(Reading time: 3 - 6 minutes)

  என்றும் என் நினைவில் நீயடி - 3

                                         - NILA RAM

அன்பு என்னும் விதையை

                என்னுள் விதைத்தவள் நீயடி

பாசம் என்னும் உணர்வை

                எனக்கு கொடுத்தவளும் நீயடி

வெற்றியின் பாதையை

              எனக்கு காட்டியவளும் நீயடி

இப்பொழுது தோல்வியின் வலியை

                  எனக்கு கொடுத்தவளும் நீயடி

எல்லாமுமாய் இருந்த  வாழ்வில்  

                         என்றும் என் நினைவில் நீயடி  .

தன் அறையில் தளர்ந்து படுத்திருந்தவனின் நினைவுகள் எல்லாம் இன்று நடந்த மீட்டிங் பற்றியே இருந்தது . கனவிலும் நினைக்கவில்லை அவளை திரும்பவும் பார்ப்பான் என்று . அத்தனை வருடங்கள் ஆயிற்று. மூன்று வருடங்கள் முன்பு எப்படி பார்த்தானோ அதே போல் தன் இப்பொழுதும் . சிறு வித்தியாசம் அப்போது அவனை கண்டு ஓடியவள் இன்று அவனின் நிறுவனத்திற்கே அஸ்ஸிட் செய்யும் அளவிற்கு பெரிய பொறுப்பில் இருக்கிறாள் . இதை அம்மாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்தவன் எழுந்து குளியலை முடித்து விட்டு மாடியிலிருந்து இறங்கி வந்தான் . துள்ளல் நடையுடன் , அலை அலையை அசைந்தாடும் முடி கற்றைகள் , அடக்கமான உடல் அமைப்பை கொண்டிருந்தாலும் கொஞ்சம் கலரில் மட்டும் கொஞ்சம் வெள்ளையாய் இருந்தவனை கண் இமைக்காமல் பார்த்திருந்தார் அவன் அன்னை விஜயலக்ஷ்மி . தன் அன்னை தன்னை கவனிப்பதை கண்டவன் அங்கு சென்று தன் அன்னையின் மடியில் படுத்தான் .

''என்ன டா அதிசயமா இருக்கு . இன்னைக்கு இந்த அம்மா உனக்கு கண்ணனுக்கு தெரிஞ்சுருக்கானே என்ன விஷயம்?' .

''அம்மா என்ன மா நீ , கொஞ்சம் வேலை மா ,புது ப்ராஜெக்ட் வேற , அது இல்லாம உனக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்ல போறேன்'' என்று அன்னையின் கன்னத்தை கிள்ளினான் .

''என்ன டா செல்லம் கொஞ்சலாம் கொஞ்சம் ஓவரா இருக்கே என்ன விஷயம் , வாட் மேட்டர் சொல்லு ''

இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டே விஜய லக்ஷ்மியின் பாதி மற்றும் அவரின் உள்ளம் கவர்ந்த கணவன் வரவே அவருக்கு டீ எடுத்து வர உள்ளே சென்றார் அவர்.

(வாங்க வாங்க லட்சுமி ஆண்ட்டி டீ எடுத்துட்டு வரதுக்குள்ள ஒரு இன்ட்ரோ குடுத்தறேன் இவங்கள பத்தி)

   ஆதித்யன் , பிரபல AN குரூப் ஆப் கம்பனிஸ் நிறுவனத்தின் MD . தானாக முயன்று தன் சம்பிராஜ்யத்தை உருவாக்கி கொண்டு இருப்பவன் . அவனின் தந்தை நாராயணன் , ஆதி குரூப் ஆப் கம்பனிஸ் MD . தன் தந்தையின் வழிகாட்டுதலில் சிறிய கடையாக கொண்ட அந்த உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் இன்று உலக அளவில் வர்த்தகம் செய்யும் அளவிற்கு உயர்ந்து உள்ளது எனில் அதற்க்கு முக்கிய கரணம் நாராயணின் அயராது உழைப்பே , ஆதித்யன் பிறக்கும் போதே நல்ல நிலையில் அவர்களின் குடும்பம் இருந்தாலும் அவனுக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்பதற்க்காக அதிகம் செல்லம் கொடுக்காமல் அதே சமயம் அவன் எதற்கும் ஏங்காமலும் பார்த்து கொண்டார் . அதாவது எல்லா அப்பாக்களை போலவே ஆண்  பிள்ளைகளுக்கு ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர். அம்மா விஜய லட்சுமி என்றும் சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் அன்பை மட்டுமே குடுக்கும் கனிவான மனம் கொண்ட உயிர் . தன் மகனிடம் ஒரு தோழியை போல் எப்பொழுதும் பழகுபவர் . அதனாலயே ஆதி துவண்ட போதெல்லாம் மீண்டு எழ உதவினார் அவர் . அவனிடம் சரிக்கு சரியாய் வாய் பேசுபவர் கணவனின் சொல் பேச்சு தடுத்தவர் இரண்டு விஷயங்களை தவிர ( அது சஸ்பென்ஸ் அப்பறம் சொல்லறேன் ). டீ எடுத்து கொண்டு வந்த விஜய லட்சுமி

''என்னடா ஏதோ சந்தோஷமான விஷயம் சொல்லறேன்னு சொன்ன''

''அம்மா அது உனக்கு சந்தோஷமான விஷயம் தன் ஆனா உன் புருஷன்க்கு அது சந்தோஷமான விசயமானு தெரியல'' .

''டேய் அடி வாங்குவ , முதல விஷயத்தை சொல்லு''

''அம்மா நா நித்துவ பார்த்தேன்'' என்றான்

அவன் சொன்னதை கேட்ட லட்சுமி'' டேய் ஆதி நிஜமாத்தா சொல்லறீயா பொய் சொல்லாத டா , என் பொண்ண பாத்தியா? எப்படி இருக்க டா ?நல்லா இருக்காளா ?அவகிட்ட பேசுனியா?'' என்று தன் கேள்விகளை அடிக்கி கொண்டு இருந்தார் .

ஆதியோ தன் தந்தையே பார்த்து கொண்டிருந்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.