(Reading time: 16 - 32 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

பாரமில்லே. நான் மறெஞ்சிபோற வரெக்கும் வயத்திலே வச்சிக் காப்பாத்தறேன். அதுக்கப்புறம் அவன் கதி..." என்று சொல்லி ஓவென்று அழுதாள். சித்தியின் அச்சம் எனக்குப் புரிந்தது. உண்மைதான். அந்த ஐயம் யாருக்கானாலும் வரத்தான் செய்யும். ஆனால், பானுவின் மகனிடம் பானுவைப் போலவே அன்பு செலுத்தும் மனிதர் இல்லாம லில்லை. அதுதான் சுசீலா! சுசீலா என் மனைவி ஆகும் நாள் பாபுவைப் பொறுத்தவரை எந்த அச்சமும் தேவை யில்லை.

" சித்தி! அவசிய மிரு்கற்தனாலே தான் உன்கிட்டே சொல்றேன். நான் சுசீலாவெக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். இந்த முடிவுலே யிருந்து மாறப்போற்தில்லே. சுசீலா மேலே உனக்கு நம்பிக்கெ இருக்குதா? சொல்லு சித்தி!"

" பாபூ ... கேசவ்!" சித்தி கண்ணெடுத்து ஆச்சரியத்துடன் பார்த்தாள். "சுசீலாவா? பானுவோடெ செய்தி கேட்டு அவ எவ்வளவு அழுதுகிட் டிருக்கான்னு எனக்குத் தெரியும் பாபூ! பானு புதுசா குடுத்தனம் பண்ணப் போனப்போ கதறி அழுதா. சாப்பாடு கூட சாப்பிடல்லே. அவ கையிலே பாபு வளந்தா எனக்குத் திகுிலே இல்லே. ஆனாலும் இந்தப் பச்செக் குழந்தெக்கு இந்தத் தொல்லெ யெல்லாம் ஏன் வரணும் பகவானே!" சித்தி அழுது கொண்டே இருந்தாள்.

என் மனத்தில் ஒரு வகையான அமைதி வந்தது. எழுந்து வெளிப்பக்கம் நடந்தேன். இருட்டில் படியேறி வந்த சுசீலா எதிர்ப்பட்டாள்.

"சுசீலா!" என்று அழைத்தேன். என்னையறியாமலே. சுசீலா நின்றுவிட்டாள். " பானு உனக்குக்கூட கடிதம் எழுதியிருக்கா." சட்டைப் பையிலிருந்த காகி தங்களைத் தேடிப் பார்த்து ஒரு சிறிய காகிதத்தை எடுத்துக் கொடுத்தேன்.

" பானு.... நிஜமா செத்துப் போயிட்டாளா........? சுசீலாவின் குரல் கனத்து இருந்தது. "என்கிட்டேகூட எப்பவும் ஒண்ணுமே சொல்லல்லே." தலை குனிந்து கொண்டாள்.

" அது நம்ம துரதிர்ஷ்டம்! செத்துப் போயிட்டான்னு நினெச்சிக்காதே. பானு எங்கேயோ சுகமா இருக்கறா" என்றேன் கண்களைத் துடைத்துக்கொண்டு.

" நீ இருந்தும்கூட இப்படி நடக்கவிட்டியே!"

"நிஜம்தான் சுசீலா! நான் பானுகிட்டேசத்யம்பண்ணி வாங்கிட் டிருக்கணும். அவ்வளவு தூரம் யோசிக் காமே போயிட்டேன். என்னெ மன்னிச்சுடு! --- முக்கியமானது--- இன்னொண்ணு இருக்குது. இந்த நிமிஷத்தலெ யிருந்து உதயன் உன் மகன். அந்தப் பொறுப்பு நம்ம ரெண்டுபேர் மேலேயும் இருக்குது."

" மாமா...!" சுசீலா வியப்படைந்ததுபோல் அவள் குரல் ஒலித்தது. தலை எடுத்துப் பார்த்தாள்.

"நிஜம்தான் சுசீலா! நீ உள்ளே போ. சித்திக்கு ஆறுதல் சொல்லு."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.