பயணம் செய்பவர்களும் அல்ல. எதிரிகள்! ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொள்ளும், ஒருவர் மீது ஒருவர் அருவருப்பு கொள்ளும், ஒருவர் வாழ்க்கையிலிருந்து ஒருவர் தூரமாகிக்கொண்டே இருக்கும் தர்ப்பாக்கியசாலிகள்! மணமேடை எனப்படும் பலிபீடத்தில் ஏறுவதற்கு முன்னர் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு தூரமோ இப்போது அதைவிட ஆயிரம் மடங்கு! அந்த நாள் பெருமையை, அந்த நாள் விருப்பங்களை, அந்தநாள் எண்ணங்களை, எல்லாவற்றையும் இழந்துவிட்டு, கலைக் காகவே கலை என்று சொல்வதுபோல், வாழ்க்கைக்காகவே வாழ்ந்துவரும் துரதிர்ஷ்டசாலிகள்.
இரண்டு உயிர்களையும்----இரண்டு உடல்களையும் சேர்த்து வைக்கவேண்டிய இந்த மனப் பிணைப்பு விலகி விட்டது. புது வாழ்வில் துளிர்த்து----படர்ந்த அந்த அன்புக்கொடு வாடிவிட்டது. இனி இந்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒன்றுமிலர். இரண்டு கற்கள் ஒரேயிடத்தில் ஒன்றாக இயங்கினால் அவற்றிடையே மோதல் தப்பாது. நீர்ச் சுழலில் அகப்பட்ட இந்தக் குடும்பப் படகு தலைகீழாகக் கவிழாமல் போகாது.
ஒருமுறை நீ சொன்னாய்-- 'இனிமே உன் மகனே உன் ஆசைவிளக்கு பானூ!' என்று. ஆனால் அதை நான் அப்பொழுது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என் கருத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றினாலும் சொல்ல முடியாமல் போய்விட்டது. 'இன்னும் எனக்கு மாமா மேல் ஆசை இருக்குது அண்ணா!' என்றால் நீ சிரிப்பாய் என்று வெட்கப்பட்டேன். உண்மையில் மாமாவை நான் எவ்வளவு வெறுத்தாலும், எவ்வளவு குறை கூறினாலும் என்னுள் எங்கேயோ ஏனோ ஓர் ஆசைக் கோடு மின்னி விளையாடிக்கொம்டிருந்தது. ஒருநாள் அவரிடம் மாற்றம் ஏற்படும்-- தனக்கு மனைவி இருக்கிறாள் என்றும், மகன் இருக்கிறான் என்றும் நினைவு வரும்; அந்த நல்ல நாள் தவறாமல் வரும் என்று.
உண்மையில் வழிதவறி நடப்பவர்கள் யாரானாலும் சில நாட்களில் வழி தெரிந்து கொள்வார்கள். மனிதன்தான் செய்த தவறுகளைத் தெரிந்துகொள்ளாமலே எப் போதும் வாழ்க்கை முடிந்துவிடாது. அப்படி நடந்தால் அது இயற்கைக்கே எதிரானது! என் பொறுமை அழியும் வரையில் அவரிடம் மாற்றம் வரவில்லை. ஆனால்....... தவறாமல் வரும். ஒரு சமயம்! நான் அனுபவிக்க முடியாமல் போகும் சமயத்தில்! இந்த வாழ்க்கையில் நான் திருத்திக்கொள்ள முடியாத பெரிய தவறு ஒன்று உள்ளது. கணவன் நொண்டியானாலும், குருடனானாலும், துர்ப் பாக்கியசாலியானாலும், முரடனானாலும் எத்தகையவனானாலும் மனைவி அந்த மனிதனிடம் அன்பு செலுத்தி மதிப்பு கொடுக்கவேண்டுமென்றும், அவர் அடிச் சுவட்டில் நடக்கவேண்டு மென்றும் நம் சாத்திரங்கள் அறிவுறுத்துகின்றன.ஆனால்