யணாக்கு வக்கில்லாமெ அழுதேனே! உங்களுக்குத் தெரியுமா? காலு சுளிக்கிக் குளிக்கற்துக்கு வெந்நீர் வெக்க முடியல்லேனு சொன்னா கன்னத்தெப் பேத்தீங்களே! நினெவிருக்குதா? நான் ஆசெப்பட்டு ஊதுவத்திச் செடி வாங்கனா அந்த உரிமெ யாரு குடுத்தாங்கன்னு கேட்டீங்களே, மறந்துட்டீங்களா? பாமா பாட்டிக்கு வாழ எலெ அறுத்துக் குடுத்தேன்னு குமுங்கிக் குமுங்கி அழும்படியாத் திட்னீங்களே--ஞாபகம் இல்லியா? இப்படி எத்தனெ விவரிக்கச் சொல்றீங்க? இந்தக் குடும்பத்தலெ நான் எவ்வளவு சுகம் அனுபவிக்கிறேனோ எனக்குத் தெரியாதா? என்னக்கும் எனக்கு இல்லாத கஷ்ட சுகங்க, குடும்பக் கடமெங்க இன்னக்கி எப்படி வந்தது? ஏன் வந்தது? எவ்வளவு காலம் இருக்கும்? என்ன சொன்னாலும் ஒதுக்கித் தள்ளி, என்னெக்கும் கிட்டெ நெருங்க முடியாம பண்ணி, மண் புழுவெ விடக் கேவலமாப் பாத்தீங்களே, மறந்துட்டேனா? நீங்க எவ்வளவு வேணும்னாலும் சொல்லுங்க-- இல்லெ சொல்றதெ நிறுத்துங்க--தேவெ யில்லெ, தொண்டெ தண்ணிக்கு நஷ்டம்! என்கிட்டே யிருந்து செல்லாக் காசு வராது. என் நெஞ்சிலே மூச்சு இருக்கறவரெக்கும் அந்தப் பணத்தெ உங்களுக்குக் குடுக்க மாட்டேன். எனக்குப் பின்னாலெகூட உங்களுக்குக் கிடைக்க விட மாட்டேன். இவ்வளவுதான் நான் சொல்றது!'
அவர் ரொம்ப நேரம் மௌனமாக உக்காந்திருந்தார்.
' பானூ! நிஜமா நான் பல தவறுங்க பண்ணியிருக்கறேன். இப்பொ யோசச்சுப் பாத்தா உண்மெ தெரியுது. என்னெ மன்னிக்க முடியாதா?'
'தவறு பண்றது, மன்னிக்கற்து இதெல்லாம் எனக்குப் புடிக்காது!'
'பானூ, உனக்கு இஷ்டம் வந்தபடியே செய்-ஆனா என்னெ மன்னிச்சுடு! நான் கோவத்தலெ சொன்னதெல்லாம் மறந்துட்டு எனக்காக...'
'இவ்வளவு சீக்கரமா வந்த மாறுதல் அவ்வளவு சீக்கரமாவே போயிடும். எதற்கும் அஸ்திவாரம் பலமா இருக்கணு மில்லியா?'
'மாறிட்டாலும் நம்ப மாட்டேங்கறே----உன் மேலெ எனக்கு அன்பு இல்லேன்னு நினெச்சிட் டிருக்கறேல்லே? அதில்லாம் உன் கற்பனெ பானூ!'
'கற்பனெ பண்றது நானில்லே, நீங்க! இன்னும் என்னெ நம்பவிக்க முடியும்னு கற்பனெ பண்ணிட்டிருக்கற நீங்க!'
'பானூ! ஒண்ணு சொல்லு-உன்னெ நானே சுயமா பாத்து, இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேனா? யாரோட பலவந்தத்தாலெ பண்ணிக்கிட்டேனா?'
'மனெவின்னு ஒரு பொம்பளெ வேணும், அதனாலெ கண்ணுக்குப் பிடிச்ச உடனே ஒத்துக்கிட்டீங்க. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எல்லாரும் கட்டிக்கிட்டுகூட
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.