Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)
Pin It

ஒரு வாரம்வரை பொட்டிக் செல்ல அருணா அனுமதிக்கவில்லை ஒரு வழியாக கெஞ்சிக்கூத்தாடி அன்றுதான் பொட்டிக் வந்திருந்தாள்.. 

 

அங்கேயும் சுந்தரி செல்வி சந்தோஷ் என எல்லோரும் வந்து நலம் விசாரிக்க விவரம் சொன்னவள் சந்தோஷிடம் மட்டும் கொஞ்சம் திட்டு வாங்கிக்கொண்டாள்..

 

அன்று மாலை கடைக்கு தேவையான மெட்டீரியல் வாங்கவேண்டும் என நேரத்தோடு வெளியே வந்தபோது யாரோ தன்னை பார்ப்பதுபோல தோன்றியது திரும்பிப் பார்த்தபோது யாரும் இல்லை "பிரம்மை" என தலையை உலுக்கிக் கொண்டு லிப்ட்டை நோக்கி நடந்தாள்.. 

 

லிப்ட்டுக்கு காத்திருந்து வந்தவுடன் ஏறினாள் உள்ளே அவளுடன் இன்னொருவன் மட்டுமே இருந்தான்.. 

 

தன்னில் குறுகுறுப்பை உணர்ந்து திரும்பி பார்த்தபோது அவன் அவளைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தான்..

 

அவனின் ஆராய்தலான பார்வையில் தானும் அவனை ஆராய்ந்தாள்..  

 

நல்ல உயரம் 6 அடியில் அழகனாக இருந்தான் சைதன்யாவும் உயரம் தான் இருப்பினும் அவனை அண்ணாந்து தான் பார்க்க வேண்டியிருந்தது.. 

 

மாநிறம் கூர்நாசி அழகான முகவெட்டு கை கால்கள் அவனது உயரத்திற்கேற்ப நீண்டிருந்தது அலை அலையான சிகை கம்பீரத் தோற்றம் கூர்மையான கண்கள் எதிராளியை எளிதாக எடைப்போட்டுவிடும்.. 

 

அவனின் கண்களை சந்தித்தபோது துளைத்தெடுத்த அவனது பார்வை மேலிருந்து கீழ் வரை அவளை ஆராய்ந்தது.. 

 

அந்தபார்வை அவளை பதற்றம் கொள்ள செய்தது.. காதல் பார்வை காமப் பார்வை இல்லாமல் ஆராய்தலோடுக்கூடிய துளைத்தெடுக்கும் பார்வை.. அவனது பார்வையில் மூச்சுவிடக்கூட முடியாதவாறு மூச்சு முட்டியது.. 

 

லிப்ட்டு நின்றவுடன் விட்டால் போதுமென விழுந்தடித்து வெளியே ஓடிவந்து ஸ்கூட்டியில் ஏறிய உடன்தான் அவளுக்கு சீரான மூச்சு வந்தது.. 

 

அது யாராக இருக்கும் என யோசனையுடன் சென்றவள் மெட்டீரியல் வாங்குவது அது சம்பந்தமான வேலை என அவள் அப்படியே அதனை மறந்துவிட்டாள்..  

 

இடையில் இருமுறை பிஏ கருணாகரனை சந்தித்து விழா ஏற்பாடுகளை பற்றியும் அவளது டிசைன்களில் குழந்தைகளுக்கு எதுதேர்வு செய்திருக்கிறார்கள் என கேட்டாள்.. 

 

பைல் எம்டி சாரிடம் இருக்கிறது மேடம் அவர் உங்களை சந்திக்கும் போது அதுபற்றி சொல்வார் என்றான்.. 

 

உங்கள் எம்டி எப்பொழுது வருவார் என கேட்க அவர் வந்து 10 நாட்களாகிறது மேடம் என புது தகவலை சொன்னான்.. 

 

ஒருவாரம் முன்னமே உங்களை சந்திப்பது பற்றி கேட்டார் ஆனால் அப்போது நீங்கள் இல்லை உங்களுக்கு உடம்பு சரியில்லை வரவில்லை என சொன்னார்கள்..

 

அதற்குள் அவருக்கும் கம்பெனி தொடர்பான வேலைகள் வந்துவிட்டது நாளைதான் வருகிறார் அதனால் நாளை காலை 10 மணிக்கு உங்களுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறார் நீங்கள் வந்து விடுங்கள் என கூறினான்..

 

பெரியவர்களுக்கான டிசைன்கள் அடங்கிய பைலை கொண்டு வரவா என கேட்டபோது இல்லை மேடம் அவர்கள் உங்களை நேரிலேயே வந்து அளவு எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள் அப்போதே அவர்கள் டிசைனை தேர்வு செய்கிறார்களாம்.. அவளுக்கும் அதுதான் சரியென பட்டது..

 

காலை எப்பொழுதும் போல தாமதமாக கிளம்பி விட்டு அவசர அவசரமாக பொட்டிக்கிற்குள் நுழைந்தாள்.. 

 

சுந்தரியிடம் ரெடியான ஆடைகளை வாங்கவருகிற கஸ்டமர்களை பற்றிகூறி அதை கொடுத்துவிடுமாறு எடுத்து வைத்தாள்.. 

 

நான் மேல்தளத்தில் எம்டியிடம் பேச செல்கிறேன் நீ இங்கே பார்த்துக்கொள்.. 

 

சரி அக்கா என கூறி ஆர்டர்களை சரி பார்த்தாள்.. 

 

மூன்றாவது தளத்திற்கு வந்து ரஞ்சனியிடம் எம்டியின் அப்பாயின்ட்மென்ட் பற்றி சொல்லிவிட்டு அவளிடம் கதையளந்து கொண்டிருந்தாள் அடிக்கடி அங்கே வருவதால் அவள் நல்ல தோழியாக மாறியிருந்தாள்.. 

 

எம்டியிடம் இருந்து அழைப்பு வரவே  சார் கூப்பிடுகிறார் தன்யா நீ போ என்றாள்.. 

 

அவளிடம் தலையசைத்துவிட்டு கதவைத் தட்டி "மே ஐ கம் இன்" என்க, 

 

"எஸ் கமீன்" என ஒலித்த கம்பீரமான குரலில் அவளது உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.. 

 

உள்ளே சென்று அவனைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது அன்று லிப்ட்டில் பார்த்த அவன் அல்லவா இது இன்றும் அதே கம்பீரத்துடன் இருக்கையில் அமர்ந்திருந்தான்.. 

 

அவள் தன் முகத்தை கடினப்பட்டு சமன்படுத்திக் கொண்டு "குட் மார்னிங் சார்".,  என் பெயர் சைதன்யா என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.. 

 

அவனுக்கு அப்படியெல்லாம் எதுவும் தோன்றவில்லை போலும் "ஓ எஸ்" என அமர சொல்லிவிட்டு உங்கள் பைலை பார்த்தேன் சைதன்யா டிசைன்கள் எல்லாம் புதிதாகவும் நன்றாகவும் இருந்தது பாராட்டுக்கள் நீங்கள் இவ்வளவு தூரம் செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.. 

 

அவனின் பாராட்டுதலில் இவளுக்கு படபடப்பாக இருந்தது.. 

 

நான் உங்களை இன்று வர சொன்னதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது சைதன்யா.. 

 

அவனுடைய கர்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் ஷாப் தயாரிக்கும் ஆடையை டிசைன் செய்ய இங்கே இடம் ஒதுக்கி இருந்தார்கள் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறை போலவே இன்னும் மூன்று அறை ஒதுக்கி இருந்தார்கள்.. எப்படியும் இதை டிசைன் செய்து சாம்பிள் ஆடைகளை பார்வைக்கு வைத்து விளம்பரம் செய்து பிறகுதான் தயாரிப்பு பணியில் ஈடுபடுவார்கள்..

 

அறிமுகவிழாவிற்கு தேவையான ஆடைகளை மட்டும் இங்கே தயார் செய்ய திட்டமிட்டிருந்தார்கள்..

 

அதற்காக அவனுடைய நண்பனின் டெக்ஸ்டைல் ஷாப்பில் இருந்து இரண்டு டிசைனர்களை  வரவைத்திருந்தான்..  

 

அவர்களுக்கும் இவனது கார்மெண்ட்ஸிலிருந்து தான் ஆடைகளை சப்ளை செய்வதாக இருந்தது..

 

முதலில் சிறுவர்களுக்கான ஆடையை தயாரிக்க  திட்டமிட்டிருந்தார்கள்.. 

 

அவர்கள் வீட்டினருக்கு இந்த விழா தொடர்பான ஆடைகளை ரெடி செய்து கொடுத்துவிட்டு அவர்களது டிசைனர்களுடன் இணைந்து அவளும் சிறுவர்களுக்கான ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்க விருப்பமா என கேட்டான்.. 

 

அவளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவே தோன்றியது ஏனெனில் கடைகளில் ஆடைகளைப் பார்க்கும்போது தன்னுடைய டிசைன்களும் இதுபோல எல்லோரும் பார்க்கும் வண்ணம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறாள்.. 

இருப்பினும் யோசித்து சொல்வதாக கூறிவிட்டு விடை பெற்று வந்தாள்..

 

அடுத்த 2நாட்களில் நிரஞ்சனா சைதன்யாவை தேடி வந்தாள்.. 

Pin It

Add comment

Comments  
# RE: காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-5Saaru 2020-08-04 17:05
Epi kutti ah iruke paa
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-5Surya 2020-08-04 23:33
மிக்க நன்றி sis.. chillzee la msg box ethuvum கிடையாதா sis..
Reply | Reply with quote | Quote
# RE: காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-5Surya 2020-08-04 23:33
மிக்க நன்றி sis
Reply | Reply with quote | Quote
# RE: காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-5madhumathi9 2020-08-04 13:24
:clap: nice epi.eagerly waiting 4 next epi :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-5Surya 2020-08-04 23:36
மிக்க நன்றி sis..
Reply | Reply with quote | Quote
# RE: காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-5Srivi 2020-08-04 11:29
Good ..Eppideyo hero heroine meet panniyachu .. romba simple a mudinchiruche :-p
Reply | Reply with quote | Quote
# RE: காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-5Surya 2020-08-04 23:38
மிக்க நன்றி sis.. simple.a இருக்குனு 10 எபிக்கு அப்பறம் தான் நான் பீல் பண்ணேன் sis கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..
Reply | Reply with quote | Quote
# RE: காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-5ரவை .k 2020-08-04 07:21
Dear Surya! Good morning! விறுவிறுப்பா போகுது! கங்கிராட்ஸ்!
Reply | Reply with quote | Quote
# RE: காத்திருந்தேனடி உனது காதலுக்காக !!-5Surya 2020-08-04 23:39
மிக்க நன்றி sir..
Reply | Reply with quote | Quote

Your Articles

You have not shared any articles. To start sharing, please register by visiting Flexi Registration

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top