(Reading time: 11 - 21 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 07 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

" துக்கும் இதுக்கும் முடிபோடாதே பானூ! இரண்டு மனுஷங்க ஒரே மாதிரியா எப்படி நடந்துக்கமுடியும்? நேத்து மாமா என்னெப் பொம்பளேன்னு எப்படி கேலி பண்ணாரு பாத்தியா? நான் சிகரெட் புடிக்கற் தில் லேன்னு, சீட்டாட மாட்டேன்னு, எனக்கு எந்தப் பழக்கமும் இல்லேன்னுதானே அவரோட எண்ணம்? கெட்ட பழக்கங்களுக்குத் தூரமா இருக்கறவன் உலகத்தின் பார்வையிலே திறமெயில்லாதவன்! கோழெ! அதுக்காகத்தான் ரொம்ப பேர் ஏதோ பெருமெக்காகத் தமாஷா பொழுதுபோக்கற்துக்குப் பழக்கப் படுத்திக்கிறாங்க. அதெல்லாம் அவங்க அவங்க மனத் தத்துவப்படி இருக்குதுன்னு வெச்சிக்கோ-- நான் சொல்றது என்னன்னா காலத்தோடு கலந்து வந்து சேர்ற இந்த மாதிரி விஷயத்தெ எல்லாம் சாதாரணமாவே எடுத்துக்கணுமே தவர, கெட்டதுன்னு முடிவு செஞ்சிடக்கூடாது. மானம் மரியாதெகள்ளேயும், கட்டிக்கற்து பொட்டு வெச்சிக்கற ஸ்டயில்லே எல்லாம் அசிங்கமா வர்ற பொண்ணுங்க எத்தனெ பேர் இல்லே பானு! அந்த நைலான் புடவெங்க உடம்பு முழுதும் விதவிதமான சாயங்க. கூந்தலெ வெட்டிக்கற்து, ஒவ்வொரு ஆம்பளெயோடும் உரசிக்கிட்டு சுத்தற்து இதையெல்லாம் பாத்தா அவங்களெ எவ்வளவு மட்டமா நினெக்கணும்னு சொல்றே?ஆனா உண்மையா அப்படி நினெக்கறமா? காலம் மாறிட்டது.வேஷத்திலும் மொழியிலும் கூட மாறுதல் வந்துட்டது.அவங்க அவங்க விருப்பப்படி அலங்காரம் பண்ணிக்கறாங்கன்னு நினெச்சி சமதானப் படுத்திக்கிறெ இல்லியா? அந்த மாதிரியே ஆம்பளெங்க பழக்க வழக்கங்ககூட -- இருந்தாலும் இந்தக் கெட்ட பழக்கங்களெ ஆம்பளெங்க மட்டுமே பழக்கப் படுத்திக்கிறாங்கன்னு நீ நினெச்சிக்கிறியே தவர, சிகரெட் புடிச்சிகிட்டு, ஆம்பளெகளெ மிஞ்சிச் சீட்டாடும் 'சொஸைட்டி லேடீஸ்' எத்தனெ பேரெக் காட்டச் சொல்றே?"

 

"தேவெ யில்லே--அப்படிப்பட்டவங்க இல்லேன்னு நான் எப்பவும் சொல்லல்லே. நான் இனப் பற்றோடு பேசல்லே. தப்புங்கற்து யார் பண்ணாலும் தப்புதான்! பொம்பளெங்க விஷயத்தலே நீ எடுத்துச் சொன்ன அவலட்சணங்க எதுவும் என்கிட்டே இல்லேன்னு நான் நினெச்சிட் டிருக்கிறேன்; அது உனக்கும் தெரியும். மாமா எனக்குக் கல்யாணப் புடவெகள்ளே ஒரு நைலான் புடவெகூட வாங்கித் தந்தார். அதெக் கட்டிக்கற்து எனக்குப் புடிக்காது; ஆனா மாமாவுக்காக நாலெஞ்சி முறெ கட்டிக்கிட்டேன். இப்பவும் அப்படியே இருக்குது. நான் பாஷனா மேக்அப் பண்ணிக்கற்தில்லேன்னு, ஆடம்பர மில்லாமெ இருக்கறேன்னு மாமாவுக்குப் புடிக்காது. மாமாவின் விபரீதமான பழக்கங்க எனக்குப் புடிக்காது. நீ சொன்னபடி ஓரளவுன்னா தாங்கிக்கலாம். எதெச் செஞ்சாலும் அதிகமாப் போகாத வரெக்கும் நல்ல பழக்கம், போயிட்டா கெட்ட பழக்கம். இல்லேங்கறியா? பண்டிகெ நாள் ஒருவேளெ புருஷ னோட இருக்கணுங்கற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.