(Reading time: 7 - 14 minutes)

சரி செல்வி உனக்கு இதெல்லாம் யார் சொன்னது என சுந்தரி கேட்க கடைப்பையன் மேனேஜரிடம் பேச்சு கொடுத்தானாம் அவர் சொன்னதுதான்  அதுமட்டுமில்லாமல் அங்கு வேலை செய்பவர்களுக்கும் இவன்தானே டீ கொடுக்கிறான் அப்படியே விசாரித்து தெரிந்து கொண்டானாம்..

 

சைதன்யா மனதிற்குள் பரவாயில்லையே தந்தையின் தொழிலில் காலாட்டிக்கொண்டு இல்லாமல் தானாக ஒரு தொழிலைத் தொடங்கி நடத்த முன்வந்திருக்கிறானே அதுவும் அவனுக்கு கொஞ்சமும் முன்அனுபவமில்லாத தொழிலில் அவனை பார்ப்பதற்கு முன்பாகவே அவன் மீது ஒரு நன்மதிப்பை கூட்டியது..

 

அது சரி அவன் பெயர் என்னடி என சுந்தரி கேட்க  "மிதுர்வன் சக்ரவர்த்தி"  என்றவள் அவருக்கு ஏற்றதுபோல பொருத்தமான நல்லபெயர் தான் என ரசனையுடன் சொல்ல மற்ற இருபெண்களும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு அவளை திரும்பிபார்க்கவும் ஒரு அசட்டுசிரிப்புடன் 1வாரம் முன்பு வேலை எப்படி நடக்கிறது எனபார்க்க இங்கு வந்திருந்தார் நான் கீதா எல்லாரும் போய்பார்த்தோம் செம்ம ஹண்ட்ஸம்மாய் இருந்தாரடி..

 

அப்போது நாங்கள் எங்கே போயிருந்தோம் என சுந்தரி சீரியஸாக யோசித்தபோது எம்பிராய்டரி வேலைசெய்ய பொருட்கள் வாங்க போயிருந்தீர்கள் என செல்வி நியாபகபடுத்தினாள்.. என்னவோ சைதன்யாவுக்கும் அவனை பார்க்காதது ஏமாற்றமாக இருந்தது.. எப்படியும் இங்கே வந்துதானே ஆக வேண்டும் அப்போது பார்த்துகொள்ளலாம் என சுந்தரியை சமாதானப்படுத்தினாள்..

 

மதியம் சாப்பாடு முடிந்து நேரமான பிறகே சந்தோஷ் பொட்டிக் வந்தான்.. சோர்வாக இருந்தபோதும் அவனது முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது என்னவாக இருக்கும் என மூவரும் யோசித்துக் கொண்டிருக்கும்போதே சந்தோஷ் அவர்கள் இருவருக்கும் ஓய்வுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு கூப்பிட்டான் உள்ளே சென்றபோது வா தன்யா உட்கார் நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் நமக்கு ஒரு மிகப்பெரிய ஆர்டர்  கிடைத்திருக்கிறது..

 

சக்கரவர்த்தி குரூப் ஆஃப் கம்பெனிஸ் இருக்கிறது இல்லையா அவர்களின் புதிய கம்பெனி நம்முடைய கட்டிடத்தின் மேல் தளத்தில் இயங்கபோகிறது..

அவர்கள் அதனை விளம்பரப்படுத்த ஒரு அறிமுகவிழா நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம் பெரியபெரிய ஆட்களை அழைத்து சிறப்பாக செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.. அந்த விழாவை எடுத்து நடத்தும் பொறுப்பை நமக்கு கொடுத்திருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த விழாவில் கலந்துகொள்ளும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நம்முடைய பொட்டிக்கில்  டிரஸ்சை டிசைன் செய்து தைத்துத்தர சொல்லியிருக்கிறார்கள் ..

 

ஆனால் சந்தோஷ் நாம் எப்படி இதனை என தயக்கமாக ஆரம்பித்த சைதன்யாவை பார்த்து வருத்தத்துடன் ஏன் தனு நம்மால் இதை செய்ய முடியாது என நினைக்கிறாயா என கேட்டான்.. அப்படியில்லை சந்தோஷ் இது பெரியபொறுப்பு இதுவரை நாம் இப்படி செய்ததில்லை அவர்கள் மிகப்பெரிய கம்பெனி அவர்களுக்கு நம்மால் செய்ய இயலுமா நம்மிடம் ஆட்களும் குறைவாக இருக்கிறார்கள் இடவசதியும் இல்லையே என கவலையாக கேட்டாள்..

 

ஆனால் அதற்கு எதிராக அவன் முகம் பிரகாசித்தது அதுதான் தனு எனக்கும் கவலையாக இருந்தது ஆனால் அவர்களின் தளத்திலேயே டிசைனிங் செக்ஸனில் நமக்கு தனியாக ஒரு அறையில் இடவசதி செய்து தருவதாக சொல்கிறார்கள்.. ஆடை வடிவமைப்பில் உதவிசெய்ய ஆட்களும் அவர்கள் ஆட்களே இருக்கிறார்களாம்..

 

சைதன்யா சந்தேகத்துடன் எவ்வளவோ பெரிய கம்பெனிகள் இருந்தும் நமக்கு இவ்வளவு சலுகைகளுடன் எதற்கு வாய்ப்பு தருகிறார்கள் என கேட்க எனக்கும் இதே சந்தேகம்தான் தனு அதை அவர்களிடமே கேட்டேன் நாம் இரண்டு மாதத்திற்கு முன்பு DIG வீட்டுக் கல்யாணத்திற்கு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு வடிவமைத்த ஆடைகள் மிகவும் பிடித்ததாம் அதோடு அந்த கல்யாண வேலைகளையும் நாம்தானே பொறுப்பெடுத்து செய்தோம்..

 

அந்த கல்யாண பெண்ணுடைய தோழி மிஸ்டர் மிதுர்வனுடைய தங்கையாம் அவள்தான் நமக்காக பேசி இந்த ஆர்டர் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறாள்.. டிஐஜி வீட்டிலும் நமக்காக சிபாரிசு செய்தார்களாம்..எல்லாவற்றையும் கேட்க சைதன்யா வுக்கு மலைப்பாக இருந்தது..

 

டிஐஜி வீட்டு கல்யாணத்தில் பெண்ணின் தோழி என ஒருவரை அறிமுகப்படுத்திய ஞாபகம் வந்தது அவளாகதான் இருக்கும் முதலில் அவளின் பார்வை கூர்மையாக தன்னை அளவிடுவதாக இருந்தது பிறகு சினேகமாக சிரித்து எல்லாம் சிறப்பாக இருந்ததாக பாராட்டினாள்.. சிறிதுநேரம் பேசிவிட்டு பிறகு விடைபெற்றுச் சென்றுவிட்டாள..

 

அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது சந்தோஷ் தன் பதிலுக்காக காத்திருப்பது தெரிந்தது.. ஒரு புன்னகையுடன் ஓகே சந்தோஷ் எப்பொழுது வேலை தொடங்க வேண்டுமென சொல்லு எனவும் அவன் பாராட்டுதலாக முறுவலித்தான்.. எனக்கு தெரியும் தனு நீ இப்படித்தான் சொல்வாயென அதனால்தான் நான் இதை ஒத்துக் கொண்டு வந்ததே அதோடு அவர்களது அருகிலேயே இருப்பது தான் நமக்கான கூடுதல் தகுதி என அவன் சொல்ல ஆமாமென தானும் முறுவலித்தாள்..

 

பிறகு வேகமாக திட்டமிடத் தொடங்கினாள் நானும் சுந்தரியும் அங்கிருந்து டிசைன் செய்வது தொடர்பான வேலைகளை செய்கிறோம் இங்கே செல்வி பார்க்கட்டும் அப்போதுதான் இங்கு உள்ள கஷ்டமர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம்.. ஆமாம் தன்யா நானும் அதுதான் நினைத்தேன் அவர்களுக்கு டிசைன் செய்வது தொடர்பான வேலைகளை அங்கு முடித்துவிட்டு அதில் துணியைதைத்து ஆரிஒர்க், ஜமிக்கி,  எம்ப்ராய்டரி வேளைகளை நமது இடத்திலேயே முடித்துவிடலாம்.. சந்தோஷ் விழாதொடர்பான வேலைகளை நீ பார்த்துக்கொள் வெளிவேலைகளை சரவணனிடம் கொடுத்துவிடு..

 

எல்லாவற்றையும் பேசிமுடித்து வெளியில் வந்தபோது சுந்தரியும் செல்வியும் என்ன என்னவென ஆர்வமாக விசாரித்தார்கள் அவர்களிடமும் எல்லாம் சொல்ல அவர்களுக்கும்  முதலில் பிரமிப்பு தான்.. அக்கா இது உனது தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த வேலை தான் இதை வெற்றிகரமாக செய்து முடித்தால் நல்லவாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்.. ஆமென தலையசைத்த சைதன்யா முதலில் யார் யாருக்கு என்ன மாதிரியான உடை விழாவில் நமது பங்களிப்பு எந்தளவு என தெரிந்து கொள்ள வேண்டும்.. நாளை காலை அவர்கள் மேனேஜரை சென்று பார்ப்போம் அதன் பிறகு என்ன செய்வது எவ்வாறு செய்வது என முடிவு எடுப்போம்..

 

6 மணி ஆனதும் எல்லோரும் வீட்டிற்கு புறப்பட்டார்கள் அதன்பிறகு பொட்டிக்கை சந்தோஷ்  தான் கவனித்துக் கொள்வான்.. செல்வி வேறு வேலை காரணமாக வெளியே செல்வதால் பஸ்சில் சென்று விட்டாள்..  எனவே சுந்தரி சைதன்யாவுடன்  ஸ்கூட்டியில் வருகிறேன் எனசொல்ல சுந்தரியை அவள் வீடு செல்லும் பாதையில் இறக்கிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றாள்..

 

இவளுக்கு முன்னமே இவள் தந்தை கதிரேசன் வேலை முடித்து வந்திருந்தார்.. அவர் வண்டியை வெளியில் பார்த்தவுடன் வெளியிலிருந்து வரும்போதே அப்பா அப்பா என கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தாள்..

 

அடியேய் ஏன்டி இப்படி கத்துற எல்லோரும் வீட்டிற்குள் வரும்போது அம்மாவை தான் தேடுவார்கள் நீ என்னன்னா அப்பாவை தேடுற எனவும் அம்மா கோச்சுக்காத மா காலையிலேயே நான் எந்திரிக்கும் முன்னால அப்பா வேலைக்கு போயிட்டாங்க இன்னைக்கு பாக்கலயே அதோட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டேன்..

 

அவர்கள் உரையாடலை காதில் வாங்கியவாறே வந்த கதிரேசன் என்னமா சந்தோஷமான விஷயம் உன் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல போகிறாயா என கேட்க என்னப்பா நீங்கள் நான் எவ்வளவு சந்தோசமாக வந்திருக்கிறேன் கல்யாணம் அது இதென மூடை மாற்றுகிறீர்கள்.. நான்தான் சொல்லிவிட்டேனே இன்னும் கொஞ்சநாட்களுக்கு நம் மூவருக்கும் இடையில் யாரும் கிடையாது இன்னும் கொஞ்சநாள் உங்களுடன் ஜாலியாக இருந்துவிட்டு தான் திருமணம் செய்வேன் ஏன் அப்பா நான் உங்களுக்கு பாரமாக இருக்கிறேனா என முகம் வாடினாள்..

 

அதனை பொறுக்காது என்னம்மா இது பேச்சு பிள்ளைகள் எப்போதும் பெற்றவர்களுக்கு பாரமில்லை அதுவும் நீ எங்கள் உயிர் உன் விருப்பத்தை மீறி எதுவும் செய்வோமா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என சொன்னவர் அவள் முகம் கொஞ்சம் தெளிந்ததும் என்னம்மா விஷயம் எனக்கேட்க மகிழ்ச்சியுடன் இன்று நடந்ததை பகிர்ந்து கொண்டாள்..

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கதிரேசன் இது மிகப்பெரிய பொறுப்பு அம்மா உன்தகுதிக்கு தகுந்த வேலைதான் அதை நீயும் திறம்பட செய்வாய் நீ எங்களால் எல்லா வாய்ப்புகளையும் தட்டி கழித்தபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன்..

இப்பொழுது எங்கள் கூடவே இருந்துகொண்டு உன் திறமைக்கு தகுந்த வேலைசெய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது மா என சொல்லவும் அவள் புன்னகையுடன் அவர் மடியில் படுத்துக்கொண்டாள் அவர் அவள் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே அவர் ஆபீஸில் நடந்ததை சொல்ல தொடங்கினார்..

 

இதுவும் அவர்கள் வீட்டில் எப்போதும் நடப்பது தான் காலையிலிருந்து தங்கள் வேலையிடங்களில் நடந்ததை அப்படியே பரிமாறிக்கொள்வார்கள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.