(Reading time: 22 - 43 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

எழுந்து விடுகிறாய். இப்போது நீ எழுந்தால் நான் ஏதாவது செய்யமுடியுமா? நீ ஏதாவது செய்ய விடுவாயா?

கண்ணே! உனக்கு.....அம்மா...... இல்லாமல்....... செய்கிறேன். நீ தூக்கம் விழித்ததும் அழுவாய். அறிந் தும் அறியாத உன் மனம் வேதனைப்படும். எல்லார் முகங்களிலும் அம்மாவைத் தேடுவாய். எங்கேயும் அம்மா தெரியாமற் போனால், நாட் கணக்கில் அம்மா மாயமாகி விட்டால், உன் பிஞ்சு மனம் துடிதுடிக்கும். ஏக்கத்தோடு, வாய் திறந்து சொல்லமுடியாத வேதனையோடு அழுவாய். உன் இளம் மனதை இந்த அளவு ஊமை வேதனைக்கு ஆளாக்குகிறேன் என்பதை நான் அறிவேன். இதற்கு என்னை மன்னிப்பாயாப்பா? நீயே சிந்தித்துப் பார்----காலில் முள் குத்திக் கொண்டால் துடிதுடித்துப் போகிறோமே! இவ்வளவு மென்மையாகக் காப்பாற்றிக் கொள்ளும் இந்த உடலை நமக்கு நாமே துணிந்து முடித்துக் கொள்கிறோம் என்றால், கைகளாலேயே நெருப்பு மூட்டிக்கொண்டு எரிந்து போவதற்கும், தன் கைகளாலேயே தன் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொள்வதற்கும் தன் உயிரைத் தானே வெறுத்து விடுவதற்கும் காரணங்கள் எவ்வளவு ஆழமானதாக இருக்க வேண்டுமோ சிந்தித்துப் பார்! சிந்திக்க முடியுமானால் நீ என்னை மன்னிப்பாயப்பா!.......மன்னிப்பாய்!

நீ வயிற்றில் இருக்கிறாய் என்று உணர்ந்த நேரத்தில் நான் எப்படியோ ஆகிவிட்டேன். என்னைத் தாயாக்கிய என் சிரஞ்சீவி! நீ பிறந்த நாள் நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். கண்கூடத் திறந்து பார்க்காத உன்னை இதயத்தோடு அணைத்துப் பூரித்துப் போனேன். நீ சூரியனோடு சேர்ந்து பிறந்தாய். அதனால் தான் உனக்கு உதயன் என்று பெயர் வைத்தேன். வாழ்க் கையில் நான் சுதந்திரமாக செய்ய முடிந்த வேலை இது ஒன்றுதான்! அதற்குக் காரண மிருக்கிறது. ஒரு மனிதன் ஒரு வேலையைச் செய்யும் பொழுது, வேண்டியவர்கள் தடை போடவில்லை என்றால் முழுதும் விருப்பம் இருப்பதால் இருக்கலாம். உன் பெயரைப் பொறுத்தவரை எது நடந்ததோ நீயே உணர்ந்து கொள் - உன் மேல் நான் எத்தனையோ ஆசைகள் வைத்தேன். என் மகிழ்ச்சி இல்லத்திற்கு நீயே அஸ்திவாரம் போடுவாய் என்றும், இந்த இருள் நிறைந்த வாழ்வுக்கு ஒளி காட்டுவாய் என்றும், என் கண்ணீரை உன் பிஞ்சுக் கைகளால் துடைத்துப் போடுவாய் என்றும்....இன்னும் ... இன்னும் நான் பிழைத்து இருந்தால் நீ எல்லாம் செய் வாய். துரதிருஷ்டம் என்னைப் பிழைக்க விடவில்லை. இப்பொழுது அதற்கு நான் கவலைப்படவும் இல்லை. என் கவலை, என் துக்கம், என் தன்மானம், என் ஆவேசம் எல்லாம் கடந்த காலத்தில் கரைந்து விட்டன.

இருந்தாலும் இந்தக் கடைசி நேரத்தில் என்னிடம் மிகுந்திருக்கும் ஒரு விருப்பத்தை உன்னிடம் சொல்கிறேன். அதை நிறைவேற்ற வேண்டியவன் நீதான்! நீ வளர்ந்து பெரியவனாகி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.