"நல்லா இருக்குது. ஏதோ தகராறுங்க கேக்க வேண்டி யிருக்கும்னுதான் இங்கே வரணும்னா பயமா இருந்தது. போவட்டும், மாமா மாறிப் போயிட்டேன்னு சொன்னப்ப௧ நீ கடனெ ஏன் தீக்கக் கூடாது?" என்று கேட்டேன்.
"உனக் கென்ன மூளெகீளெ கெட்டுப் போச்சா என்ன? பணத்துக்காக மார்ற ம,னுஷன நம்பச் சொல்றியா? அவருக்கு இந்தச் சமயத்தலெ பணம் கொடுக்கற்து இன்னும் தூண்டி விட்றா மாதிரி ஆகும். தன்னுடைய நடவடிக்கெங்கள்ளே குறை என்னங்கற்து அவருக்கே தெரிஞ்சாகணும். அவர் மனசு அதுக்காக வருத்தப்படணும். அன்னக்கி எந்த உதவியும் பண்றதுக்கு நான் தயார்தான்!"
எனக்கு அது சரியென்றே பட்டது.
பானு சொன்னாள்----"கொஞ்சநாள் ஆனப்புறம் ஒரு ரேடியோ வாங்கணும். அது எனக்குத் தீராத ஆசெயா இருந்து வருது"
"இத்தனெ நாளா எனக்கேன் சொல்லலே?"
"இல்லெ. என்னிடம் அன்பு வெச்சிக்கற நீ, எனக்காக எதெயும் வாங்கித்தரக்கூடிய நீ இருக்கறேங் கற்து எனக்குத் தெரியும். ஆனா அந்த அன்பெ நான் எல்லாத்துக்கும் உபயோகப் படுத்திக்க மாட்டேன். அது மிகவும் உயர்ந்தது. எந்தச் சகோதரிக்கும் கிடைக்காதது----அதனோட மதிப்பு அதுக்கு இருக்குது."
"பானூ! உன்னோட பேசற்துக்கு பயமா இருக்குது. என் கற்பனெக்கு அப்பாலெ போயிட் டிருக்கறே."
பானு சிரித்தாள். "இன்னொரு புதுவிஷயம் கேக்கறியா? சமீபத்தலெ ஒரு பெண் எழுத்தாளர் நிறெய கதெங்க எழுதிட்டு வர்றா. உனக்குத் தெரிஞ்சே இருக்கும். அவளோட எழுத்தெல்லாம் கற்பனெ! பாத்திரங் கெல்லாம் தெய்வங்க! கதிக் கருவெல்லாம் குடும்ப பந்தங்க! எல்லாம் சுப முடிவுங்க! அவ எழுத்தெ எதெ எடுத்தாலும் சரி----ஆண், பெண் இடையே காதல், பாசம், அன்பு, அபிமானம் இவை யெல்லாம் ஜீவநதி போல பாய்ஞ்சிட்டே இருக்கும். மனெவி கால்லெ முள்ளு குத்திட்டா புருஷன் மூர்ச்செ ஆயிடுவான். புருஷனுக்குத் தலெவலி வந்தா மனெவி மயக்கம் போட்டுடுவா. அவங்க இரவும் பகலும் திரியற்து சுவர்க்கத்தலே தான்! படுக்கற்து பூப்படுக்கையில் தான்! அந்தப் பூங்ககூட கும்கும்னு மணக்கும் மல்லிப் பூவே தவர மணக்காத அரளிப்பூக்கூட இல்லே, உண்மையெ மறெச்சி இந்த மாதிரி கதெங்களெ எழுதற்தும் படிக்கற்தும் நல்ல தில்லே. எனக்கு அவ எழுத்திலே கொஞ்சம்கூட நம்பிக்கெ யில்லே. இருந்தாலும் யோசிச்சுப் பாத்தேன். என் எண்ணமே தவறா இருக்கக்கூடாதா? புருஷன் மனெவி
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.