(Reading time: 21 - 41 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

இருக்கற கூந்தல் பின்ன முடியாம முடிச்சுப் போட்டா அந்த முடி முதுகெல்லாம் மூடி சந்திரனெ மூடி யிருக்கிற கறுப்பு மேகங்களெ ஞாபாகப்படுத்துமாம். ரொம்ப அகலமான அந்தக் கண்ணுங்களெத் தெறந்து பாத்தா தாமரெ பூத்திருக்குதோன்னு சந்தேகப் படும்படியாச் செய்யுமாம். சாதாரணமா செவப்பா இருக்கிற உதட்டெப் பாத்தா வெத்தலெ பாக்கு நிறம் ஒட்டி இருக்குதா இல்லெயான்னு புரியாதாம். கால் நகம் கூட தாமரெ இதழ் மாதிரி மிருதுவா சுத்தமா பிரகாசிக்குமாம். அத்தெ பச்செத் தண்ணி குடிச்சா தொண்டெயிலெ இறங்கறது தெரியுமாம். எதிரே இருக்கறவங்க உருவம் அவங்க கன்னத்தலெ பிரதி பலிக்குமாம். அந்தக் கொள்ளெ அழகெப் பாத்து சந்திரன் சிறுத்துப் போவானாம். அத்தெ அபூா்வமான அழகு உருவமாம்! தங்க நிற உடம்பிலெ அடர் நிற சேலெயெ மடிசார வெச்சி கட்டிட்டு, தலெயிலே பூ வெச்சி, ஆரத்தி தட்டெக் கையிலே எடுத்துட்டு, தினம் காலெயிலெ கோவிலுக்குப் போய் பூஜெ பண்ணிட்டு வருவாங்களாம். சாயந்தர நேரத்தலெ இனிமெயான தொண்டெயெ எடுத்துப் புராணப் புஸ்தகங்க பாராயணம் பண்ணா கேக்கறவங்க மெய்மறந்து போவாங்களாம்.

அத்தெ ஒரு தெய்வப் பெண்! ஆனா சபிக்கப்பட்டவ!

அபூா்வமான அழகி! ரொம்ப துா்பாக்கியசாலி!

அத்தெயப் புருஷன் கண்ணெடுத்து கூடப் பாக்கலெ. அத்தெயின் இன்ப மெல்லாம் கல்யாணத்தோட முடிஞ்சி போயிட்டது. கல்யாணப் பொண்ணா நரகத்திலெ காலு வெச்சா.

மாமாவின் லட்சணங்க வேறு. விருப்பங்க வேறு. பழக்கங்க வேறு. அந்த விஷயம் தாத்தாவுக்குத் தெரியாதா? அப்படின்னா தெரியும். முழுசும் தெரியும்--- ஆனா அந்தக் காலம் வேறு. அந்த மனிதா்கள் வேறு. ஆணுக்குத் தடை எங்கற்தே கிடையாது. ஆணுக்குக் கெட்ட நடத்தென்னு கிடையாது. அதனாலேதான் அத்தெ ஒரு ஒழுக்க மில்லாதவனுக்கு மனைவி ஆனா.

ஆனா மாமாவின் தீய பழக்கத்தலெ ஒரு ஆழம் இருந்தது. அது முன்னாலெ அத்தெயின் அழகு சக்தியில்லாம போயிட்டது.

மாமா ராத்ரி ஆனதும் இஸ்த்ரி போட்ட மல்லு வேட்டி கட்டி, அல்பாக்கா கோட்டு மேலெ சரிகெ துண்டு கோட்டு, வாசனெ எண்ணெ பூசி பாகவ்தா் கிராப்பெ நல்லா வாரி, கன்னத்தலெ வாசனெத் தாம்பூலம் அடக்கி, பத்து விரல்லேயும் மோதரம் நட்சத்தரம் மாதிாி ஜொலிக்க, தகதகன்னு பிரகாசிக்கற வெள்ளிப் பிரம்பெ ஆட்டிக்கிட்டு., பூட்ஸ் மாட்ன காலோட டக் டக்குன்னு ராஜ நடெ போட்டு நடந்து போவாராம். எங்கே? தாசித் தெருவுக்கு! அளவு மீறிய ஆவலோட தன்னுடையது எல்லாத்தையும் அர்ப்பணம் பண்ணி தாசிங்க சன்னதிக்கு---விடியற் காலமெ எந்த நேரத்துக்கோ, அலங்கார மெல்லாம் கலஞ்சி, தாசிங்க கையிலெ கட்ன பூமாலெ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.