமூலம் சந்தித்து..திருமதிகள்:-வத்சலா..சித்ரா வி.சித்ரா..தேவி..ஜான்சி..அன்னா ஸ்வீட்டி..ராசு..தமிழ்த்தென்றல்..ஸ்ரீஜெயந்தி(ஜெய்)
மனோரமேஷ்..மதுஹனி..இன்னும் சில அன்புப் பிள்ளைகளின் பெயர் நெஞ்சிலுள்ளது ஞாபகம் வரமாட்டேன்கிறது..அவர்கள் மன்னிக்கவும்.நாம் அனைவரும் ப்ரிய சில்ஸீயில் எழுதுவோமே அந்தக்காலம் எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும்..இப்போது உங்கள் பெயரைப்பார்த்ததும் நினைவு அதிகமாகிறது..மீண்டும் அனைவரும் ஒன்றாய்ச்சேர்ந்து சில்ஸீயில் எழுத வேண்டும்போல் உள்ளது..அந்தக்காலம் திரும்பி வரவேண்டும் என ஆசையாய் உள்ளது..
உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும் புவனேஸ்வரி..