(Reading time: 16 - 32 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

சுசீலா, வாழ்க்கைகளை முழுமையாகச் செம்மைப்படுத்திக் கொள்ள முடியும். உங்களைப்போன்ற தாய் தந்தையர்!...என் உதயன் அதிருஷ்டசாலி! என் கண்கள் ஈரமாகின்றன. அவன் இன்னும் தூங்கிக் கொண் டிருக்கிறான். பக்கத்தில் நான் இருக்கிறேன். என்ற நினைப்பில் அமைதியாக. என் கை நடுங்குகிறது. பேனா எழுத மறிக்கிறத. இனி முடிக்கட்டுமா...

நான் இந்த வாழ்க்கையிலிருந்து, துன்பத்தி லிருந்து, கண்ணீரி லிருந்து, அமைதியின்மையி லிருந்து, சிந்தனைகளிலிருந்து, குறை கூறுவதிலிருந்து நிரந்தரமாகச் சென்றுகொண்டிருக்கிறேன். இது எவ்வளவு நல்ல நாள்! அண்ணா! எனக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல் உள்ளது. விழுந்து விழுந்து சிரிக்கவேண்டும் போல் உள்ளது. நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். இது ஏமாற்றம் இல்லை. தோல்வி! ஒவ்வொரு பெண்ணும் ஒரு பானுமதி ஆகாம லிருக்கலாம். ஆனாலும் இன்றைய சமூகத்தில் ஆயிரக்கணக்கான பானுமதிகள் இருக்கிறார்கள். நம்முடைய சமூக விதிகளில் தீவிரமான மாற்றங்கள் வந்துகொண்டிருக்கிற காலம் இது. இந்த மாற்றத்திலே ஒரு பக்கம் முன்னேற்றம்! இன்னொரு பக்கம் பின்னேற்றம்! தூக்கத்திலிருந்து எழுந்துகொண் டிருக்கிற பெண்குலத்தின் விழிப்புணர்ச்சி புரையோடிய சமூகக்தில் மோதிக்கொண் டுள்ளது. பரம்பரை பரம்பரையாக நிலைகொண்டு விட்ட ஆணின் ஆதிக்கத்தின் கீழ் பெண்களின் விழிப்புணர்ச்சி நசுக்கப் படுகின்றது. ஆனாலும் இந்தத் திருப்பம் உனக்காகவோ, எனக்காகவோ நிற்காது. இது தொல்லை கொடுக்கும் காட்டாற்றைப் போன்றது. அதை எதிர்த்து நிற்க முயற்சிக்கிறவன் அடித்துச் செல்லப்படுவான். அந்த நாளுக்காகவே சில பானுமதிகள் பலி ஆகவேண்டி யுள்ளது.

மேலும் என் பாபுவுக்கு ஏதோ உளறிக்கொட்டிக் கடிதம் எழுதினேன். அதைப் பத்திரமாக மறைத்து வைத்து என் பாபு வளர்ந்து பெரியவனாகித் தானாக அதைப் புரிந்துகொள்ளக் கூடிய திறமை வரும்பொழுது கொடுப்பாயல்லவா?

சரி நான் போகிறேன்... பாபு தூக்கத்திலிருந்து எழுந்தால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது...

உன் இதயபூர்வமாக எனக்குப் பரிசாகக் கொடுத்த கைக்கடிகாரத்தை என்னுடனே கொண்டுபோகிறேன். அது என் உடம்பின் பாகம்தான் ...என்னுடன் சேர்ந்து எத்தனையோ இகழ்ச்சிகளை அதுவும் தாங்கியுள்ளது. நிரந்தரமாக உன்னை, என் பாபுவை, என்னுடைய எல்லாவற்றையும் இழந்து செல்கிற துர்ப்பாக்கியசாலி, தங்கை பானு! ... பானுமதி!"

கடிதத்தை மடியில் வைத்து முழங்காலில் தலையை நுழைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதேன். என் மனம் எச்சரித்துக்கொண்டிருந்தது. பானுவின் கோரிக்கையை, கோரிக்கை அல்ல, ஆணையை, மீறுவதற்கு வழியில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.