(Reading time: 1 - 2 minutes)

நல்லவேளையாக நான் ஒருதலை காதலியாய் இருக்கிறேன்..!


நீ என் அருகில் இருந்தேயாகவேண்டும்;
நீ என்னுடன் மட்டும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்;


நீ உன் அந்தரங்கங்களை கூட பகிர்ந்தேயாகவேண்டும்;
நீ எனக்கு பரிசுகளை தந்தேயாகவேண்டும்;


நீ என் பிறந்தநாளை நினைத்தேயாகவேண்டும்;
நீ எனக்காக பாடிக்கொண்டே இருக்க வேண்டும்;


நீ நான் ரசித்த புத்தகங்களை அறிந்தே ஆகவேண்டும்
நீ என் ஆண் நண்பர்களை புரிந்தே ஆக வேண்டும்;


நீ என் இரவுகளை நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும்
நீ என் அந்த மூன்று நாட்களில் என்னை சீராட்டியே ஆகவேண்டும்;


நீ கடும்கோபத்தில் கூட என்னை கொஞ்சியே ஆகவேண்டும்
நீ நான் வெட்கப்பட்டாலும் என்னை சீண்டிக்கொண்டே இருக்க வேண்டும்;


நீ எந்த காதல் பாடலை முணுமுணுத்தாலும் உடனே என்னை நினைக்க வேண்டும்;


இப்படியெல்லாம் ஆசைப்படும் நான்..,

உனக்கு பிடிக்காதவள் ஆகி இருப்பேன்!
இதையெல்லாம் நிறைவேற்றாத நீ..,

கல் நெஞ்சக்காரன் ஆகி இருப்பாய்!


நான் நானாகவும் நீ நீயாகவும் இருக்கும்வரை,
காதல் காதலாகவே இருக்கும்!
நல்லவேளையாக நான் ஒருதலை காதலியாய் இருக்கிறேன்..!

5 comments

  • குட் மார்னிங்! நெடுநாளாகிவிட்டது, தங்கள் படைப்பை படித்து! காத்திருந்ததற்கு, காவியமே கிடைத்துவிட்டது! நன்றி!
  • காத்திருந்தது, வீண்போகவில்லை! காவியமே கிடைத்துவிட்டது! கன்னிப்பெண் மனதை கிள்ளித் தந்நுவிட்டீர்கள்! பிரமாதம்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.