- Details
-
Category: Flexi Submit
-
Published: 23 June 2020
-
Total Hits: 89
(Reading time: 1 - 2 minutes)
“தமிழும், தமிழனும்”
எண்ணிலடங்கா படைப்புகள் தமிழால் ஆனவையாம்,
2500 ஆண்டுகளுக்கும் மிக பழமையாம்,
கடலுக்கடியில் கிடக்கிறது தமிழன் பெருமைகளாம்,
கல்விக்கூடங்கள் இல்லாத சங்ககாலத்தில்,
கடலுக்கடியில் பல்லாயிரம் நூல்களாம்,
குமரிக்கண்டம், லெமூரியா,
இந்த உண்மைகளை உன் பிள்ளைகளுக்கு சொல்வாயா,
மொழி பெயர்க்க முடியாத பல நூல்களாம்,
உலகையே ஆண்டவன் தமிழனாம்,
பேசுவதற்கே மிக எழிமையான மொழியாம்,
தேனிலும் மிக சுவையான எம் மொழியாம்,
மதிப்பழிக்கும் வாக்கியங்களும்,
எழுதி பயில எழிமையும்,
தமிழ் எழுத்துக்களுக்கு ஏற்ப கோவிலாம்,
உலக அதிசயமே வியக்க கட்டிய கோபுரமாம்,
தலை நிமிர்த்தி நடப்போம் தமிழனாய்,
இரவிழும் கொடை வழங்கிய அரசனாம்,
உலகத்தில் பஞ்சம் என்பதை காணவைக்காத தஞ்சையாம்,
உதவியெனும் உச்சிக்கே சென்று உதவிடுவான்,
உயிர் உள்ளவரை அதை மாறவாத தமிழனாம்,
பஞ்சபூதங்களை வழிபட்டதால்,
செல்வம் சிறக்க வாழ்ந்தானாம்,
சொல்லிக்கொண்டே போகலாம் சிறப்புகளை,
உலகமே வியக்கும் செம்மொழியாம்,
அதுவே எனது தமிழ்மொழியாம்,
மடிந்தாலும்,மண்ணுல் புதைந்தாலும்,
மறுபிறவி எடுப்பேன் தமிழனாய்....
- கார்த்திக் கவிஸ்ரீ
More articles from this author
Add comment