(Reading time: 21 - 41 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

நான் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள முயற்சிக்க வில்லை.

பானு சொன்னாள்--" என்னெ ஒருத்தர் ஆதரிக்கறார் எங்கற நன்றி உணர்ச்சி எத்தனெ நாளக்கிக் குடும்பத்தலெ ஒட்டி வெக்கும்னு சொல்றே?"

நான் ஒன்றும் பேசவில்லை.

"காலெயிலெ யிருந்து சோறு சாப்பட மனசு வராம சும்மாவே இருந்தேன். இப்பவும் எனக்குப் புடிக்கலெ" என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் கிளாசைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

" பானு!... என்ன அது?" என்று சொல்வதற்குள் கைமேல் தண்ணீர் ஊற்றிக் கொண்டாள். " போதும் அண்ணா! நாளெக்கி எழுந்து வேலெ செய்யற்துக்கு இப்பொ சாப்டது போதும்,"

சற்று நேரம் மௌனமாகக் கடந்தது.

"அண்ணா! லட்சுமி அத்தெயப் பற்றி உனக்குத் தெரியுமா?" என்றாள் பானு, என்னை மீண்டும் பேச வைப்பதற்கு.

"எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனா ஏதோ வேண்டிக்கிட்டு செத்துப் போயிட்டாங்கன்னு சொல்வாங்க. அந்த அத்தெதானே!"

"ஆமாம், கடவுளெ வேண்டிக்கிட்டு நோயெ வரவுழெச்சிக்கிட்டு செத்துப் போயிட்ட அத்தெ தான்! ரொம்ப அதிர்ஷ்டக்காரி!"

"ராத்ரியிலெ வாசல்லெ படுத்துக்கும்போது அத்தெயெப்பத்தி பாட்டி சொல்லிட்டிருந்தா என்னக்கி கேட்டாலும் அன்னக்கிப் புதுசா இருக்கும். கேக்கக் கேக்க என்னன்னு சொல்ல முடியாத ஆவேசம் கரெ புரண்டு வரும்."

"அத்தெ விஷயங்க உனக்கு நல்லாத் தெரியும்னு நினெக்கறேன். மாமியார் வீட்லெ ரெம்ப வேதனெங்க பட்டாங்களாம் இல்லெ?"

"அத்தெ அனுபவிச்சது வேதனெயில்லே, நரகம்! பாட்டி சொல்லிச் சொல்லி நிறுத்த முடியாம அழுவாங்க. அப்பொ நான் என்னவோ ரொம்ப பெரியவளா ஆயிட்டா மாதிரி பாட்டி கண்ணெத் தொடச்சி ஆறுதல் சொல்லுவேன். நானுன்னா பாட்டிக்கு உயிர். அத்தெ மாதிரியே இருக்கேன்னு சொல்வாங்க. என்னெப் பாத்துட்டிருந்தா அத்தெ ஞாபகம் வருதுன்னு சொல்வாங்க.

ஓரே ஒரு பொண்ணெ செல்லமா வளத்து கிட்டெ ஒரு ஊா்லெ நல்ல சொத்துக்காரரா பாத்து கல்யாணம் பண்ணாங்க. அத்தெ அழகெப் பத்திப் பாட்டி சொல்லிட்டிருந்தா அதிசயமா தோணும். எது பொய்யானாலும் அத்தெயோட அழகு பொய்யாகாது. தலெயிலே யிருந்து கால் சுண்டுவிரல் வரெக்கும் பத்தரெ மாத்துத் தங்கம் போல நிறம், வார்த் தெடுத்த விக்ரகம் மாதிரி அங்க லட்சணத்தோட கண்ணெப் பறிக்கிற அழகாம். கன்னங்கறேல்னு. அடத்தியா, அழகா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.