(Reading time: 3 - 5 minutes)

Chillzee KiMo Book Reviews - காதல் கள்வனே - ஸ்ரீ

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் ஸ்ரீயின் நாவல் ‘காதல் கள்வனே

 

கதை சம்மரி:

தையின் ஹீரோ எழிலமுதன். ஹீரோயின் பொழிலரசி.

எழிலமுதன், ஊரில் எல்லோரும் பெரிய வீட்டு ஐயா என்று மரியாதையுடன் அழைக்கும் மகேந்திரநாதனின் பேரன். கூட்டுக் குடும்பமாக சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒன்றாக வாழும் அந்த குடும்பத்தில் அன்பிற்கும், பாசத்திற்கும் எப்போதும் பஞ்சமில்லை.

பதின்ம வயதில் தன் உயிரைக் காப்பாற்றிய பொழிலரசியின் மீது மனதிற்குள் காதல் வைத்திருக்கிறான் எழிலமுதன். அம்மா இறந்த உடன் பொழிலரசி அந்த ஊரை விட்டு சென்று விடுகிறாள். அவள் எங்கே போனாள் என்று தெரியாமல், வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தன் காதலை மனதிற்குள்ளேயே வளர்ந்துக் கொண்டிருக்கிறான் எழிலமுதன்.

வருடங்கள் கடந்துப் போக, மீண்டும் பொழிலரசியை சந்திக்கிறான். அவளுக்கு திருமணம் நடந்து கசப்பான கனவுப் போல முடிந்தும் போய் விட்டதை தெரிந்துக் கொள்கிறான். அவளையே திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.

அவனுடைய ஆசையை அவனுடைய குடும்ப பெரியவர்கள் மட்டும் இல்லாமல் பொழிலரசியும் கூட ஏற்க மறுக்கிறாள். இருந்தாலும் பெரியவர்கள் அன்பிற்கு அடிப்பணிந்து வந்து விடவும், பொழிலரசியும் நண்பனாக பார்த்திருப்பவனை திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்.

எழிலமுதனின் அன்பு பொழிலரசியின் மனதிலும் காதலை வர வைத்ததா? அவர்களின் திருமண வாழ்வு வெற்றிப் பெற்றதா என்பது மீதிக் கதை.

 

தையில் வரும் நிறைய கேரக்டர்களில், தாத்தா பாட்டி தொடங்கி எழிலமுதனின் நண்பன் என அனைவருமே மனதை கவருகிறார்கள். ஹீரோ எழிலமுதன் தன்னுடைய கண்ணியமான முறைகளால் மனசில் தங்குகிறார். பொழிலரசியிடம் அவர் காட்டும் அன்பும், அக்கறையும், காதலும், 'வாட் அ ஜென்டில் ரொமான்டிக் ஹீரோ' என்று சொல்ல வைக்கிறது.

பெரிய கூட்டுக் குடும்பம்  சுற்றிய கதை என்பதால் உறவினர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் தெரிந்து வைத்துக் கொள்வதும், எந்த முறை உறவு என்பதை நினைவில் வைத்துக் கொள்வதும் சேலஞ்சிங் ஆக இருக்கிறது. இருந்தாலும் அது கதை போக்கில் எந்த விதமான ஸ்பீட் ப்ரேக்கையும் கொடுக்காதது அருமை.

லக்கி பொழிலரசி நீங்க என்று என்று சொல்ல வைக்கும் அளவிற்கு அருமையான குடும்பம் பொழிலரசிக்கு கிடைப்பது மனதிற்கு இதமளிக்கிறது.

தாமிரபரணி ஊர் பக்க தமிழில் கதை அதே இனிமையுடன் துள்ளி நடைப் போடுகிறது.

 

மொத்தத்தில் குடும்பம், அன்பு, பாசம், காதல் என்று நகரும் அழகிய ரொமாண்டிக் கதை.

 

கதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.

 

அடுத்து பிந்து வினோத்தின் ‘எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...!’ நாவல் சம்மரியுடன் சந்திப்போம்.

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.