(Reading time: 21 - 41 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

கசங்கி, பல ரகமான வாசனெங்க மணக்க வீடு சேந்து வாசல்லெ படுக்கெ போட்டுத் தூங்குவாராம்.

இந்தத் துா்ப்பாக்கிய நிலெக்கு அத்தெ வேதனெ பட்டாளோ இல்லியோ, சொல்லப் போனா எதாவது நினெச்சாளோ இல்லியோ, பாட்டிக்குக்கூடத் துப்பு கிடைக்கலெ, எந்த நேரமும் அத்தெயின் முகத்தெ அலங்கரிச்ச புன்முறுவல் எத்தனெ வேதனெ யிருந்தாலும் மூடி மறெச்சிடும். அத்தெ என்னெக்காவது துணிஞ்சி புருஷன் அறெக் குள்ளே போனா திரும்பி வரும் போது மிருதுவான கன்னங்க மேலெ காட்சி அளிக்கும் கறுப்பு வரிங்க நடந்த மோதலைச் சொல்லாமல் சொல்லும். உடம்புலெ ஓட்ற ரத்தமெல்லாம் ஒண்ணு சேந்து கன்னத்து மேலெ வரிங்கள்ளே கட்டிக்கிட்டு நாள் கணக்குலெ நின்னு போயிடும். அது புருஷன் கிட்டெ அனுபவிச்ச சுகம்!

இனி குடும்ப விஷயம் - சாதாரணமாவே அந்தக் காலத்து மாமியார் முன்னாலெ மருமக----புலி முன்னாலெ ஆட்டுக் குட்டிதான்! சச்சரவுக்கும் முரட்டுத்தனத்துக்கும் ஒரு உருவம் வேணும்னா அத்தெயின் மாமியார் தான் அது! எந்த வேளெயும் அத்தெக்குப் பசி தீர்ற அளவு சாப்பாடு கிடையாது. ஒரு நாள் விட்டு ஒரு நாளுக்காவது கூந்தலுக்குத் துளி எண்ணெ கிடையாது. அத்தெக்கு அறிவு தெரிஞ்ச நாள்ளே யிருந்து நடந்துவரும், உயிருக்குயிரான கடவுள் பிரார்த்தனெ, புராண பாராயணம் கொஞ்சமும் முன்னேற முடியல்லே. நாள் முழுவதும் வேலெ! மாமியார் நினெச்சி நினெச்சி ஆணெயிட்ற அர்த்த மில்லாத வேலெ! மகன் வீட்டுக்கு வந்ததும் மருமக மேலெ ஏதோ ஒரு குற்றச்சாட்டு----விளைவு தண்டனெ தான்! அத்தெ வீட்டுக்கு வெளியே இருக்கும் நாளுங்க அந்தப் பிடியளவு சாதம் கூட கிடைக்காது. 'ஊர்லெ மருமகங் கெல்லாம் அழகா குழந்தெங்க பெத்துகிட்டிருந்தா நீ நன்னா நின்னுட்டு உக்காந்துக்கறயா? மலட்டு முண்டெக்கிச் சாதம் வேறெ கேடா! ன்னு கரிச்சி கொட்டி அன்னக்கி பூரா பட்டினி போட்டுடு வாங்களாம் மாமியார். வீடு நிறெய எத்தனெ கட்டி லிருந்தாலும், அத்தெ எப்போதும் படுக்க வேண்டியது தரெ மேலேதான்---- எவ்வளவு தான் பாலும் தயிரும் இருந்தாலும் அத்தெ குடிக்க வேண்டியது கஞ்சித் தண்ணிதான்!

அத்தெக்கு யாராதரவும் இல்லெ. யார்கிட்டெ இருந்தும் சந்தோஷமில்லே. ஆனாலும் தன் கஷ்ட சுகங்களெ என்னெக்கும் பெத்த அம்மா கிட்டெ கூட சொல்லிக்கலெ. யார் மூலமாவது மக விஷயங்க தெரியும்போது பாட்டி பொறுத்துக்க முடியாம அழுவாங்களாம். அத்தெயெப் பார்க்கலாம்னு அவங்க ஊருக்குப் போனா வண்டியிலிருந்து இறங்கி இறங்கற்துக்குள்ளே சம்பந்தி அம்மா கடுகடுப்பாக எதிரே வந்து, 'என்னாம்மா! மகளெக் கஷ்டப் படுத்துறோம்னு பாக்க வந்துட்டியா?'ன்னு ஈவிரக்கமில்லாமெ கேப்பாங்களாம். பாட்டிக்குக் கோவம் அடக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.