(Reading time: 1 minute)

0e24bc7e 0cb6 4926 b02e 7cac8fa9d450

உன்னையும் கவிதைகளாக வாசித்தபின்
உனக்குள் பொருளென வசிக்க வந்தேன் !

என் தமிழ்தாய்க்கு நீ செல்லமகன் ஆதலால்
காதலால் மரு "மகள் " ஆகிவிட்டேன் !

நீ திருத்தும் அழகை ரசித்திடவே
நான் பிழையுரு படைப்பாய் மாறிவிட்டேன் !

உன் நேரமின்மையில் கூட எனக்காய்
நிமிடங்கள் நேர்த்தியாய் திருடிவிட்டேன் !

தவறுகள் பல இழைத்து விட்டு
உன் புரிதலால் நானும் பிழைத்து கொண்டேன் !

இதயச் சிறையில் நீ அடைக்கும்வரை
இடைவிடாது இம்சை செய்வேன் !

 

2 comments

  • மிக மிக அருமை! அருமைச் சகோதரிக்கு என் பாராட்டு! பிரபல வார இதழ்களுக்கும் அனுப்புங்கள்! திரைப்பாடல்களும் எழுதுங்கள்! வெற்றி உமதே!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.