(Reading time: 2 - 4 minutes)

அன்னையர் தினம் அன்று நான் எழுதிய கவிதை,

சில்ஸியில் என் முதல் கவிதை,

                                          என் அம்மாவிற்காக........

 

கருவில் ஈன்றெடுத்த நாளிலிருந்து 

                             கருத்தாய் பாதுகாத்தாயடி!!!!!

என்னுடைய கஷ்டங்களை நீ படகூடாது தங்கமே.....என்று கூறி

                            அனைத்து சுமைகளையும் தனியாய் சுமந்தாயடி......

அத்தனை வறுமையிலும்,

                          என்னை மகாராணியாய் காத்தாயடி......

தையல் இயந்திரத்தை 

                          எங்களுக்காக தத்தெடுத்தாயடி........

நாள் முழுவதும் தைத்து அதில் வரும் பணத்தில்,

                           எங்கள் வயிற்றை முழுதாகவும்,

                          உன் வயிற்றை மட்டும் அறைகுறையாக்கினாயடி.....

நான் வெளியில் சுற்றி திரிந்துவிட்டு,

கால் வலிக்கிறதம்மா என்று கூறினால்,

                            உன் வலியை பொருட்படுத்தாது

                            என் வலியினை தீர்த்து விடுவாயே......

எப்பொழுதும் என்னை அணைத்து முத்தமிடும்

                           அந்த அன்பினை நான் உணராமல் போய்விட்டேனடி....

மதிய உணவு இடைவேளையில் சூடாக சமைத்துக் கொண்டு

                         பள்ளி நுழைவாயில் எனக்காக காத்திருப்பாயடி.......

இன்று எங்கே சென்றாயடி என் தெய்வமே!!!!

உனக்காக மட்டும்தான் உயிர் வாழ்கிறேன்

                            என்று அடிக்கடி என்னிடம் சொல்வாயடி....

இன்று எங்கே சென்றாயடி என்னை மட்டும் தனியாக விட்டு,

 

நிறைய படிக்க வேண்டும் என்ற

                          உன் ஆசை நிறைவேறாமல் போய்விட்டதையெண்ணி,

                         உன்  பிள்ளைகளை படிக்க வைக்க விரும்பினாயடி,

ஆனால், அதிலும் உன் மகன் உன்னை ஏமாற்றி விட்டானடி......

 

இன்று உன் ஆசையை நான் நிறைவேற்றி

                          முதுகலை பட்டமும் பெற்று விட்டேனடி.....

ஆனால், அதை காணாமல் என்னைவிட்டு 

                         எங்கு சென்றாயடி.......என் தெய்வமே.....

 

என்னை ஒரு ஆசிரியராக்க  வேண்டும் என்று

                         அடிக்கடி கூறினாயடி.......

இதோ உன் மகள் ஆசிரியர் ஆகி விட்டால்,

 

உன் மடியில் தலைவைத்து கொள்ள நெஞ்சம்

துடிக்குதடி...............

 

உன்னை நான் மகாராணியாக வைத்து பார்க்க

வேண்டும் என்று என்னுள் ஆசை துள்ளுதடி...........

 

இன்னொரு ஜென்மம் வேண்டாமடி.......

இந்த ஜென்மத்திலே என்னுடைய மகளாக பிறந்து விடடி.......

 

நீ என் அன்னையாக எனக்கு கொடுத்த அன்பில்,

                                 பாதியாவது நான் உனக்கு தரவேண்டுமடி........

இன்று அன்னையர் தினமடி...........

                               கைப்பேசியே இல்லாத தன் அன்னைக்கு சமூக வலைதளங்களில் அனைவரும் வாழ்த்து சொல்கிறார்களடி.....

 

என்னைவிட்டு சென்ற உன்னிடம் நான் எப்படியடி வாழ்த்து சொல்வது.........

 

இதோ இந்த கண்ணீர் கவிதையால் உனக்கு வாழ்த்து 

சொல்கிறேனடி......

என் தெய்வமே.......

 

என்னுடைய இவ்வாழ்த்து உன்னை சென்று சேரும்

என்ற நம்பிக்கையில்......

 

இப்படிக்கு,

உன் மகள்

 

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.