(Reading time: 3 - 5 minutes)

நட்சத்திர பலன்கள் :

பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன.

திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.

யோகங்கள்:

பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை.

பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும்.

அசுவினி-புதன்,

மிருகசீரிஷம்-வியாழன்,

பூசம்-வெள்ளி,

சித்திரை-சனி,

அனுஷம்-ஞாயிறு,

மூலம்-புதன்,

உத்திராடம்-திங்கள்,

திருவோணம்-வெள்ளி

இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.

 

ராகுகாலம்:

சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள். ஒவ்வொரு நாளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

ராகுகாலம் என்று எப்போது?

ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை

திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை

செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை

புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.

வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை

வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை

சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.

 

எமகண்டம்

எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...

ஞாயிறு 12.00-1.30 (பகல்) 6.00-7.30 (இரவு)

திங்கள் 10.30-12.00 (பகல்) 3.00-4.30 (இரவு)

செவ்வாய் 9.00-10.30 (பகல்) 1.30-3.00 (இரவு)

புதன் 7.30-9.00 (பகல்) 12.00-1.30 (இரவு)

வியாழன் 6.00-7.30 (பகல்) 10.30-12.00 (இரவு)

வெள்ளி 3.00-4.30 (பகல்) 9.00-10.30 (இரவு)

சனி 1.30-3.00 (பகல்) 7.30-9.00 (இரவு)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.