(Reading time: 4 - 7 minutes)

                         எறும்பு வீடு

 

அன்று காலையில் படுக்கையைவிட்டு எழுவதற்கே சலுப்பாக இருந்தது. ஒரு பக்கம் தலைவலி மறுபக்கம் மார்கழி மாதப் பணியின் குளிரால் கம்பிளிப் போர்வைக்குள் மழைப் பாம்பு போல் நெளிந்து கொண்டிருந்தேன்..... 

 

செல் போனில் பார்த்த போது மணி 8:49 am, அன்று உலகை இருளில் இருந்து மீட்க கிழக்கில் இருந்து சூரியன் வரவில்லை.. 

அறைத்தூக்கத்தோடு படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது தான் அதனை கவனிக்க தொடங்கினேன்... 

 

கட்டிலுக்கு கீழே உள்ள டைல்ஸ் தரையில் யாருக்கும் தெரியாமல் மெளனமாகவும், சத்தமில்லாமலும் சிலர் நடந்து சென்றனர்... 

 

கண்களை கைகளால் தேய்த்து விட்டு மறுபடியும், பார்த்தேன். மனிதர்களைவிட மிகவும் நேர்த்தியான வரிசையில் ஒவ்வொரு எறும்புகளும் ஒவ்வொரு ரயில் பெட்டிகள் மாதிரி அழகான வரிசையில் சென்று கொண்டிருந்தது..

 

இரண்டு டைல்ஸ் பதிந்திருக்கும் இடத்தின் நடுவே உள்ள மெல்லிய கோடுதான் ,இவர்களுக்கான தண்டவாளம். கூட்ஸ் ரயில் போல மிகவும் நீண்டமான இரயில் அது... 

 

தீடிரென ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே இரயில்கள் வந்தது. மிகப்பெரிய ஆபத்து இருக்குமென்று நினைத்தேன். இரண்டும் மோதிக் கொண்டது நல்லவேளை யாருக்கும் எந்த சேதமும் இல்லை.. 

 

ஆனால் மோதிக் கொள்ளும் பொழுது இரண்டு இரயில்களும் , எனக்கு கேட்காதவாறு ஏதோ பேசியது.. 

 

முன்பு, யாரோ கூரிய கதை ஞாபகத்திற்கு வந்ததும், உடனே தண்டவாளத்தில் என் கைகளை வைத்து இரண்டு பெட்டிகளுக்கும்(எறும்புகளுக்கும்) நடுவே உள்ள தடையங்களை உமிழ் நீரால் அழித்தேன்.கதையில் கூறியது போல சற்று நேரம் வழி தெரியாமல் வட்டமிட்டு கொண்டிருந்த பெட்டிகள் மீண்டும் வேகமாக முன்பு சென்ற பெட்டிகளோடு இனைந்தது.. 

 

அந்த கூட்ஸ் இரயிலுக்கு ஓட்டுநர் இருந்தார். ஆனால் கடைசி பெட்டியில் டீட்டியார் இல்லாததால் நான் பெயர் கொடுத்துவிட்டு இரயிலுக்கு காவலாலியாக பின்னாடியே சென்றேன்.. 

 

போகப்.. போக இரயிலின் வேகம் அதிகரித்தது.. 

ஒவ்வொரு பெட்டிகளிலும் வித்தியாசமான பொருட்கள் இருந்தது. 

முதலில் இருந்த பெட்டிகள் காலியாகவே இருந்தது. அடுத்து அடுத்து இருந்த பெட்டிகளில் நெல்மணிகள், தேங்காய் சில்லின் உதிரிப் பூக்கள், அரிசி துண்டுகள்... என பலவிதமான பொருட்கள் சென்று கொண்டிருந்தது...

தீடிரென இரயிலின் அவசர உதவிக் கம்பியை யாரோ பிடித்து இழுத்ததால் வண்டி நின்றது. என்னவென்று தெரியாமல் குழப்பத்தோடு இருந்தேன்... 

 

குடும்பப் பிரச்சினையா, காதல் பிரச்சனையா அல்லது வேரு எதுவும் பிரச்சினையா என்று தெரியவில்லை. தண்டவாளத்தில் ஈ என்பர் இறந்து கிடந்தார்... 

 

அது தற்கொலையா அல்லது யாரும் அடித்துக் கொன்ற கொலையா என்று தெரியவில்லை... 

அனாதையாக கிடந்த அவரை, இரயிலில் காலியாக இருந்த பெட்டிகள் சுமந்து சென்றது... 

 

பெட்டிகளை விட ஈ- அதிக இடை என்பதால் அவரை இழுத்துச் செல்வதற்கு சிரமமாக இருந்ததே தவிர வண்டி தடம் புரளவில்லை... 

நீண்ட தூரப் பயணத்திற்கு பிறகு வண்டி வீட்டின் எதிரே உள்ள வேப்ப மரத்தின் அடியில் உள்ள சிறிய புற்றுக்குள் (ஸ்டேஷனுக்குள்) நுழைந்தது..

 

வெளி ஆட்களுக்கு உள்ளே அனுமதியில்லை.. மீறுவோர் தண்டிக்கப் படுவார்கள் என்று எழுதப்படாத வசனம் மரப் பட்டையில் எழுதியிருந்தது போல் தோன்றியது.. 

ஆனால், சிறிய வெளிச்சம் மட்டும் புற்றுக்குள் சென்றது. 

 

கீழே உட்கார்ந்து கொண்டு,அதனுள் ஒற்றைக் கண்ணால் பார்த்தேன். அங்கு பெட்டிகள் கொண்டு வந்த சரக்குகளை சகஊழியர்கள்( எறும்புகள்) இரக்கிக் கொண்டிருந்தனர்... 

 

2-ஈக்கள், 21-அரிசி மணிகள்,16-தேங்காய் சில்லுகள், 18-நெல் மணிகள், 3-கொசுக்கள் எனப் பலவகை இருந்தது, இதெல்லாம் முந்தைய இரயிலில் வந்திருக்குமென்று நினைக்கிறேன்.... 

 

பின் எழுந்து நின்ற போது அடர்ந்த வேப்பமரக் கிளைகளில் இருந்து நீர் துளிகள் குளிர் காற்று வீசியதால் சிறிய மழை போல் மண்ணில் விழுந்தது.. அந்த ஈரடுச்ச மண்ணில் புழுக்களும் ஊரிக் கொண்டிருந்தது.... 

 

 

மரத்தின் விழும்பில் பெரிய பல்லி ஒன்று என்னை முறைத்தபடியே பார்த்தது.. கூடவே அருகில் பச்சை பாசம் பிடித்த கூழாங்கற்கள் மீது நத்தை என்னைக் கண்டவுடன் பயந்து அதனுடைய கூடிற்குள்ளே மீண்டும் சென்றது... 

 

உடலில் சுற்றியிருந்த போர்வையை அகற்றி நின்ற போது, சிறு..சிறு..மழை நீர் துளிகள் என் மீது விழுந்தது. அந்த குளிர் காற்றின் மயக்கத்தில் எறும்பு வீட்டின் முன்பு என்னை அறியாமல் இயற்கையின் பனிக்கட்டியாக தலைவலி மறந்து உரைந்து நின்றேன்.... 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.