(Reading time: 1 - 2 minutes)

மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும். 

 

படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ  அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.

 

படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக் காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம். வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.

 

படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

 

ஜன்னல்கள்

எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும். ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது. பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.

 

மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும். 4 ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.