(Reading time: 21 - 41 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

னாக்கணும்னு பாக்கறீங்களா? என் உதவியில்லாம எல்லா வேலெயும் அவன் மூலமா செய்துக்கறியா? அவன் உன்னெக் காப் பாத்துவானா?' ன்னு பேசிட்டே போனாரு. பாரு. நான் பேனா சங்கதி அவர்கிட்டெ சொல்லலேன்னு என் மெல ஆத்தரம். தப்புன்னு முடிவு பண்ணிட்டா தப்புதான்! ஆனா நான் அப்படி ஏன் செய்தேங்கற்துக்குக் காரணத்தெ நானே சொன்னேன். ' நான் எதெக் கேட்டாலும் நீங்க காதுலெ போட்டுக்கற் தில்லே. லைப்ரரியிலே இருந்து புத்தகங்க கொண்டுவரச் சொன்னேன். கேக்கலெ. கலர் நூலு வாங்கிக் குடுக்கச் சொன்னேன். வாங்கல்லெ. கடிதம் எழுதற்துக்குக் கார்டுகூட வீட்லெ இல்லேன்னா காதுலெ போட்டுக்கலெ. நான் எப்பொ எது கேட்டாலும் நடக்கலெ. அப்பொ எந்த நம்பிக்கையிலெ பேனா சங்கதி உங்ககிட்டே சொல்லணுங்கறீங்க? நீங்க செய்ய மாட்டீங்கன்னு தெரிஞ்சப்பொ எங்க அண்ணன்கிட்ட குடுத்தா என்ன தப்பு?"

'வாயெ மூடு!...ராஸ்கல்! முண்டெ ஸ்கூல் படிப்பெ வெளியே காட்டி உன் சாமர்த்தியத்தெக் கொட்டறியா! என்னாலெ முடிஞ்சா செய்றேன். இல்லேன்னா இல்லெ. நீ என்ன ஆம்பளேன்னு நிலை நாட்டிக்கப் போறியா? உனக்குச் சலாம் போட்டுட்டு சொல்ற தெல்லாம் செய்யற்துக்கு நீ என்ன மகாராணியா?' பாத்தியா? நான் எப்படி மகாராணி ஆவேன்? மகாராணியா இருந்தா இப்படி உன் முன்னாலெ ஏன் தலை குனிஞ்சிக்கறேன்? மகாராணி உனக்கு உன் மனெவியெவிட ஒசத்தியா?"

"நீ மகாராஜா ஆனா, நான் மகாராணி ஆவேன்னு சொல்லி யிருக்கணும்" என்றேன் நான் கோபத்துடன்.

"நான் அப்படி பேச்சுக்குப் பேச்சு வளக்க மாட்டேன். எனக்குப் புடிக்காத விஷயங்களுக்கு நான் திலே சொல்ல மாட்டேன். எனக்கு ஒண்ணும் பேசற்துக்கு இஷ்ட மில்லாம தலை குனிஞ்சிட்டு உக்காந்திட்டேன்.

'நீ பொம்பளேங்கற்தெ ஞாபகம் வெச்சுக்கோ! நான் ஆம்பளெ, உனக்குப் புருஷனே தவர வேலெக்காரனில்லே. தெரிஞ்சிதா பானுமதிதேவி.!' கடவுளே! அடிக்கடி இந்தக் கொதிப்பு, பரிகாசம், அதிகாரம், இந்த நரகத்தெ நான்...நான் தாங்க முடியாதுன்னு சொல்லிக்கிட்டெ அழுதேன். ஆடிக்கிட்டே வந்த பாபு கழுத்தெச் சுத்தி கையெப் போட்டு மேலெ விழற வரெக்கும் அழுதுகிட்டெ உக்காந் திருந்தேன். பாபு பிஞ்சி கையாலெ கண்ணெத் தொடெக்கும் போது..."

"நல்லா இருக்குது பானூ! இனியே நான் வர்றது போறெதெ நிறுத்திகற்து நல்லதுன்னு நினெக்கறேன்."

"அண்ணா! நீ வர்லேன்னா பாபு, நானு..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.