(Reading time: 3 - 5 minutes)
வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

Chillzee KiMo Book Reviews - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - பிந்து வினோத்

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பிந்து வினோத்தின் நாவல் 'வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே'.

நம் Chillzeeயில் தொடர்கதையாக வந்து, இப்போது Chillzee KiMoவில் நாவலாக பப்ளிஷ் ஆகி இருக்கும் கதை இது. 

 

கதை சம்மரி:

தையின் ஹீரோ ஆகாஷ், ஹீரோயின் சினேகா.

சுபாஷினி - பிரகாஷ் தம்பதிகளின் க்ளோஸ் பிரென்ட்ஸ் ஜோதி - வசீகரன் தம்பதிகள். அவர்களுடைய நட்பை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல சுபாஷினி - பிரகாஷின் மகன் ஆகாஷிற்கு, ஜோதி - வசீகரனின் மகள் அக்ஷ்ராவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறர்கள்.

எங்கேஜ்மென்ட் நடந்து திருமண நாள் நிச்சயம் செய்ததற்குப் பின் சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். Cupid அம்பு விடவும் அவளை காதலிக்கிறான். பெரியவர்களிடமும், அக்ஷராவிடமும் இதை எப்படி சொல்வது என்று புரியாமல் தத்தளிக்கிறான்.

சினேகாவும் ஆகாஷை விரும்புகிறாள். ஆகாஷிற்கு அக்ஷ்ராவுடன் கல்யாணம் நடக்க இருப்பது தெரிய வரவும், காதலை மனசுக்குள்ளேயே பூட்டி வைக்கிறாள்.

சினேகா, ஆகாஷ் காதல் கல்யாணத்தில் முடிந்ததா? பெரியவர்கள் & அக்ஷரா அதற்கு சம்மதித்தார்களா என்பது மீதிக் கதை.

   

தாபாத்திரங்களில் சுபாஷினி, ஜோதி, ஆகாஷ், சினேகா மனதில் தங்குகிறார்கள்.

காதல் கதையில் -  ஒருத்தரும் ஹர்ட் ஆகாமல் ஹீரோ ஹீரோயின் ஒன்று சேர முடியுமா - என்று த்ரில்லர் genre அளவுக்கு எடுத்துக் கொண்டு போயிருப்பது ரசிக்க வைக்கிறது.

 

எத்தனை காரணம் இருந்தாலும் ஆகாஷ் சினேகாவிடம் சீக்கிரமே ப்ரொபோஸ் செய்திருக்கலாம் என்ற கேள்வி வருவதை தடுக்க முடியவில்லை.

 

பெரியவர்களுடைய மனதை காயப் படுத்தி விடக் கூடாது என்று ஆகாஷ் யோசிப்பதைப் போல இந்த ஜெனரேஷனில் எவ்வளவுப் பேர் யோசிப்பார்கள் என்று தெரியவில்லை. கதையை படிக்கும் அம்மா-க்களின் பேவரைட்டாக ஆகாஷ் இருந்தால் ஆச்சர்யம் இல்லை.

 

மொத்தத்தில், குடும்பத்தினர் அனைவரையும் சந்தோஷமாக வைக்கும், குடும்பம் & காதல் வகையைச் சார்ந்த நல்ல ஒரு கதை.

 

கதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.

 

டுத்து Chillzee KiMo வில் வெளியாகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பத்மினி செல்வராஜின் 'தவமின்றி கிடைத்த வரமே' நாவல் சம்மரியுடன் சந்திப்போம்.

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே போலவே இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள்.

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.