Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல் பொன் அந்திச் சாரல் நீ...’
கதையின் ஹீரோயின் நிஷா, ஹீரோ பரத்!
அம்மா, அப்பா, தம்பி என்ற ந்யூக்ளியர் ஆனால் சந்தோஷமான குடும்பம் நிஷாவுடையது. நிஷாவிற்கும் டாக்டர் பரத்திற்கும் திருமண பேச்சு தொடங்குகிறது. இருவருக்கும் பிடித்து போகிறது. சிறுவனாக இருக்கும் போதே பெற்றோரை இழந்து விட்ட பரத்தை அவனுடைய மாமா ராஜேந்திரன் வளர்கிறார். எதை செய்தாலும் தன்னை தானே முன்னிலை படுத்திக் கொள்பவர் ராஜேந்திரன். அது தெரிந்திருந்தாலும் வளர்த்த பாசத்திற்காக அவரை அப்படியே அரவணைத்து அன்பாக நடந்துக் கொள்கிறான் பரத்.
நிஷாவுடைய அம்மாவிற்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போகிறது. அப்போது ஆபரேஷன் செய்யும் ராஜேந்திரனின் தவறால் நிஷாவின் அம்மா இறந்து விடுகிறார்கள். மாமாவை பற்றி தெரிந்த பரத் அந்த பழியை தன் தலையில் போட்டுக் கொள்கிறான்.
மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் நிஷாவின் அப்பாவும் தற்கொலை செய்துக் கொள்கிறார். அப்பா பேரில் இருந்த கடனால் வீடு, சொத்து, பணம் என்று அனைத்தையும் இழந்து அக்காவும் தம்பியும் நிற்கிறார்கள். அப்போது தூரத்து சொந்தம் முத்துலட்சுமி அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள்.
ராஜேந்திரன் நிஷாவிற்கும் அவளுடைய தம்பிக்கும் உதவுவார் என்று எதிர்பார்க்கிறான் பரத். அது நடக்காமல் போகவும் வெறுத்துப் போய் அந்த வீட்டில் வை செய்யும் சின்னையாவுடன் வீட்டை விட்டு வெளியே போகிறான்.
அம்மாவின் சாவிற்கு காரணமானவன் என்று பரத் மீது வெறுப்புடன் இருக்கும் நிஷாவும், பரத்தும் இணைந்தார்களா இல்லையா என்பது மீதிக் கதை.
கதையின் முக்கிய கேரக்டராக வரும் பரத், முத்துலட்சுமி, சின்னையா மனதில் நிற்கிறார்கள்.
கதையில் ஆங்காங்கே சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கலாக இருகிறது!
மற்றபடி ஒரே ப்ளோவில் கதை செல்வதால் முழு மூச்சாக அதை படித்து முடிக்கும் ஆர்வத்தை கொடுக்கிறது. .
மொத்தத்தில், குடும்பம் & காதல் வகை கதை வாசகர்களை கவரும் நல்ல ஒரு கதை.
கதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.
அடுத்து Chillzee KiMo T-E-N கான்டஸ்ட் நாவல் அர்ச்சனா நித்தியானந்தமின் ‘தாய்க்கிணறு’ சம்மரியுடன் சந்திப்போம்.
- அபூர்வா