(Reading time: 9 - 18 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

ஒருவிதமாமாமாவே பேச வெக்கறார்."

"மாமாவிடம் நல்லதனம்கூட இல்லாம போவலெபானு! அதெ நீ ஊகிச்சியா?"

"ஒரு பானெ விஷத்தலே எவ்வளவு அமிர்தம் கலந்தாலும் அது வீணாப்போற்து தவர லாபமில்லே அண்ணா!மாமாவிடம் ஏதோ நல்லதனம் இருந்தா இருக்கலாம்.அது என் அனுபவத்தலெ தெரியவரல்லெ. இன்னொருமனுஷன் கிட்டெ இருந்து நல்லதெ அடையலாம்னு, சுகம்பெறலாம்னுதானே முயற்சி பண்றோம்? அதுவே நடக்காம போவறப்பொ என்னத்தப் பாத்து என்னெ சந்தோஷப்படச் சொல்றே? இன்னக்கி ஏதோ காரணமாக ஒருமணி நேரம் சந்தோஷமா இருந்தேன்னா... அப்புறம்கொஞ்ச நாள் வரெக்கும் வேறேதோ காரணமாக அந்தச்சந்தோஷத்துக்குத் தண்டனெ அனுபவிக்கிறேன்."

"மாமா நல்லது கெட்டது தெரியாம இருக்காரு பானூ!நீ மட்டும் ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சி மூளையைக் குழப்பிக்காதே. அவர் கோவத்திலெ சொல்றஒவ்வொரு சொல்லும் நிஜம்னு நினெச்சி வேதனெபடாதே. ஒரி நாளக்கி மாமா முழுசா மாறிப் போயிடுவார் பானூ!"

பானு பேசவில்லை. நான் மீண்டும் சொன்னேன்-"மாமா வளந்த வளர்ப்புத்தான் அவ்வளவு கடுமெயானவரா, தனிக்காட்டு ராஜாவா ஆக்கியிருக்குது. நீ வர்றவரெக்கும் அவருக்கு எந்த விதத்தலேயும் பெண் அன்புஎன்பது தெரியாது. தாயின் அரவணைப்பிலெ, அக்காதங்கெ பாசத்துக் கிடையிலெ வளந்தா பொம்பளெங்களின் கஷ்ட சுகங்க புரிஞ்சுருக்கும் ஆனா அவருக்குநல்லது கெட்டது சொல்றவங்களும் இல்லெ. செஞ்சதப்புக்குத் தண்டனெ குடுக்கறவங்களும் இல்லெ. தறுதலெயாத் திரிஞ்சி வளந்த மனுஷனுக்கு நல்ல பழக்கங்கஎப்படி வரும் சொல்லு? நாம ஒரு மனிதனெ அவசரப்பட்டு ஒதுக்கிடக் கூடாது. ஏதோ ஒரு விதமா அவரெமாத்தற்தக்கே நீ முயற்சி பண்ணனும். அதெத்தான்செய்யற்தில்லே நீ. ஒரு தப்பு பண்ணினார்னு குறெசொல்றது, ஒரு சொல் சொன்னார்னு வேதனெப்பட்றது,அத்தோட அடம் பிடிச்சி உக்காந்துட்றது - இதெல்லாம்என்ன சொல்லு? நீ என்னெத் தப்பா நினெச்சிக்காதே.நான் சொன்னது சரியில்லேங்கறியா? யோசிச்சி பார்பானூ!"

"அண்ணா! என் மேலெ உனக்கு எந்த அளவுநம்பிக்கெ இருந்தாலும் நான் சொல்றதெ நிஜம்னுநம்புவெ. மாமாவெ மாத்தற்துக்கு நான் முயற்சியேபண்ணலேன்னு சொல்றே. அதுமட்டும் உண்மையில்லே. நான் எத்தனையோ ஆசிகளோட குடுத்தனம்பண்ண வந்தேன். கொஞ்சநாளு----நான் ஒண்ணும் தெரிஞ்சிக்காம இருந்த நாளு சுகமா நடந்தது. ஆனா போவப் போவ மாமான்னா என்னங்கற்து புரிய ஆரம்பிச்சது. ஒரு நாளெக்கி அஞ்சி பாக்கட் சிகரெட் புடிச்சிட்டிருந்தா, நடுராத்ரிக் கப்புறம் வீட்டுக்கு வந்துட்டிருந்தா, லீவு நாளு முழுசா இருக்கற இடம் தெரியாம திரிஞ்சிட் டிருந்தா, எந்த அளவு சின்ன பிசகு நடந்துட்டாலும் அன்பே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.