(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 18 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

ருநாளு சாயந்தரம் தாத்தா வயல் நடுவே நடந்து கிட்டிருந்தப்பொ மகளெப் பாக்கணும்னு என்னவோ தோணிச்சாம். உடனெ துண்டெ உதறி தோள் மேலெ போட்டுட்டு, தங்கப் பூண் போட்ட கைத்தடியெக் கையிலெ வீசிக்கிட்டே மருமகன் ஊருக்குப் புறப் பட்டாரு.

வீட்டு முன்னாலெ போற்துக் குள்ளே நல்லா இருட்டிட்டுது. மருமகன் கச்சேரி அறெயிலெ ஆப்த நண்பர்களோட அரட்டெ அடிச்சிட் டிருந்தாரு. தெரு வாசல்லே நின்னுட் டிருக்கற மாமனாரெப் பாத்தும்கூட ஒரு வார்த்தெ பேசல்லெ. தாத்தாக்குத் தலெ மேலெ அடிச்சா மாதிரி அவமான மாயிட்டுது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு மருமகனெப் பேரு சொல்லிக் கூப்ட்டாரு. அவரு வெளியே வராமலே-- 'யார் நீ?'ன்னு கேட்டாராம். தாத்தாக்கு ஆத்தரம் பொங்கி வந்தது. 'என்னெத் தெரியாத மாதிரி நடிக்கிறியே? நான்தான் அக்ரகாரம் ராமய்யா.'

'ஓஹோ! அக்ரகாரத்திலெ உன்னெப் போல ராமய்யாங்க லட்சம் பேரு இருக்காங்களே! எல்லாரெயும் எனக்குத் தெரிஞ் சிருக்கணுங்கறியா?'ன்னு சொல்லிட்டு சிநேகிதங்களோட சேந்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாராம். தாத்தாக்குக் கோவம் கரைபுரண்டது. உறுமிக்கொண்டு தங்கக்கைத்தடியெச் சுத்தத் தொடங் கற்துக்குள்ளே சம்பந்தி அம்மா தெரு வாசப்படியிலெ எட்டிப் பாத்து 'யாரய்யா நீ?'ன்னு கேட்டாங்க. தாத்தா கொஞ்சம் சாந்தம் வந்து 'நான்தாம்மா தங்கச்சி! லட்சுமியோட அப்பா.'

'எந்த லட்சுமி?'

பேரதிர்ச்சி யடைஞ்ச தாத்தா மறு வினாடி சட்டுன்னு திரும்பிட்டார். தாத்தாக்குத் தீராத அவமானமா இருந்தது. அன்னெயிலே யிருந்து அந்த வீட்டு வாசப்படியெ மறுபடி மெதிக்கலெ. பாட்டியெக்கூடப் போகக்கூடாதுன்னு நிறுத்திட்டார்.ம‌க‌ செத்துப் போயிட்டான்னு நெனெச்சிட்டு, அந்த வீட்டுப் பேச்சே எடுக்க வேணாம்னு உத்தரவு போட்டார். பாட்டி தாரெ தாரெயாக் கண்ணீர் வடிச்சாங்க. தாத்தா கால்லெ விழுந்து வேண்டிக்கிட்டாங்க‌.கருணெ யுள்ளங் கொண்ட தாத்தா கண்ணு தொடச்சிக்கிட்டு பாட்டிக்கு ஆறுதல் சொன்னார். பண்டிகெக்கி மகளெயும் மருமகனெயும் அழெச்சிட்டு வரச் சொல்லி அனுப்பிச்சார். ஆனா மருமகன் இரக்கம் இல்லாமெ வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி உக்காந்துட்டார். ' என் பேச்செத் தட்டாதே பாபு! உன் அம்மாவெப் போல நான். பண்டிகெ நாளு எங்க வீட்லே எலெ முன்னாலெ உக்காந்து எழுந்திருச்சா, என் வயிறு நிறெஞ்ச மாதிரி இருக்கும்பா!' பாட்டி மருமகனெக் கெஞ்சிகிட்டிருந்தா. சம்பந்தி அம்மா எரிஞ்சி விழுந்து-- 'பண்டிகெ நாளு உன் வீட்லெ எதுக்கு எலெ போடணும்?* அந்த அளவு சாப்பாடு நாங்க சாப்பட்ற தில்லை? பெத்த தாய்ப் பாசத்தெக் கொட்டி அழறியா? இல்லெ தட்சணெ காணிக்கெ ஏதாவது வெக்கப் போறியா?'ன்னு கேட்டாளாம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.