(Reading time: 10 - 20 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

இருக்கும். அதையெல்லாம் ஒத்துக்கறவங்க எத்தனெபேரு?

மனெவி ஆனப்புறம் அந்தப் படிப்பு மேலெ மட்டமானபார்வெ! ஓவ்வொரு இடத்தலெ பொறாமைகூட-- பொம்பளெ சொந்தமா யோசனெ பண்ணினா, செஞ்ச தப்பெஎடுத்துச் சொன்னா, பேச்சுக்குச் சரியான பதில்சொன்னா, அதெல்லாம் படிப்பினாலே வந்து சேந்தகர்வங்க-- தர்க்கம் பண்றா, எதுத்துப் பேசறா, ஆம்பளெமதிப்பையெ மறந்துபோறா.

பொண்ணுங் கென்னமோ பாக்கற்துக்கு நவநாகரிகமாஅழகா சினிமா நட்சத்தறங்களெத் தோக்கடிக்கறா மாதிரி, சுவர்க்கத்தலெ மிதக்க வெக்கறா மாதிரி தயாராகணும்.ஆனா மனோபாவங்க, பழக்கவழக்கங்க, வேலெ செய்றமுறைங்க இதுலெல்லாம் பழங்காலப் பொண்ணுங்களோடபோட்டி போடணும். அந்தக் கால அம்மாமி மாதிரிகோடாலு முடிச்சி போட்டு மடிசாரெ வெச்சி பொடவெகட்டினா எந்த ஆம்பளெ இஷ்டப்படறான்? வேஷத்தலேயும் பாஷன்லேயும் நாகரிகத்தெ விரும்பற மனுஷன்பொம்பளெய மானசீகமாகக்கூட வளரவிட ஏன் மறுக்கறான்? அம்மாமி லட்சணங்க இல்லாத காலத்தலெ அம்மாமியின் மனோபாவங்களும் இருக்காது. அதெ ஏன்ஒத்துக்க மாட்டேங்கறான்?"

"பானூ! கொஞ்ச பேர் பண்ற குத்தத்தெ ஏன்மொத்தமா இனத்தின் மேலே சுமத்தறே?"

"நான் எப்பவும் அப்படி முறெ தவறி பேசமாட்டேன்.போவட்டும், அந்தக் கொஞ்சபேர் பேச்சு என்னஆவற்து?"

"அவ்வளவு குறுகலான போக்கு உள்ளவங்க இருப்பாங்கன்னு நான் நினெக்க மாட்டேன்."

"இருக்காங்க - உன் இனப்பற்றெ விட்டுட்டு பாரு----பொண்ணெத் தனக்குச் சமமாக் கருதற்தில்லே. பொம்பளெ எப்படியும் குறைஞ்சவ. ஆம்பளெ அதிகாரம்பண்ணணும். நான் புஸ்தகம் படிக்கக் கூடாது. இங்கிலீஷ் சினிமா பாக்கக் கூடாது. தெருவாசப்படியெலெநிக்கக்கூடாது. மத்த ஆம்பளெங்களோடெ பேசக்கூடாது. பேசினாலும் அந்தச் சமயத்தலெ சிரிக்கக்கூடாது. போதுமா? என்னெ ஒரு பொருள் மாதிரிசாக்கரதெயா வெச்சிக்கணுங்கற அக்கறெயே தவர வேறஇதெல்லாம் என்ன? எனக்கும் கொஞ்சம் நல்லது கெட்டது தெரிஞ்சிக்கக்க் கூடிய சக்தி இருக்குதுன்னு நம்பி என்கடமெங்களெ ஏன் என்கிட்டவெ விட்டுடக் கூடாது?"

நான் ஒன்றும் பேசவில்லை.

"ஒரு எழுத்தாளனோட புத்தகங்களெப் படிக்கறோம்.அவர் போக்கு நமக்கு பிடிக்கலேன்னா நிறுத்திட்றோம்.சில வகையான சினிமாங்க பாக்கறோம். பிடிக்காததெஇன்னொரு தடவெ பாக்க முயற்சிபண்ண மாட்டோம்.சில ஆம்பளெங்களோட பேசறோம். அவங்களெப் புரிஞ்சிக்கிட்டு நம்ம சாக்கரதெயிலெ நாம் இருந்துட்டுப்போறோம். நான் சொல்ற அந்தச் சில

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.