(Reading time: 10 - 20 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

எல்லார் முன்னாலே தூக்கிஎறிஞ்சிப் பேசிடுவார். ஒண்ணு ரெண்டுதரம் அப்படி ஆனப்புறம் நான் சாக்கரதெயா இருந்து வர்றேன்.

சொல்லப்போனா அந்தச் சிநேகிதங்க மேல அவருக்கேநல்ல அபிப்ராயம் கிடெயாது. அவங்ககிட்டெ நான்அதிகமாப் பேசக்கூடாது. அவங்க என் கிட்டெ பேச்சுக்குடுப்பாங்க. ஏதோ பதில் சொல்லி ரெண்டு வார்த்தெபேசாமப் போனா நல்லா இருக்குதா?"

" முதல்லே அவங்களெ ஏன் அழெச்சிட்டு வரணும்?"

" பெருமெக்காக-- ஒவ்வொரு தடவெ அவங்களுக்குஅவங்களே வந்து உக்காந்துடறாங்க. அவங்க யார்சிநேகிதங்க? இவங்கெல்லாம் ஒரு குட்டையிலெ ஊற்னமட்டைங்கதானே?"

" மாமா யார் வீட்டுக்கும் போகமாட்டாரா? அங்கெபொம்பளெங்களோட பேசமாட்டாரா?"

" நீ மத்த பொம்பிளெங்களோட சிரிச்சிக்கிட்டெ பேசலாம். வேண்டிய நேரம் பேசிக்கிட்டெ இருக்கலாம்.காரணம் நீ நெருப்புத் துண்டுபோல இருக்கறவன்.ஆனா உன் மனெவியெ ஆண் ஈ கூடத் தொடக்கூடாது.வேறொரு ஆம்பிளெ கண் எடுத்துக்கூடப் பாக்கக் கூடாது.என்னவோ--யார் எப்படிப் பட்டவனோ! இவ்வளவுக்கும் உன் மனெவி மேலெ, நீ உயிரெ வெச்சிருக்கும்அந்தச் சிநேகிதங்க மேலெ நம்பிக்கை ஏது? உன்மனெவிக்கு மனுஷத்தன்மெ இருக்குதுங்கற அறிவு ஏது?உன்னெ உன் சிநேகிதங்க தப்பா நினெச்சிக்கவாங்களேங்கிற நினெப்பு ஏது?"

" அப்பொ எந்தச் சிறப்பும் குடுக்காம இருந்தா படிச்ச மனெவி வேணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்டது எதுக்காம்?"

" கௌரவத்துக்கு--பத்துப் பேர் நடுவுலே தனக்குஒரு கார், ஒரு அல்சேஷியன் நாய் இருக்குதுன்னு சொல்றாப் போல படிச்ச மனெவி இருக்கறான்னு சொல்லிக்கற்துக்கு. கல்யாணத்துக்கு முன்னாலெ படிச்ச பெண்ணுங்கமேலெ அது ஒரு மாதிரியான மவுசு. சொற்பொழிவுகள்ளெ பெண்ணுக்குச் சுதந்தரம் கொடுத்துடறது, செத்துசொர்க்கத்தலெ இருக்கறவங்களெ இகழ்ந்து பேசற்து,பெண் வர்க்கத்தின் மேலெ அபாரமான இரக்கத்தெக்கொட்றது--எல்லாம் அந்தச் சூட்டிலேயே முடிஞ்சுபோவுது. கல்யாணமாயி குடும்பம் வெக்கற்துக் குள்ளெஆத்தரம், கோவம், வீறாப்பு--இதுதான் முடிவு. புருஷன்மனெவி, ஆண் பெண் இதுதான் மிச்சம். -- இனிமேஅந்த வேறுபாடுங்க அப்படியே இருக்க வேண்டியதுதான்.

ஒரு பெண் தனக்கு மனெவி ஆனப்புறம் அந்த மனுஷியிடம் எந்த அளவு நியாயமா நடந்துக்கறோம்னு நினெச்சிப் பாக்கறவங்க எத்தனெ பேரு? அவளுக்கு அபிப்ராயங்க இருக்கும், விருப்பங்க இருக்கும், முடிவுங்க இருக்கும், எல்லாத்துக்கும் மேலெ மனுசுன்னு ஒண்ணு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.