(Reading time: 12 - 24 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 16 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

வளுக்கு என்னெப் புடிக்காது----ஆனாலும் பாமா பாட்டியோட நான் பேசறேன்னு அவளுக்கு என்மேலே கோபம். பாவம் பாமா பாட்டி ரொம்ப நல்லவங்க அண்ணா! தன் தொல்லெங்க என்னவோ சொல்லி எனக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டிருப்பாங்க ‘இருந்தாலும் பொம்பளேன்னா ஆம்பளெக்கு ஏன் அவ்வளவு மட்டமாத் தெரியுது பாட்டி’ன்னு நான் கேட்டா, ’அய்யோ பைத்தியக்காரப் பொண்ணே! இன்னும் இந்தக்காலத்திலே என்ன இருக்குது? எங்கேயோ உன் புருஷனெப் போல ஒர்த்தர் ரெண்டுபேர் தவிர எல்லாரும் பொண்சாதியெத் தலெ மேலே வெச்சிக்கிறாங்க. எங்கக் காலத்திலெ பாக்கணும். ஒரு தடவெ நான் ஆசெப்பட்டு சினிமா பாக்கறத்துக்கு போனேம்மா! அப்போது தான் சினிமா புதுசா வந்த நாளு. சினிமாவுக்குப் போறதுன்னா அந்தக் காலத்தலே பெரிய தப்பா இருந்தது. உங்க தாத்தாவுக்குக் கொஞ்சம் கூடப் புடிக்காது. ஒரு நாளு அவர் வெளியூருக்குப் போயிருக்காரேன்னு நாலு பேரோட சேந்து நானும் பொறப்பட்டேன். முழுசா பத்துப் படம் பாக்கலே.அவர் ஊரிலேயிருந்து வந்து எனக்காக சினிமா கொட்டாய் கிட்டே வந்துட்டாரு. நீ நிஜமா நம்பமாட்டேன்னாலும், இந்தத் தலை மயிரெப் புடிச்சி பத்துப் பேர்லே இழுத்துட்டு வந்து ‘தேவடியா ஆட்டம் பாக்கியா முண்டே’ன்னு சொல்லி, தெரு நெடுக்க உதெச்சிக்கிட்டே கூட்டிட்டு வந்தாரு. வீட்லெ வெச்சி மயக்கம் போட்டு விழறவரெக்கும் அடிச்சாரு. அந்த பயத்தலெ நான் ரொம்ப சீக்கா யிட்டேன்'னு பாமா பாட்டி சாதாரணமாச் செல்லிட்டிருந்தா. என் உடம்பு நடுங்கத் தொடங்கிட்டது.

' ஏன் பாட்டி! அவ்வளவு அவமானத்தெ நீங்க எப்படித் தாங்கிக் கிட்டீங்க?'

' அவமானத்துக்கு என்ன இருக்குது? புருஷன் பெண் சாதியெ இல்லென்னா யாரெ அடிப்பான் ?'

' யாரெயாவது ஒருத்தரெ அடிச்சிதான் ஆகனுமா பாட்டி?'

' இல்லேன்னு வெச்சிக்கொ--ஏதோ நான் தப்பு பண்ணேன். அவருக்குப் புடிக்காதுன்னு தெரிஞ்சி கூடப் போனேன். கோவத்தலே நாலு போட்டாரு. போவட்டுமே! இன்னா போயிட்டுது?'ன்னு சொல்லிட்டா பாமா பாட்டி--பாத்தியா? அந்தக் காலத்துப் பொண்ணெயும், அந்த மனோபாவத்தெயும்!

' பாட்டி! நீங்க செஞ்சது தப்பில்லிங்க!'ன்னு சொன்னா அவங்க நம்ப மாட்டாங்க. புருஷனுக்கு இஷ்ட மில்லாத வேலெயெச் செஞ்சேன்னும், அது தப்புதான்னும் வாதிக்கறாங்க. பாமா பாட்டிக்கும் எனக்கும் சில நூறு மடங்கு வித்தியாசம் இருக்குது. உங்க மாமாக்குச் சலம் புத்தகங்க இஷ்ட மில்லே. என்னெக் கூடப் படிக்கக்கூடாதுன்னு உத்தரவு போட்றாரு. நான் கேக்கமாட்டேன். எதிர்லே படிக்கற தைரியம் இல்லேன்னா ரகசியமாப் படிக்கறேன். இப்பொ வந்த சிக்கல் என்னன்னா பொம்பளெ யோசிக்க கத்துகிட்டா. சில சொந்த அபிப்ராயங்களெ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.